வீட்டுக் கடன் வட்டி குறையுமா? வீட்டுக் கடன் வட்டி குறையுமா? - ETbuild

வீட்டுக் கடன் வட்டி குறையுமா?

ரிசர்வ் வங்கி இந்த ஆண்டில் மட்டும் இரண்டு முறை ரெப்போ வட்டி (வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம்) விகிதத் தைக் குறைத்தும் ஏராளமான வணிக வங்கிகள் வட் டியைக் குறைக்க வில்லை.
வீட்டுக் கடன் வட்டி குறையுமா?

எனவே வாடிக்கை யாளர்கள் வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன் களை அடைக்கச் செலுத்தும் தவணைத் தொகையும் குறைய வில்லை.

பொருளா தர மந்தம், பண வீக்கம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங் களால் ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டில் ரெப்போ வட்டி விகித த்தைக் குறைக்க வில்லை.

ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் பணவீக்கம் ஓரளவு கட்டுக்குள் வந்ததை யடுத்து ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைக்க முடிவு செய்தது.

கடந்த ஜனவரி 15-ம் தேதியும், பிப்ரவரி 3-ம் தேதியும் ரெப்போ வட்டி விகிதத் தை 0.25 சதவீதம் ரிசர்வ் வங்கி குறைத்தது. 
அதாவது ஒரு மாதத் துக்குள் இரண்டு முறை என 0.50 சதவீதம் வட்டி விகிதம் குறைந்தது.

வழக்க மாக ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தைக் குறை த்தால் அந்தப் பலன் வாடிக் கையாளர் களுக்கும் கிடைக்கும் வகையில் வணிக வங்கிகள் வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்களு க்கான வட்டி விகித த்தைக் குறை க்கும். 

ஆனால், இந்த முறை அப்படிப் பல வங்கிகள் நடந்து கொள்ள வில்லை. இரண்டு வங்கிகள் மட்டுமே வட்டி விகிதத்தைக் குறைத்தன.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் அதிருப்தி தெரி வித்தார். இதனை யடுத்து மேலும் சில வங்கிகள் வட்டிக் குறைப்பு அறி விப்பை வெளி யிட்டன.

இன்னும் பல வங்கிகள் வட்டிக் குறைப்பு அறிவிப்பை வெளியிடும் என எதிர்ப் பார்க்கப் பட்டது.

ஆனாலும் அதில் ஏமாற்றமே. நாட்டில் உள்ள 91 வணிக வங்கிகளில் இதுவரை 21 மட்டுமே வட்டிக் குறைப்பு செய்திரு ப்பதாக மத்திய அரசு நிதியமைச் சகம் தெரிவித் துள்ளது.
70 வங்கிகள் வட்டிக் குறைப்பு செய்ய வில்லை என்றும் நிதியமைச் சகம் அதிருப்தி வெளியிட் டுள்ளது. இதனைத் தொடர்ந்தாவது வணிக வங்கிகள் வட்டிக் குறைப்பு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட் டுள்ளது. 

ஒரு வேளை இனியாவது வட்டிக் குறைப்பு அறிவிப்பு வெளியா னால் வீட்டுக் கடனுக்கான தவணைத் தொகை குறையும்.

ஆனால், வணிக வங்கிகள் வட்டியைக் குறை க்குமா? என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.
Previous Post Next Post
COMMENTS... plz use me