ரெடிமிக்ஸ் கான்கிரீட் பற்றி தெரியுமா? உங்களுக்கு ! ரெடிமிக்ஸ் கான்கிரீட் பற்றி தெரியுமா? உங்களுக்கு ! - ETbuild

ரெடிமிக்ஸ் கான்கிரீட் பற்றி தெரியுமா? உங்களுக்கு !

கட்டிடத் திற்கு அடித்தளம் எந்த அளவுக்கு வலு சேர்க்கிறதோ அதே அளவுக்கு வலு சேர்ப்பது கான்கிரீட் கலவை.
நாம் கட்டும் எந்தக் கட்டிடமும் உறுதித் தன்மையோடு இருக்க வேண்டும் என்றால் கான்கிரீட் கலவை சரி விகிதத்தில் இருக்க வேண்டும்.

ஆனால், இந்த அவசர உலகில் கட்டுமானப் பணிகளை விரைவில் முடிக்க ரெடிமிக்ஸ் கான்கிரீட் அதிக அளவில் பயன் படுத்தப் படுகிறது. 

ரெடிமிக்ஸ் கான்கிரீட் வாங்கும் போது என்னென்ன கவனிக்க வேண்டும்?
# ரெடிமிக்ஸ் கான்கிரீட் வாங்கும் போது அதைத் தயாரித்த நிறுவன த்திடம் இருந்து கான்கிரீட் கலவை தயாரிக்கப் பட்ட விதம்,

அதற்குப் பயன் படுத்தப் பட்ட பொருட் களின் தரம், அளவு உள்ளிட்ட விவரங் களை நாம் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.

# குறிப்பாக மேல்தளம் அமைக்கும் பணியில், கம்பி கட்டும் பணி முடிந்த நிலையில்

அதற்கு அடியில் முட்டுக் கொடுத்து வைக்கப் பட்டிருக்கும் பலகை களில் கான்கிரீட் கசியும் அளவுக்குத் துளைகள்,

இடை வெளிகள் இருக்கிறதா என்பதை ரெடிமிக்ஸ் கான் கிரீட்டில் சரி பார்க்கவும். அப்படி இல்லா விட்டால் கான்கிரீட் உறுதியாக இல்லாமல் போக வாய்ப்புண்டு.

# ரெடிமிக்ஸ் கான்கிரீட் வந்தவுடன், கான்கிரீட் தரமாக உள்ளதா, எந்தப் பணிக்காக வாங்கப் படுகிறதோ

அதற்கேற்ற வாறு அது உறுதியாக இருக்கிறதா என்பதையும் உடனடி யாகச் சரி பார்க்க வேண்டும்.

ஒரு வேளை பயன் படுத்தி விட்டு, பின்னர் அதில் ஏதாவது குறைபாடு இருப்பது தெரிய வந்தால், பல நிறு வனங்கள் அதற்குப் பொறுப் பேற்காமல் ஒதுங்கி விடுவார்கள்.

# சரிபார்க்கும் போது, கான்கிரீட் கலவையின் திரவ நிலை என்ன, அதன் வெப்ப நிலை என்ன,
ஜல்லி களின் அளவு என்ன, நாம் சொன்ன கிரேடில் அது இருக்கிறதா என்பதையும் கவனிக்கவும்.

# கான்கிரீட்டைக் கொட்டும் போது, அதில் தேவை யற்ற கட்டிகள் எதுவும் உள்ளனவா என்பதையும் கண் கொட்டாமல் பார்க்க வேண்டும்.

#ரெடிமிக்ஸ் கான்கிரீட்டில் காற்றின் அளவு, அது உள்ளே தங்கும் அளவுக்கு இருந்தால், கட்டிடத்தில் வெடிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

இது நாளடை வில் கட்டிடத் தின் உறுதியைக் குலைத்து விடும்.   
Previous Post Next Post
COMMENTS... plz use me