மிக்ஸி பிளேடு மழுங்கி விட்டால் வீட்டிலேயே சரி செய்யலாம் ! மிக்ஸி பிளேடு மழுங்கி விட்டால் வீட்டிலேயே சரி செய்யலாம் ! - ETbuild

மிக்ஸி பிளேடு மழுங்கி விட்டால் வீட்டிலேயே சரி செய்யலாம் !

வீட்டு கிச்சனில் அத்தியாவசியப் பொருளாகிப் போன மிக்ஸி திடீரெனப் பழுதானால் அன்று எந்த வேலையும் ஓடாது. அவசரத்திற்கு இன்று எந்த வீட்டிலும் அம்மி கல்லும் கிடையாது.
மிக்ஸி ஜாரின் பேளேடுகளை கூர்மையாக வைத்திருக்க
சமையலறையில் மிக்ஸி இல்லையெனில் சமைப்பவர்களுக்கு ஒரு கை இழந்து விட்டதைப் போல் தான் தோன்றும். 
ஆம்.. இன்று அவர்களின் வேலையை மிச்சம் செய்திருப்பதில் மிக்ஸிக்கு பெரும் பங்கு உண்டு. வேலை மிச்சம் மட்டுமன்றி நேரத்தையும் மிச்சம் செய்திருக்கிறது.

இப்படி பல வகைகளில் உதவும் மிக்ஸியை பராமரிப்பது மிகவும் அவசியம். அதோடு அதில் அரைக்க உதவும் ஜார் தான் பிரதான பங்கைக் கொண்டுள்ளது.

எந்த பொருளையும் சட்டென விருப்பத்திற்கு ஏற்ப அரைக்க வேண்டுமெனில் ஜாரின் பேளேடுகள் நல்ல கூர்மையான உபயோகத்தில் இருக்க வேண்டும்.

அப்போது தான் எந்த பொருளையும் அரைக்க முடியும். அப்படி அந்த ஜாரின் பேளேடுகளை கூர்மையாக வைத்திருக்க சில பராமரிப்பு விஷயங்களைக் கையாள வேண்டும். அவை என்ன என்று பார்க்கலாம்.
ஜாரின் பேளேடுகளை கூர்மையாக்க? 
ஜாரின் பேளேடுகளை கூர்மையாக்க?
ஜாரின் பிளேடுகளை கூர்மையாக்க வீட்டில் கல் உப்பு இருப்பின் அதை ஒரு கையளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

பின் மிக்ஸியில் போட்டு ஒன்றாம் என்னில் 5 நொடிகளுக்கு திருப்பி விட்டு சுற்ற வைத்து பின் அணைத்து விடுங்கள். இப்படியாக பத்து நிமிடங்களுக்கு மெதுவாக சுற்ற விட்டு அணைக்க பிளேடுகள் கூர்மையாகும்.
பின் ஜாரைக் கழுவிட்டு தண்ணீர் கொஞ்சம் நிரப்பி ஒரு சுற்று சுற்றி எடுங்கள். பின் நன்கு காய வைத்துப் பயன்படுத்தலாம்.

மிக்ஸி பிளேடுகளை சாணை வைக்ககவே கூடாது. மிக்ஸி பிளேடுகள் மோட்டாரின் வேகத்தைப் பொறுத்தே நைசாக அரைக்கும். அரைக்கும் போது பிளேடுகள் லூசாகி உள்ளதா என்பதைக் கவனித்து டைட்டு செய்து கொள்ள வேண்டும்.

அரைக்கும் பொருள்களுடன் பிளேடு சுலபமாக சுற்றக்கூடிய அளவு தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும். இல்லையெனில் பிளேடு உடையவோ, மோட்டார் எரியவோ நேரலாம். 
மிக்ஸி பிளேடு மழுங்கி விட்டால் வீட்டிலேயே சரி செய்ய
மசாலா பொருட்களை அரைத்தாலும் வெதுவெதுப்பான நீரில் சோப்பு ஆயில் கலந்து அதில் ஊற்றி 15 நிமிடங்கள் ஊற வைத்து பின் அலசி கழுவ வாசனை நீங்கி பிளேடுகளிலும் ஒட்டியில்லாமல் சுத்தமாக இருக்கும்.
விமானத்தின் உள்ளே சுவாசிப்பது எப்படி? 
இப்படி மாதம் ஒரு முறை செய்தால் ஜாரின் பிளேடுகள் நீண்ட நாள் உழைக்கும். உங்களுக்கு உதவ தடைபடாமல் இயங்கும்.

குறிப்பு :

பிளேடின் அடியில் படிந்த உணவு காய்ந்ததும், சுத்தம் செய்ய சிரமாமாகும் என்பதால், ஜார்களைப் பயன்படுத்திய பிறகு உடனடியாகக் கழுவ வேண்டும்.
பின் இருக்கையிலும் காற்றுப்பைகள் - மெர்சிடிஸ் பென்ஸ் !
ஜாரில் குறைந்த அளவு என்பது பிளேடு உள்ள வரை, அதிகளவு என்பது பாதியளவு மட்டுமே. அதாவது, குறைந்தது, பிளேடு பாகம் மூழ்கும் அளவுக்கும்… அதிக பட்சம், ஜாரின் பாதி வரையிலும் பொருட்களை நிரப்பிப் பயன்படுத்தலாம்.
Previous Post Next Post
COMMENTS... plz use me