பஞ்சாயத்து அப்ரூவல் போதுமானதா? பஞ்சாயத்து அப்ரூவல் போதுமானதா? - ETbuild

பஞ்சாயத்து அப்ரூவல் போதுமானதா?

வீட்டு மனைகளுக்கு அங்கீ காரம் வழங்கும் அதிகாரம் பெற்ற அமைப்புகள் தமிழ் நாட்டில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் கழகமான சி.எம்.டி.ஏ.வும் நகர ஊரமைப்பு மற்றும் திட்ட மிடுதல் இயக்க கமான டி.டி.சி.பி.வும் என்பதைக் குறித்துச் சென்ற வாரம் பார்த்தோம்.
பஞ்சாயத்து அப்ரூவல்
இந்த இரு அமைப்பு களிலும் அனுமதி பெற்ற நிலங்களில் பெரிய பிரச்சினை கள் வருவ தற்கு வாய்ப்புகள் இல்லை.

நீங்கள் வாங்கும் நிலத் திற்கான கிரயப் பத்திரத்தில் தொடங்கி, பட்டா உள்ளிட்ட அனைத்து ஆவணங் களையும் இந்தத் அமை ப்புகள் தெளிவாக ஆராய்ந்த பிறகு தான் இவ்வமை ப்புகள் அனுமதி வழங்கும்.

அதனால் ஏதேனும் பிரச்சி னைகள் இருந்தால் அது ஆரம்பத்தி லேயே தெரிய வந்து விடும். அதாவது இந்த அனுமதி அளிக்கும் அமைப் புகள் விதித்துள்ள விதிகள் கீழ் அந்த ப்ளாட்டுகள் இல்லை யென்றால் அனுமதி வழங்கப்பட மாட்டாது.
ப்ளாட்டுகள் அமைக்கப் பட்டுள்ள இடத்தில் சாலைகள் எத்தனை அடி அகலத்தில் இருக்க வேண்டும் என்பது போன்ற பல விதிகளை இந்த அமைப் புகள் வகுத் துள்ளன. அதைப் பின்பற் றாத நில ங்களுக்கு அனுமதி கிடைக் காது.

சென்னையும் சென்னை யின் சில புறநகர்ப் பகுதிகளும் சி.எம்.டி.ஏ.வின் அனுமதி அளிக்கும் பகுதிக ளின் கீழ் வருகின்றன.

அதாவது காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட த்தின் சில பகுதிகளும் சி.எம்.டி.ஏ. வின் அனுமதி அளிக்கும் பகுதிக்குட் பட்டவை தாம்.

இதற்கு அப்பாற்பட்ட தமிழ்நாட்டின் மற்ற பகுதிகள் டி.டி.சி.பி.யின் அனும தியின் கீழ் வரும். ஆனால் இந்த இரு அமைப் புகளின் அனுமதி மட்டும் போதாது. சம்பந்தப் பட்ட உள்ளாட்சி அமைப்புக ளின் அனுமதியும் பெறுவது அவசியம்.

டி.டி.சி.பி, சி.எம்.டி.ஏ. என்ற இந்த இரு அமைப்புகள் தவிர பஞ்சா யத்து அப்ரூவல் செய்த நிலங்களும் இன்று தமிழ்நாடு முழுவதும் பரவலாக விற்கப்ப டுகின்றன.

இந்தப் பஞ்சாயத்து அப்ரூவல் என்பது பஞ்சாத்து தலைவர் தனது லெட்டர் பேடில் எழுதிக் கொடுத் தாலேயே போதும். பஞ்சா யத்து அப்ரூவல் மனை களை விற்பனை க்குத் தயாராக்கி விடுகி றார்கள்.
ஆனால் இதில் சில சிக்கல்கள் உண்டு. ரியல் எஸ்டேட் தொழில் மோகம் தமிழ் நாட்டின் சின்னச் சின்ன ஊர்களிலும் பரவி மக்களை ஆட்கொண் டுள்ளது என்பதால்

மிகச் சிறிய நகரங்களில் சட்டென அருகில் உள்ள பஞ்சாயத்து களிடம் அனுமதி வாங்கித் தங்கள் விற்பனை களை தொடங்கி விடுகிறார்கள்.

பஞ்சாயத்து அமைப்பும் ஓர் ஜனநாயக அமைப்பு தான். ஆனால் என்ன பிரச்சினை என்றால் பஞ்சாயத்து அமை ப்புகள் ப்ளாட்டுக ளுக்கான விதி முறை களை ஆராய் வதில்லை. அதற்கான அமைப்பு முறை அங்கு இல்லை எனலாம்.
அதாவது சம்பந்த ப்பட்ட மனைக்கான ஆவணங் களை, லேஅவுட் பிளான்களை பஞ்சா யத்துத் தலைவரோ, பஞ்சாயத்து அதிகா ரிகளோ சிரத்தை யுடன் பார்ப்ப தில்லை.

அதனால் இம்மாதி ரியான நிலங்களின் உண்மைத் தன்மை சந்தேகத்திற் கிடமானது. மேலும் பஞ்சாயத்து அப்ரூவல் நிலங்களுக்கு வங்கிக் கடன் கிடைப்ப திலும் சிக்கல் எழும். 

வங்கிகள் இந்த நிலங்களை நம்பிக் கடன் அளிக்க முன் வராது. இதிலி ருந்தே பஞ்சாயத்து அப்ரூவல் நிலங்களின் சிக்கலை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
Previous Post Next Post
COMMENTS... plz use me