சொந்த மண்ணில் என்.ஆர்.ஐ.களுக்கு வீட்டுக் கடன் ! சொந்த மண்ணில் என்.ஆர்.ஐ.களுக்கு வீட்டுக் கடன் ! - ETbuild

சொந்த மண்ணில் என்.ஆர்.ஐ.களுக்கு வீட்டுக் கடன் !

உங்கள் வீட்டுப் பிள்ளைகள் வெளி நாட்டில் வசிக்கி றார்களா? அந்த நாட்டில் நீண்டகால அடிப்படையில் பணி புரிகிறா ர்களா? அவர்கள் இந்தியாவில் வீடு கட்டுவதற்கு அல்லது வாங்கு வதற்கு விரும்புகி றார்களா?
என்.ஆர்.ஐ.க்கு வீட்டுக் கடன்

இதற் கெல்லாம் உங்கள் பதில் ஆமாம் என்றால், உங்களுக்கு வீட்டுக் கடன் வசதி வழங்க வங்கிகளும் தேசிய வீட்டு வசதி வங்கியால் (national Housing Bank) அங்கீகரிக்கப் பட்ட வீட்டுக் கடன் வசதி நிறுவன ங்களும் காத்திருக் கிறார்கள். இந்திய ரிசர்வ் வங்கி இதற்குப் பொது அனுமதி வழங்கி யுள்ளது. 

ஒரே மாதிரியான விதி முறைகள் 

வீட்டுக் கடன் தொடர்பான பெரும் பான்மை யான விதி முறைகள் வெளி நாட்டு வாழ் இந்தியர்க ளுக்கும் (என்.ஆர்.ஐ) உள் நாட்டில் வாழும் இந்தியர் களுக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதே ரிசர்வ் வங்கியின் நிபந்தனை.

உதாரணமாக மார்ஜின் தொகை என்பது (அதாவது வீட்டு மதிப்பில் 15 முதல் 20 சதவீதம் வரையி லான தொகை), எவ்வளவு காலத்து க்குள் கடனைத் திருப்பிச் செலுத்த லாம் என்பது
(சாதாரணமாக 5 முதல் 25 ஆண்டுகளில் கடனைத் திருப்பிச் செலுத்துவது) மற்றும் வட்டி விகிதம் ஆகியவை வெளி நாட்டு வாழ் இந்தியர்க ளுக்கும் உள் நாட்டில் வாழும் இந்தியர்க ளுக்கும் ஒரே மாதிரியா கவே இருக்கின்றன.

அவ்வப் போது ரிசர்வ் வங்கி அறிவிக்கும் வட்டி விகிதத்து க்குத் தகுந்தபடி கடனுக் கான வட்டி விகிதம் அமையும்.

என்.ஆர்.ஐ.கள் இந்தியா வுக்கு விடுப்பில் வரும் போது வங்கியில் வீட்டுக் கடன் பெறுவ தற்கான நடைமு றைகளை மேற் கொள்ளலாம்.

தேவையான ஆவணங்கள்

என்.ஆர்.ஐ.கள் தங்க ளுடைய பாஸ்போர்ட்டின் நகல், எந்த நாட்டில், எந்தப் பணியில் நியமிக் கப்பட்டிருக் கிறார்கள் என்பதற்கான சான்றிதழ்,

சம்பளச் சான்றிதழ், இந்தியாவில் வைத்திரு க்கும் வங்கிக் கணக்கு (என்.ஆர்.இ./எஃப்.சி.என்.ஆர்./என்.ஆர்.ஓ.) விவரங்கள் தேவை. 

இவை தவிர உள் நாட்டு வாடிக்கை யாளர்கள் போலவே, என்.ஆர்.ஐ.களும் கீழ்க்கண்ட ஆவணங் களை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

#மனைப் பத்திரம் (சார்பதிவாளர் அலுவல கத்தில் பதிவு செய்த பத்திரம்)

#தாய்ப் பத்திரம் (இப்போதைய பத்திரத் துக்கு முந்தைய மனைப் பத்திரம்)

#13 ஆண்டு காலத்துக்குக் குறையாத வில்லங்கச் சான்றிதழ் (ஈ.சி.)

#சட்ட வல்லுநரின் அறிக்கை (லீகல் ஒபினியன்)

#விலை மதிப்பீடு அறிக்கை (வேல்யூவேஷன் ரிப்போர்ட்)

உரிய அதிகாரிகளால் (சி.எம்.டி.ஏ. அல்லது டி.டி.சி.பி. அதிகாரிகள்) வழங்கப் பட்ட மனைக்கு உண்டான வரை படம் அங்கீகார நகல் மற்றும் கட்டு மானச் செலவு அல்லது வீட்டின் மதிப்பீடு அறிக்கை ஆகிய வழக்க மான ஆவண ங்களை வங்கியில் தாக்கல் செய்ய வேண்டும்.

கடனை அடைப்பது எப்படி?

இந்தக் கடனைத் தவணை முறையில் திருப்பிச் செலுத்து வதற்கு, வெளி நாடுகளில் இருந்து அந்நியச் செலாவணி, வங்கிகள் வாயிலாக வர வேண்டும்.

அல்லது கடன் பெற்ற வெளி நாட்டு வாழ் இந்தியரின் என்.ஆர்.இ. அல்லது எஃப்.சி.என்.ஆர். அல்லது என்.ஆர்.ஓ. கணக்கி லிருந்து செலுத்த வேண்டும்.
இந்தக் கணக்குக்கு அடமானமாக வைக்கப் பட்ட வீட்டின் மூலம் வாடகை வருமானம் வருமேயா னால், வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்து வதற்கு அந்த வாடகைப் பணத்தைப் பயன் படுத்தலாம்.

வீடு கட்டுவதற்கும் வீடு வாங்குவ தற்கும் மட்டுமே வங்கிக் கடன் கிடைக்கும் என என்.ஆர்.ஐ.கள் கருத வேண்டாம்.

அவர்களு க்குத் தேவையா னால் ஏற்கெனவே இருக்கும் தங்களுக்குச் சொந்த மான வீடுகளைப் பழுது பார்ப்ப தற்கும், புதுப்பிப் பதற்கும்,

விரிவுப் படுத்து வதற்கும் கூட வங்கிகளிடம் இருந்தும் வீட்டுக் கடன் வசதி நிறுவனங் களிடம் இருந்தும் கடனுதவி பெற்றுப் பயனடை யலாம்.
Previous Post Next Post
COMMENTS... plz use me