வாட்டர் பியூரி ஃபயர் எது பெஸ்ட்? வாட்டர் பியூரி ஃபயர் எது பெஸ்ட்? - ETbuild

வாட்டர் பியூரி ஃபயர் எது பெஸ்ட்?

னித உடல் சிக்கல் இல்லாமல் இயங்க தினசரி குறைந்தது 8 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும் என்பது மருத்துவர் களின் அறிவுரை.
 வாட்டர் பியூரி ஃபயர்
அதுவும் கோடையில் நம் உடலுக்கு வேண்டிய தண்ணீரின் தேவை அதிகம். பூமி மாசுபட்டு நீர் ஆதாரங்கள் கிட்டத் தட்ட விஷமாகி விட்டது. நம் உடலை சுத்தப்படுத்த வேண்டிய தண்ணீரே அசுத்தமாக இருக்கிறது.
 தண்ணீரை சுத்தமாக்க
இதனால் 75 சதவிகித நோய்கள் நம் நாட்டில் தண்ணீர் மூலம் பரவுகிறது. பழங்காலத்தில் தண்ணீரை சுத்தமாக்க அதை கொதிக்க வைத்தார்கள்.

இப்போதும் பல வீடுகளில் அதை செய்கி றார்கள். அப்படி செய்யும் போது தண்ணீரின் சுவை மாறி விடுகிறது.

தவிர, பரபரப்பான நகர வாழ்க்கையில் இதை செய்வதற்கு நேரம் இருப்ப தில்லை. விளைவு, வாட்டர் பியூரிஃபயர்களை தேடிச் செல்லும் நிலை..!
பாக்டீரியாக்கள், வைரஸ்
வாட்டர் பியூரிஃபயர்கள் தண்ணீரைச் சுத்தப்படுத்தி அதை குடிப்பதற்கு ஏற்றதாக மாற்றி தருகிறது.

இவை பாக்டீரியாக்கள், வைரஸ் போன்ற நுண்ணியிரி களை தண்ணீ ரிலிருந்து நீக்கு கிறது. இதன் மூலம் காலரா, மஞ்சள் காமாலை போன்ற பாதிப்புகள் தடுக்கப் படுகிறது.

மேலும், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நைட்ரேட், ஆர்சனிக், குரோமியம், ஃபுளோரைட், பாதரசம் போன்ற வற்றை தண்ணீரி லிருந்து நீக்கும் வேலையைச் செய்கின்றன.

நம் நாட்டில் ஏராளமான வாட்டர் பியூரிஃபயர்கள் விற்பனை யாகின்றன. அவற்றில் நமக்கு ஏற்றதைத் தேர்வு செய்வது எப்படி என்கிற கேள்வி அனைவரிடமும் இருக்கிறது.

பொதுவாக இவற்றை வாங்கும்போது நவீன தொழில் நுட்பத்தில் இயங்குகி ன்றனவா? எந்த அளவுக்கு தண்ணீரை சுத்தப் படுத்துகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

ரசாயன சுத்திகரிப்பு, ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் (ஆர்.ஓ), அல்ட்ரா வயலட் முறை, வடிகட்டுதல் உள்ளிட்ட முறைகளில் தண்ணீர் சுத்தப் படுத்தப் படுகிறது.

விலை ரூ.2,000 தொடங்கி 25,000 வரை இருக்கிறது. மின்சாரத்தில் இயங்குவது, மின்சாரம் இல்லாமல் இயங்குவது என இரு வகைகள் இருக்கின்றன.
வாட்டர் பியூரிஃபயர்கள்
சுமார் அரை டஜன் நிறுவனங்களின் 10 வகையான வாட்டர் பியூரிஃபயர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்டன. அவற்றின் விலை, வாரண்டி, தரம், செயல்பாடு போன்றவை அலசி ஆராயப் பட்டதோடு, மற்ற பிராண்ட் களோடு ஒப்பிடப் பட்டன.

இவை, இந்திய தர அமைப்பின் குறைந்தபட்ச தர அளவு களுக்கு உட்பட்டி ருக்கிறதா என்பதும் ஆராயப் பட்டது. இந்த ஆய்வு இந்திய அரசின் நுகர்வோர் துறையின் அனுமதியோடு நடத்தப் பட்டது.

யூரேகா ஃபோர்ப்ஸ், வேர்ல்பூல், டாடா ஸ்வாட்ச், ஜீரோ பி சுரக்ஷா, ஹெச்.யூ.எல், கென்ட் உள்ளிட்ட பிராண்ட்கள் ஆராயப் பட்டது. முடிவுகளை அட்டவணை களில் காண்க..! விகடன்
Previous Post Next Post
COMMENTS... plz use me