வீடும் அதன் விதிமுறைகளும் ! வீடும் அதன் விதிமுறைகளும் ! - ETbuild

வீடும் அதன் விதிமுறைகளும் !

வீட்டைக் கட்டுவது வாழ்க்கை யில் ஒவ்வொரு வருக்கும் மிகப் பெரிய கனவு; அதுவும் நாமே நிலம் வாங்கித் தனியாக வீடு கட்டுவது என்பது அதை விட மிகப் பெரிய விஷயம்.
வீட்டுக் கான பத்திரம் முடிப்பதில் இருந்து வீடு கட்டுவத ற்கான ப்ளான் இடுவதில் இருந்து பல விஷயங்கள் இருக்கின்றன. 
அவற்றில் முக்கி யமானது உள்ளாட்சி அமைப்பு களில் பின்பற்ற ப்படும் வீடு கட்டும் விதிமு றைகள். 

விதிமுறைகள்  

நாம் வாங்கியிருக்கும் வீட்டு மனை முழுவதும் வீடு கட்ட பொதுவாக அனுமதி கிடைப் பதில்லை. 

உதாரண மாக 1,200 சதுர அடி மனை வாங்கி இருந்தோம் என்றால், அதில் முழுவதும் வீடு கட்ட முடியாது. 

நிலத்தைச் சுற்றிலும் நான்கு பக்கங் களிலும் இடம் விட்டு நடுவில் தான் வீடு கட்ட வேண்டும்.

எவ்வளவு இடம் விட வேண்டும் என்பது நிலம் எந்த வரைய றைக்கு உட்பட்டது என்பதைப் பொறுத்து மாறுபடும். 

அதாவது மாநகராட்சிப் பகுதிகள் என்றால் ஒரு அளவு, நகராட்சிப் பகுதி என்றால் ஒரு அளவு எனத் தனித் தனி வரை முறைகள் உள்ளன. 

மனையில் வீட்டின் பின்பக்கம் எவ்வளவு இடம் விட வேண்டும் என்றும் விதிமுறை இருக்கிறது. அது மனையின் அளவைப் பொறுத்தது. 

உதாரண த்துக்கு மனையின் நீளம் 50 அடிக்கும் அதற்கும் குறைவாவோ இருந்தால், பின்பக்கம் 5 அடி விட வேண்டும். 

50 - 100 அடி என்றால் 10 அடியும், 100-150 அடி என்றால் 15 அடியும் விட வேண்டும். அதே போல வீட்டுக்கு இரு புறங்களி லும் 5 அடி விட வேண்டும். 

வாகன ங்கள் நிறுத்தும் வசதிக் காகவும் காற்றோட் டமாக இருப்பத ற்காகவும், மரம் செடி வளர்க்க வேண்டும் என்பதற் காகவும் தான் இந்த வரை முறைகள். 

மாடியில் வீடு கட்ட வேண்டும் என்றால், அதற்கு இன்னொரு விதிமுறை இருக்கிறது. 
அதை எஃப்.எஸ்.ஐ. (ஃப்ளோர் ஸ்பேஸ் இண்டெக்ஸ்) என்று சொல் வார்கள். இந்த விதி முறையின் படிதான் மாடியில் கட்டிடம் கட்ட முடியும். 

பிளான் முக்கியம் 

வீடு கட்டும் அளவு முடிவான பிறகு வீட்டுக்கான ப்ளான் தயாரிக்க வேண்டும். அந்த ப்ளானுக்கு சம்பந்த ப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் அனுமதி பெற வேண்டும். 

உள்ளாட்சி அமைப்பில் அனுமதி வாங்கும் முன்பு அரசு அங்கீகாரம் பெற்ற பொறியா ளரிடம் அந்த ப்ளானில் கையெழுத்து வாங்க வேண்டும். 

அதாவது அந்த ப்ளானை அரசு அங்கீகாரம் பெற்ற பொறியாளர் அங்கீக ரிக்க வேண்டும். 

பின்னர் அதை மூன்று நகல்கள் எடுத்து விண்ணப் பத்தோடு இணைத்து உள்ளாட்சி அமைப்பில் சம ர்ப்பிக்க வேண்டும். 

வீட்டில் மழை நீர் சேமிப் புக்கான வசதி ப்ளானில் இருக்க வேண்டும். அது அனுமதி வாங்கும் போது பரிசோதிக் கப்படும். 
இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அனுமதி வர ஒரு மாத காலம் வரை ஆகக் கூடும். 

ப்ளான் வரத் தாமத மாகிறது என நினைத்து அதற்கு முன்பே கட்டுமானப் பணிகளைத் தொடங்கக் கூடாது. அதற்கு முன்பாகத் தொடங்கக் கூடாது. 

ப்ளானில் காட்டி யுள்ளபடி வீடு கட்ட வேண்டும். இல்லை யெனில் பின்னால் அதிகாரிகள் ஆய்வு செய்யும் போது பிரச்சி னைகள் ஏற்படக் கூடும்.
Previous Post Next Post
COMMENTS... plz use me