வீட்டுக் கடன் வட்டி குறைய வாய்ப்பு ! வீட்டுக் கடன் வட்டி குறைய வாய்ப்பு ! - ETbuild

வீட்டுக் கடன் வட்டி குறைய வாய்ப்பு !

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகள் ஆகியவை வெளியிடப்படும். 
வீட்டுக் கடன் வட்டி குறைய வாய்ப்பு

பொதுவாக, நிதிக்கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதம் குறைக்கப் படுமா என்ற கேள்வி தொழில் துறை யினருக்கு இருக்கும்.

இன்றைய சூழலில், இந்தியப் பொருளாதாரமும், தொழில் துறையும் சற்று மந்த நிலையில் இருப்பதால் கூடுதலான முதலீடுகள் சந்தையில் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம்.
ராயப்பேட்டை மட்டன் பிரியாணி செய்வது !
அதன் அடிப்படையில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதமான ரெப்போ ரேட் 0.35 சதவிகிதம் குறைக்கப்பட்டு, 5.40 சதவிகிதமாக தற்போது நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்த முடிவால் வீட்டுக் கடன் பெற்றவர் களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து நான்காவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.

கடந்த மூன்று முறை தலா 0.25 சதவிகித வட்டியை குறைத்த ரிசர்வ் வங்கி தற்போது 0.35 சதவிகிதம் குறைத்துள்ளது.

உலகளாவிய பொருளாதார வளர்ச்சி மந்தமாக உள்ள நிலையில் வட்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும் என்ற பொதுவான எதிர்பார்ப்பு பரவலாக இருந்து வந்தது.
உடலை வலுவாக்கும் தோப்புக் கரணம் !
இந்த சூழலில், ரெப்போ விகிதம் 5.75 சதவிகிதத் திலிருந்து 5.40 சதவிகிதமா கவும், ‘ரிவர்ஸ் ரெப்போ’ விகிதம் 5.50 சதவிகிதத் திலிருந்து 5.15 சதவிகிதமா கவும் ரிசர்வ் வங்கி குறைத்து அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்துள்ள தால் வர்த்தக வங்கிகளும் வீட்டுக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Previous Post Next Post
COMMENTS... plz use me