வீட்டுக் கடனை முடிக்கும் போது மறக்காமல் செய்ய வேண்டியவை ! வீட்டுக் கடனை முடிக்கும் போது மறக்காமல் செய்ய வேண்டியவை ! - ETbuild

வீட்டுக் கடனை முடிக்கும் போது மறக்காமல் செய்ய வேண்டியவை !

வீடு கட்டுவதற் காக கடன் வாங்கும்போது வங்கிகள் கேட்கும் எல்லா ஆவணங் களையும் கர்ம சிரத்தையாக ரெடி செய்து ஒப்படை க்கும் நாம், கடனை எல்லாம் கட்டி முடிக்கும் சமயத்தில் பல விஷயங்களில் மிக அசால்ட்டாக இருந்து விடுவோம்!
வீட்டுக் கடனை முடிக்கும் போது மறக்காமல் செய்ய வேண்டியவை

இப்படி கடன் முடிந்த சந்தோஷ த்தில் கவனக் குறைவாக இருந்து விடாமல், என்னென்ன ஆவண ங்களைக் கட்டாயம் திரும்பப் பெற வேண்டும், ஆவண ங்களை வாங்கிய பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதற் கான பட்டியல் இதோ..!

வீட்டுக் கடனுக்கான பத்திர ங்களை பெரும் பாலான வங்கிகள் மும்பை, டெல்லி போன்ற இடங்களில் இருக்கும் அதன் தலைமை அலுவலக த்தில் தான் வைத்திரு க்கும்.

அங்கிருந்து அந்த ஆவணம் நம் கைக்கு வந்துசேர ஒரு மாத காலமாகும். கடனை கட்டி முடிப்பதற்கு ஒருமாதத் திற்கு முன்பே வங்கி அதிகாரிக ளுக்குச் சொல்லி,

தலைமை அலுவலத் திலிருந்து ஆவணத்தைக் கொண்டுவர சொல்வது ஒரு வழி. அதற்கு வாய்ப்பு இல்லாத பட்சத்தில் இன்னொரு வழி இரு க்கிறது...
எண்ணிப் பாருங்கள்!

நீங்கள் கடன் வாங்கும் போது வங்கியில் என்னென்ன ஒரிஜினல் ஆவணங் கள் மற்றும் ஜெராக்ஸ் களைக் கொடுத்தீர்கள் என்பதை கவனித்து அவற்றை எண்ணி வாங்குங்கள்.

என்னென்ன ஆவணங்கள் உங்களுக்கு வங்கி தந்திரு க்கிறது என்பதை வங்கி அதிகாரியின் கையெழுத்து மற்றும் கிளை அலுவலக த்தின் முத்திரை பதித்து பெற்றுக் கொ ள்ளுங்கள்.

வங்கி ஏதாவது ஓர் ஆவண த்தைத் தர மறந்து விட்டது அல்லது நீங்கள் வாங்க மறந்து விட்டீர்கள் என்றால், இந்தப் பட்டியல் உங்களுக்கு உதவும்.

ஜாமீன் ஆவணங்கள்..!

வீட்டுக் கடனுக்கு ஜாமீனாக சொத்துப் பத்திரம், இன்ஷூ ரன்ஸ் பத்திரங்கள், எஃப்.டி. ஆவணங்கள் போன்ற வற்றைக் கொடுத் திருந்தால் அவற்றையும் மறக்காமல் வாங்கி விடுங்கள்.

இன்ஷூரன்ஸ் பத்திரங்களை ஜாமீனாகக் கொடுத்தி ருக்கும் பட்சத்தில், கடனை கட்டி முடித்த பிறகு அந்த விவரத்தை இன்ஷூரன்ஸ் நிறுவனத் துக்குச் சொல்வது அவசியம்.

அதே நேரத்தில், கடனுக்கு ஜாமீனாக வைக்கப் பட்ட விவரத்தை பத்தி ரத்தில் ரத்து செய்து வங்கியின் முத்திரையை பெறுவது அவசியம்.
இதைச் செய்தால் மட்டுமே பாலிசித் தொகை, இழப்பீடு போன்றவை நமக்கு கிடைக்கும். இல்லா விட்டால் வங்கிக்கு தான் கிடைக்கும்.

ஆதாரம் அவசியம்!

கடன் முழுமை யாகத் திரும்ப கட்டி முடிக்கப் பட்டு விட்டது. பாக்கி எதுவும் இல்லை என்பதற் கான சான்றிதழை வங்கி முத்திரை யுடன் கையெழுத் திட்டு வாங்கிக் கொள்வது அவசியம்.

பிற்கால த்தில் சொத்தை விற்கும் போதும், மீண்டும் கடன் வாங்கும் போதும் இந்த ஆவணம் தேவைப்படும்.

அபராதம் கட்டுங்கள்!

வீட்டுக் கடனை முழுமை யாகக் கட்டும் முன்பு, தவணை தவறியதற்கான அபராத வட்டி அல்லது வங்கியில் பணம் இல்லாமல் காசோலை திரும்பிய தற்கான அபராதம் ஏதும் கட்ட வேண்டி யிருந்தால் உடனடி யாகக் கட்டி விடுங்கள்.

இல்லை எனில் சிபிலில் உங்கள் பெயர் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும்.

அடமானத்தை விடு வியுங்கள்..!
வீட்டுக் கடனை முடிக்கும் போது

வீட்டுக் கடன் வாங்கும் போது, அது குறித்து சார் பதிவாளர் அலுவல கத்தில் பதிவு செய்யப் படும். கடனை கட்டியபிறகு இந்த அடமான த்தை ரத்து செய்வது அவசியம். 

இந்த வே லையைச் செய்வதில் வங்கி பெரிய அக்கறை எதுவும் காட்டாது. நாமே முன்னின்று இந்த வேலையைச் செய்தால் மட்டுமே பிற்பாடு எழும் சிக்கல்களைத் தவிர்க்க முடியும்.

பத்திரம் தொலைந் தால்...

வீட்டுக் கடன் பத்திரத்தை வங்கி தொலைத்து விட்டால் டூப்ளிகேட் பத்திரத்தை சார் பதிவாளர் அலுவல கத்தில் வாங்கிக் கொள்ளலாம்.

ஆனால் அப்படி வாங்கும் போது வங்கியில் இருந்த போது தான் ஆவணம் காணாமல் போனது என்பதை சம்பந்தப் பட்ட வங்கியிடம் இருந்து கடிதமாகப் பெறுவது மிக, மிக அவசியம்.
காரணம், பிற்காலத்தில் சொத்தை விற்க நினைத்தால் டூப்ளிகேட் பத்திரம்தான் இருக்கிறது என்றால் வாங்கு வதற்கு தயங்கு வார்கள். அப்போது வங்கி தொலைத் ததால் தான் டூப்ளிக்கேட் வாங்கியதாக நாம் அத்தாட்சி யுடன் காட்டினால் நம்புவார்கள்.
Previous Post Next Post
COMMENTS... plz use me