வீட்டின் அறைகளை நேர்த்தியுடன் வடிவமைப்பது போல படிக்கட்டு களையும்
அமைக்க வேண்டும்.
அதிலும் வீட்டின் வெளிப் பகுதியில் படிக்கட்டுகள் அமைவதாக
இருந்தால் அது வீட்டுக்கு எடுப்பான தோற்றத்தை ஏற்படுத்தி தரும் வண்ணம்
அமைய வேண்டும்.
சில
இடங்களில் வீட்டின் அனைத்து கட்டுமான பணிகளுக்கும் இடத்தை தேர்வு
செய்து விட்டு
பின்னர் மீதம் இருக்கும் இடத்தில் படிக்கட்டுகள் அமைக்கும்
பழக்கம் இருக்கிறது.
அப்படி அமையும்போது படிக்கட்டுகள்
குறுகலாகிவிட வாய்ப்பு இருக்கிறது. அதனால் படியில் ஏறுபவர்கள் சிரமப்பட
வேண்டியிருக்கும்.
குறிப்பாக முதியவர்கள் ஏறி, இறங்குவதற்கு சவுகரியமாக
அமையாது.
அத்துடன் குறுகலான இடத்தில் படிக்கட்டுகளை
அழகுற வடிவமைப்பது சவாலான விஷயமாகவே இருக்கும்.
அது வீட்டின் அழகியலிலும்
எதிரொலிக்கும். குறிப்பாக வீட்டின் முகப்பு பகுதியில் குறுகலான இடத்தில்
படிக்கட்டுகள் அமைக்கும்போது வீட்டின் பொலிவு குறைபடும்.
வீட்டில்
உள்ளவர்கள் படிக்கட்டுகளை பயன்படுத்துவ திலும் பிரச்சினைகள் ஏற்படும்.
அதை
தவிர்க்க படிக்கட்டுகளை எப்படி அமைக்க வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
*
பொதுவாக படிக்கட்டுகள் உயரமாக அமைந்து விடக்கூடாது. ஒரு படிக்கும்,
மற்றொரு படிக்கும்
இடையேயான உயரம் ஏறுவதற்கும், இறங்கு வதற்கும் சிரமத்தை
ஏற்படுத்தி விடக்கூடாது.
ஆகவே படிக்கட்டுகளின் உயரம்
குறைவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில் படிகளின்
அகலம் ஓரளவு விசாலமாக இருக்க வேண்டும்.
அப்படி அமைப்பது குழந்தைகள்,
முதியோர்கள் சிரமமின்றி ஏறி இறங்க வசதியாக இருக்கும்.
*
அதேபோல் ஒவ்வொரு படிக்கட்டு களுக்கும் இடையே உள்ள இடைவெளி சமமாக இருக்க
வேண்டும்.
ஒரு படிக்கட்டு பெரியதாகவும், மற்றொரு படிக்கட்டு சிறியதாகவும்
அமைந்து விடக்கூடாது.
அப்படி அமைவது படியில்
நடப்பவர்களுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்தி விடும். கால் இடறி கீழே விழும்
நிலையும் ஏற்படலாம்.
ஆகவே படிக்கட்டு அமைக்கும்போது கூடுதல் கவனம் செலுத்த
வேண்டும்.
*
படிக்கட்டில் ஏறுபவர் களுக்கு வசதியாக கைப்பிடிகள் அமைக்க வேண்டும். அவை
வழுக்கும் தன்மை கொண்டதாக அமைந்து விடக்கூடாது.
கைக்கு பிடிமானம்
கொடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
* வீட்டின் உள்
அறையில் படிக்கட்டுகள் அமைப்பதாக இருந்தால் அறைகளுக்கு அழகு சேர்க்கும்
வண்ணம் ஆடம்பர தோற்றத்தை வெளிப் படுத்தக் கூடியதாக அமைய வேண்டும்.
படிக்கட்டுக்களின் பக்கவாட்டு பகுதிகள் கம்பீரமான தோற்றத்துடன் மிளிர வேண்டும்.
*
படிக்கட்டுகளின் முகப்பு பகுதிகள் கலை நயத்துடன் மிளிரக்கூடியதாகவும்
இருக்கின்றன.
புதுபுது வடிவமைப்புடன் சந்தைகளில் கிடைக்கின்றன. அவைகளை
பயன்படுத்தி படிக்கட்டுக்கு அழகு சேர்க்கலாம்.
* வீட்டின்
மாடி உயரமாக இருந்தால் அதற்கு ஏற்றவாறு நீள்வாக்கில் செங்குத்தாக
படிக்கட் டுகளை அமைத்து விடக்கூடாது.
ஏறுபவர் களுக்கு சிரமம் இல்லா தவாறு
இருக்க வேண்டும்.
பொதுவாக படிக்கட்டுகள் சாய்தளமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
*
படிக்கட்டுகளின் தரைத்தளம் நடப்பதற்கு ஏதுவாக இருக்க வேண்டும்.
படிக்கட்டுகள் அழகாக மிளிர வேண்டும் என்பதற்காக வழுக்கும் தன்மை கொண்ட
வைகளை
பயன்படுத்தி தளத்தை அமைத்து விடக் கூடாது. அவை சொரசொரப்பு தன்மை கொண்டதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
*
ஏனெனில் வீட்டில் இருக்கும் குழந்தைகள் படிக்கட்டுகளில் துள்ளிக்குதித்து
விளையாட ஆசைப்ப டுவார்கள்.
அவர்கள் படிக்கட்டில் வேகமாக ஏறி, இறங்கி
விளையாடும் போது வழுக்கி கீழே விழ வாய்ப்பு இருக்கிறது.
மேலும்
முதியோர் களுக்கும் வழுக்கும் தன்மை கொண்ட தரைத்தளம் சிரமத்தை
ஏற்படுத்துவ தாகவே அமையும்.
எனவே
படிக்கட்டுகளின் தரைத்தளம் கால்களுக்கு பிடிமானம் கொடுக்கும் வகையில்
வழுக்கும்
தன்மையற்று இருப்பது குழந்தைகள், முதியவர்கள் சிரமமின்றி ஏறி,
இறங்க வசதியாக இருக்கும்.
*
படிக்கட்டுகளின் உட்புற பகுதிகளை உபயோகமான தாக பயன்படுத்தக் கொள்ள
வேண்டும். அவை அதிக இடை வெளியுடன் தென்பட்டால் குடோனாக அமைத்து விடலாம்.
அதில்
அடிக்கடி தேவைப்படாத பொருட்களை போட்டு வைத்துக் கொள்ளலாம்.
இதன் மூலம்
வீட்டில் பொருட்கள் இடத்தை அடைத்து கொண்டு இருப்பது தவிர்க்கப்படும்.
*
படிக்கட்டுகள் விசாலமான அகலத்தில் அமைந்தால் பக்கவாட்டில் அழகிய செடிகளை
வளர்க்கலாம்.
அதனால் படிக்கட்டுகள் அழகு பெறுவதோடு வீடும் பொலிவுடன் காட்சி
தரும்
Tags:
build