சென்னை போன்ற பெரு நகரங்களில் வீடு வாங்க முடிவு செய்யும் குறிப்பிட்ட சதவிகித மக்களுக்கு உள்ள ஆரம்ப குழப்பம், அடுக்குமாடி குடியிருப்பில் ‘பிளாட்’ வாங்குவதா? அல்லது தனி வீடு வாங்குவதா? என்பதாகும்.
அந்த முடிவை எடுப்பதில் தனிப்பட்ட விருப்பம், குடும்ப ரீதியான நிர்பந்தம் மற்றும் பொருளாதார நிலை போன்றவை முக்கியமான இடத்தில் இருக்கின்றன.
அப்படி அபார்ட்மெண்ட் வீடு தான் வாங்க வேண்டும் என்றால் சில விஷயங்களை தெரிந்து கொண்டு ஏமாந்து விடாமல் உஷாராக இருக்க வேண்டும்.
ஒரு அபார்ட்மெண்ட் கட்டிக் கொண்டிருக்கும் போதே நாம் வாங்க முயன்றால் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது போல் சரியான நேரத்தில் நமக்கு அந்த வீட்டை ஒப்படைப்பார்களா? என்ற சந்தேகம் இருக்கும்.
ஒரு சில பில்டர்கள் தவிர பெரும்பாலான பில்டர்கள் சரியான நேரத்தில் வீட்டை ஒப்படைப்பதில்லை. அதற்குப் பதிலாக அவர்கள் நமக்கு ஒருசில குறிப்பிட்ட தொகையை அபராதமாகத் தருவதாக கூறுவார்கள்.
ஆனால் அந்த தொகையை அவர்கள் வேறு சில மறைமுக வழிகளில் நம்மிடமே கறந்து விடுவார்கள். எனவே சரியான நேரத்தில் ஒப்படைக்கும் பில்டரா அவர் என்பதைத் தெரிந்து கொண்டு ஒப்பந்தம் செய்யவும்.
பொதுவாக பத்திரங்களை சரி பார்த்துக் கொள்வது முக்கியம். பத்திரம் விற்பவர் பெயரில் வில்லங்கம் இல்லாமல், ரெஜிஸ்டர் ஆகி இருக்க வேண்டும். வெளியே ஆன்லைனில் கூட நாம் வில்லங்க சான்றிதழ் வாங்கிக் கொள்ளலாம்.
கான்கிரீட் கித்தான் எனப்படும் கான்கிரீட் கேன்வாஸ் !
நாம் பேங்கில் கடன் வாங்குகிறோம் என்றால், பேங்கில் உள்ள panel வக்கீல் இவற்றை எல்லாம் சரி பார்ப்பார். வீட்டில் என்ன வசதி உள்ளது, கோளாறு ஏதேனும் உள்ளதா என்பதை எல்லாம் ஒரு எஞ்சினியர் வைத்து வேல்யூ செய்து கொள்ளுங்க.
பேங்கில் கடன் வாங்கினால், அங்குள்ள approved என்ஜினீயரே இதை யெல்லாம் செய்வார். தடையில்லா தண்ணீர் வரத்து, காற்றோட்டம், மின்சாரம், கடை, பஸ் வசதி எல்லாமே கிடைக்கிறதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளவும்.
சின்ன சின்ன விஷயங்களையும் கவனமாக பார்த்த நாங்க, வீட்டின் சமையலறையில் அதிக கவனம் செலுத்தவில்லை. என்ன தான் கிச்சனில் ஜன்னல் இருந்தாலும், எப்போதும் இருட்டாக இருப்பது போலவே உள்ளது.
எல்லா பிளாட்களிலும் உள்ள பொதுவான பிரச்சனை என்ன வென்றால், சில வருடங்களிலேயே மேல்மாடி பிளாட்களிலிருந்து தண்ணீர் நமது சீலிங்கில் ஒழுகுவது தான். இது குறித்து, அக்கம் பக்கத்தினரை விசாரித்துக் கொள்ளவும்.
கான்கிரீட்டில் அரிப்பை சரி செய்ய !
ரொம்ப பிரச்சனை என்றால் அந்த இடத்தை தவிர்த்து விடவும். சொத்துவரி, அரசுக்கு செலுத்த வேண்டிய இதர வரிகள் எல்லாமே, சரியாக செலுத்தப்பட்டு No Dues இல்லாமல் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்க.
பேங்கில் லோன் வாங்கினால், mortgage registration, இன்சூரன்ஸ் இவை அனைத்தும் சரியாக கவனித்து மெயின்டைன் செய்ய வேண்டும். அபார்ட்மெண்டை நீங்களே இன்சூரன்ஸ் செய்து விடுங்க.
இல்லையெனில் பேங்க்காரங்க, உங்களிடம் சொல்லி விட்டு வருடா வருடம் உங்களது அக்கவுண்டிலிருந்து ஒரு தொகையை எடுத்துக் கொண்டு இருப்பார்கள்.
வீட்டிற்கான பணத்தை விற்பவரது வங்கி கணக்கிலோ அல்லது வேறு யாராவது வங்கி கணக்கிலோ செலுத்தினால் தான் பத்திரம் கிடைக்கும் என்றால், எவ்வளவு?
யார் அக்கவுண்டில்? செலுத்துகிறோம் என்பதற்கான official statement ஐ பேங்கில் இருந்து வாங்கி வர சொல்லுங்கள்.
ஜீரோ எனர்ஜி வீடு என்றால் என்ன?
பின்னர் அதனை கொண்டு, பேங்கில் குறிப்பிட்ட கணக்கில் செலுத்தி மறக்காமல் எல்லா பணத்தையும் கட்டி விட்டோம் என்று no dues உள்ளதை உறுதி செய்யுங்க.
பேங்கில் கடன் வாங்கியிருந்தால், அவர்களே எங்கு செலுத்த வேண்டுமோ அதற்கான Bankers' செக் தருவார்கள்.
வங்கியில் கொடுக்கும் எல்லா ரசீதுகளையும் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்க. திடீரென ஏதாவது கேட்டால், அப்போது தேடிக்கொண்டு இருக்காதீர்கள்.
Tags:
hous