இயற்கைக்கு ஏற்ற செயற்கை ஜல்லி ! இயற்கைக்கு ஏற்ற செயற்கை ஜல்லி ! - ETbuild

இயற்கைக்கு ஏற்ற செயற்கை ஜல்லி !

கட்டிடம் என்பது பலவி தமான கட்டுமானப் பொருள் களின் சேர்க்கை. மணல், செங்கல், மரப் பலகைகள், கட்டுமானக் கம்பிகள், ஜல்லிகள் 
எனப் பலவி தமான பொரு ள்களை சிமெண்ட் கொண்டு இணைத்து தான் நம் கண் முன்னே கட்டிடம் ஓர் உருவமாக உயிர் பெறுகிறது. 

இந்தக் கட்டுமானப் பொருள்க ளில் ஒன்று குறைந் தாலும் கட்டிடம் முழுமை யடையாது. 

அதுபோல ஒன்றின் தரம் குறைந்தாலும் கட்டிடத்தின் ஆயுள் பாதிக்கப் படும்.
இவ்வளவு முக்கியத் துவம் வாய்ந்த கட்டுமானப் பொருள் களுக்கு இப்போது தட்டுப்பாடு அதிகம். நாள் தோறும் அதன் தேவை அதிகமாகிக் கொண்டே வருகிறது. 

ஆனால் அந்தத் தேவைக்கு ஏற்ப கட்டுமானப் பொருள்கள் கிடைப்ப தில்லை. 

மணல், செங்கல், ஜல்லி, பலகை போன்ற அத்தியாவ சியமான கட்டுமானப் பொருள்கள் எல்லாம் இயற்கை நமக்கு அளிக்கக் கூடியவை. 

இன்றைக்கு அதிகரித்து வரும் அசுரத்தன மான தேவைக்கு இயற்கை யால் ஈடுகொடுக்க முடிய வில்லை என்பதே நிதர்சனம்.

ஒரு மரத்தை வெட்டி கதவு, ஜன்னல் செய்துகொள் கிறோம் என்றால், அதற்குப் பதிலாக மற்றொரு மரம் நடப்பட வேண்டும். 

அப்போது நாம் உயிர் வாழத் தேவை யான ஆக்ஸிஜன் நமக்குக் கிடைக்கும். 

ஆனால் நாமோ மரத்தை வெட்டுவதில் காட்டும் வேகத்தை நடுவதில் காண்பிப் பதில்லை. 

அது போல த்தான் ஆற்று மணலும். குறிப்பிட்ட அளவுக்கு மேல் மணலை அள்ளினால் மண் வளம், நீர் வளம் எல்லாம் பாதிக்க ப்படும். 

செங்கலைத் தயாரிப் பதற்கும் மண் எடுக்கப் படுகிறது. செங்கலைச் சுட விறகுகள் எரிக்கப்ப டுகின்றன. 

இம் மாதிரியான சுரண்ட ல்களில் இருந்து இயற்கை யைப் பாதுகாப்பது அவசிய மானது. 

இயற்கை யைப் பாதுகாக்கும் பொருட்டு தான் இன்று உலகம் முழுவதும் மாற்றுக் கட்டுமானப் பொருள்கள் குறித்த ஆராய்ச் சிகள் நடைபெ ற்று வருகின்றன. 

இம்மாதிரி யான ஆராய்ச்சி களின் விளைவாக மாற்று மணல், மாற்றுக் கட்டு மானக் கற்கள் போன்றவை கண்டு பிடிக்கப் பட்டு ஓரளவு நடை முறைக் கும் வந்துள்ளன. 

கதவுகளு க்கும், ஜன்னல்க ளுக்கும் மாற்றுப் பொருள்கள் வந்து விட்டன. 
இதன் தொடர்ச்சி யாக மாற்று ஜல்லிக் கான ஆராய்ச் சிகளின் விளைவாகச் செயற்கை ஜல்லிகள் கண்டு பிடிக்கப்ப ட்டுள்ளன. 

இவை மேலை நாடுகளில் ஓரளவு புழக்கத்துக்கு வரத் தொடங் கியுள்ளன. 

தயாரிக்கும் முறை

தொழிற் சாலைகளில் இருந்து வெளி யேறும் பல விதமான கழி வுகளை மூலப் பொருள்க ளாகக் கொண்டு இந்த வகை ஜல்லி தயாரிக் கப்படுகிறது.

இரும்புத் தொழிற் சாலைகளில் உண்டாகும் இரும்புக் கழிவு களின் துகள்களை யும் மூலப் பொருளாகக் கொள்ளலாம். 

மேலும் அனல்மின் நிலையத் திலிருந்து வெளியேறும் நிலக்கரிச் சாம்பலையும் மூலப் பொருளாகக் கொள் ளலாம். 
இது மட்டு மல்லாது கடற்கரைக் களி மண்ணையும் இதன் பகுதிப் பொருளாகக் கொள்ளலாம். 

இத்து டன் சோடியம் கலந்து ஆயிரம் டிகிரி செல்சியஸ் சூடேற்ற வேண்டும். 

செயற்கை ஜல்லி அவசியம் ஏன்?

பொதுவாக ஜல்லி இயற்கை யான முறையில் இருந்து கிடைக்க க்கூடியது. 

அதை வெட்டித் துண்டாக்கி நாம் கட்டுமான த்துக்குப் பயன்படுத் துகிறோம். இம்மாதிரி யான இயற்கை ஜல்லி எல்லா இடங்களிலும் கிடைப் பதில்லை. 

அதனால் கிடைக்கும் இடங்களில் இருந்து மற்ற இடங்க ளுக்கு இதைக் கொண்டு செல்ல வேண்டியிரு க்கிறது. 

ஏற்கெனவே கட்டுமானப் பொருள் களில் தட்டுப்பா ட்டுடன் இந்தப் பயணச் செலவும் சேர்ந்து மிக அதிக செலவைக் கொண்டு வந்து விடும். 

உதாரண மாகத் தென் மாவட்ட ங்களைப் பொறுத்த வரை அங்கு மணல் குவாரி இல்லை. 

திருச்சியில் இருந்து தான் அதிகமாக ஆற்று மணல் கட்டுமானத் துக்காகக் கொண்டு செல்லப் படுகிறது. 

இதனால் ஆற்று மணலின் விலை அங்கு மிக அதிகமாக இருக்கிறது. 

இதைச் சமாளிக்க திருநெல் வேலிப் பகுதிகள் எம்-சாண்ட் என அழைக்க ப்படும் செயற்கை மணல் உற்பத்தி செய்யப் படுகிறது. 

இது பரவலான பயன் பாட்டுக்கு வரவில்லை என்றாலும் வெளிப் பூச்சுக்கு மக்கள் இதைப் பயன்ப டுத்தத் தொடங்கி யுள்ளனர் என்பது ஆரோக்கி யமான மாற்றம். 

இதுபோல் செயற்கை ஜல்லி யையும் பயன்ப டுத்தத் தொடங்க வேண்டும். 

செலவு ஒரு பக்கம் குறைவா னாலும் அதைவிடச் சுற்றுச்சூழ லுக்கும் செயற்கை ஜல்லி ஏற்றதாகும். மேலும் செயற்கை ஜல்லி எடை குறைவானது. 
உறிஞ்சு ப்படும் தன்மையும் அதிகம். சிமெண் ட்டுடன் உடனே பிணைந்து கட்டுமா னத்தின் உறுதியைக் கூட்டும். 

தொழிற் சாலைக் கழி வுகளில் இருந்து தயாரிக் கப்படுதால் சுற்றுச் சூழலுக் கும் ஏற்றது. 

பலவிதப் பயன்பாடு உள்ள இந்தக் கட்டுமானப் பொருள் விரை வில் பரவலான பயன் பாட்டுக்கு வரும் என எதிர் பார்க்கப் படுகிறது.
Previous Post Next Post
COMMENTS... plz use me