1.பிரிட்ஜை சமையல றையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய் விடும்.
2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார த்தை மிச்சப்படு த்தஉதவும்.
3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்ட டையை மெதுவாக தென்னந் துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.
4. பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்ற வற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.
5. வெளியூர் செல்லும் போது ஃபிரிட்ஜைக் காய வைத்துச் செல்ல வேண்டும். மாதமிரு முறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்கவும்.
6. பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது.
அதற்குப் பதில் ஒரு பழைய காஸ் கட்டைப் போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.
அதற்குப் பதில் ஒரு பழைய காஸ் கட்டைப் போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.
7. பிரிட்ஜ்ஜி லிருந்து வித்தியாசமாக ஓசை வந்தால் உடனடியாக ஒரு மெக்கானி க்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.
8.அதிகப்ப டியான பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. ஒவ்வொரு பொருளு க்கும் காற்று செல்வதற்கு ஏற்ப சிறிது இடைவேளி விட்டு வைக்க வேண்டும்.
9.பிரிட்ஜுக்குக் கண்டி ப்பாக நில இணைப் புகள் (Earth) கொடுக்க வேண்டும்.
10. பிரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும். பிரிட்ஜின் உள்ளே குறைந்தப் பொருள் களை வைத்தால் மின்சாரம் குறைவு என்பது தவறான கருத்தாகும்.
11. பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப் படுத்தக் கூடாது. இது உட்சுவ ர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகி க்கலாம்.
12. உணவுப் பொருட்களைச் சூட்டோடு வைக்காமல் குளிர வைத்த பின் தான் வைக்க வேண்டும். வாழைப் பழத்தை எக்காரணத்தை கொண்டும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.
13. பச்சைக் காய்க றிகளை பாலிதீன் கவர்களில் போட்டு வைக்கவும். பிரிட்ஜில் வைக்கும் பாட்டில் களை அடிக்கடி சுத்தம் செய்து வெய்யிலில் காய வைத்து உபயோ கிக்க வேண்டும்.
14. பச்சை மிளகாய் வைக்கும் போது அதன் காம்பை எடுத்து விட்டுத் தான் வைக்க வேண்டும். பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட் களை மூடி வைக்க வேண்டும்.
15. பிரிட்ஜிலிருந்து துர்நா ற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலை யையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிக ளையோ வைக்கலாம்.
16. கொத்த மல்லிக் கீரை, கறி வேப்பிலை இவை களை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரத்திற்கு பசுமை மாறாமல் இருக்கும்.
17. பிரிட்ஜின் காய்கறி ட்ரேயின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து பச்சைக் காய்கறி களைப் பாது காத்தால் வெகு நாள் அழுகிப் போகாமல் இருக்கும்.
18. சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெயைத் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் ஃபிரஷாக இருக்கும்.
19. பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் முறு முறுப்பாக இருக்க வேண்டு மானால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.
20. அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை வாங் கினால், மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்ப டுத்தும்.
Tags:
appl