கான்கிரீட் கித்தான் எனப்படும் கான்கிரீட் கேன்வாஸ் ! கான்கிரீட் கித்தான் எனப்படும் கான்கிரீட் கேன்வாஸ் ! - ETbuild

கான்கிரீட் கித்தான் எனப்படும் கான்கிரீட் கேன்வாஸ் !

தமிழில் கான்கிரீட் கித்தான் என அழைக்கப் படும் கான்கிரீட் கேன்வாஸ் என்கிற பொ ருளானது நம்மவர்க ளுக்கு ஒரு வேளை புதிய பொருளாக இருக்கும்.
ஆனால், 2004 ல் இருந்து பிரிட்டனில் இது பயன்படு த்தப்பட்டு வருகிறது.

லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த இரண்டு பொறியியல் மாணவர்கள் இதனைக் கண்டுபிடித் தார்கள்.

கான்கிரீட் கேன்வாஸ்  என்ற பெயரிலேயே ஒரு நிறுவன த்தையும் இவர்கள் 2005 இல் ஆரம்பித் தார்கள்.

இந்த நிறுவனம் கான் கிரீட்டால் ஆகிய கித்தா ன்கள். கூடார ங்களை அமைக்கத் தொடங்கியது.
இது வழக்க மான கித்தானின் வடிவத்துட ன்தான் இருக்கும். நீட்டலாம். சுருக்கலாம் .சுரு ட்டலாம். விரிக் கலாம். பரப்பலாம்.

வெட்டலாம். ஒட்டலாம். இந்த வேலைக ளைக் கச்சிதமாக முடித்துக் கொண்ட பின் அந்தக் கித்தான் துண்டு களின் மேல் தண்ணீரைத் தெளித்தால் போதும். இறுகிக் கெட்டியாகி விடும்.

இந்தக் கான்கிரீட் கித்தானை எந்த வகைக் கால் வாயிலும் பயன்படு த்தலாம் என்பது இதன் தனிச் சிறப்பு. அகலம் குறைவான கால்வாய் என்போம். கவலையே இல்லை.

கான்கிரீட் கித்தானைக் கால் வாயின் நீளவாக்கில் பதித்து விட வேண்டும். கால்வாய் அகலமா னதாக இருக்கிறதா?  ரொம்ப நல்லது.

அகல வாட்டத்தில் பதிக்க முடியும். கித்தான் துண்டுகள் இணைக் கப்பட வேண்டிய தேவை ஏற்படுகிறதா? அப்போதும் சிக்கல் இல்லை.

கித்தா னின் முனை களை ஒன்ஷூன் மேல் ஒன்று படியும் விதத்தில் வைத்துக் கொண்டு தண் ணீரைத் தெளித்தால் போதும். இந்த இடம் நன்றாக ஒட்டிக் கொண்டு விடும்.

கால் வாய்களின் ஒரு பக்கக் கரையில் ஆரம்பித்துச் செங்குத் தாகக் கீழே கொண்டு போய் அடிப்பரப்பில் விரித்து மறுகரையில் மீண்டும் செங்குத் தாக மேலே படியுமாறு கித்தானைப் பதிக்க வேண்டியதுதான்.

கால்வாயின் குறுக்கு வெட்டுத் தோற்றம் மிகச்சரியாக ‘ப’ வடிவில் இருக்க வேண்டும் என்பதில் லை.

இண்டு இடுக்குகள், சந்து பொந்து களைக் கொண்ட தாக இருந்தா லும் கித்தானை அதற்கேற்ப நீட்டி, மடக்கி, 

அழுத்திப் பொருத்தி விட முடியும். இந்த வேலைகள் முடிந்ததும் கித்தானின் மேல் தண்ணீரைத் தெளிக்க வேண்டும். அது கெட்டியாகி உறுதி பெற ஆரம்பி க்கும்.

இரண்டு மணி நேரம் வரை அத்தகைய கித்தா னின் மேல் செய்ய வேண்டிய வேலை களைச் செய்து கொள்ள முடியும்.

இருபத்து நான்கு மணி நேரத்தி ற்குள் கித்தான் கடினப் பட்டு 80 சதவீத அளவுக்கு உறுதியைப் பெற்று விடும்.

வேண்டிய அளவில் தேர்ந்தெடுக்கக் கான்கிரீட் கித்தான் தயார் நிலையில் கடைகளில் கிடைக் கிறது. சுருள் வடிவில் இதனை வாங்கிக் கொள்ள லாம்.

தேவை ப்படும் அளவுக ளுக்கேற்ப வெட்டிக் கொள்ளவும் முடியும்.

ஒரு மீட்டர் குறுக்களவு கொண்ட சுருள் வடிவில் இதனை விற்பனை க்கு விடுக்கி றார்கள். வழக்க மான அகலம் 1.1 மீட்டராக இருக்கும்.

4.5 மீட்டர் நீளம் கொண்ட சுருளாகச் சுருட்டி வைத்திரு ப்பார்கள். இத்தகைய சுருள் ஒன்ஷூன் எடை 60 கிலோ வரை இருக்கும்.

பெரிய அளவிலான பயன் பாட்டிற்குத் தேவைப்ப டுகிறது என்றால் 200 மீட்டர் நீளம் கொண்ட சுருளைத் தேர்ந்தெ டுக்கலாம்.

இது ஒன்றரை டன் வரையி லான எடை கொண்டதாகக் காணப்படும். அடுத்துக் கவனிக்க வேண்டிய முக்கிய மான அளவு, கான்கிரீட் கித்தானின் கனம் தடிமன்.

இது 5 மி.மீ, 8 மிமீ மற்றும் 13 மி.மீ ஆகிய அளவுகளில் கிடை க்கிறது.

இட, எடை வசதி கான்கிரீட் கித் தான் ஒரு ஆள் எளிதாகத் தூக்கிச் செல்லக் கூடிய எடை உள்ள அளவில் சுருட்டப் பட்டுக் கிடைக்கிறது.

வேலை நடக்க வேண்டிய இடம் எளிதில் அணுக முடியாததாக இருக்கிறதா? கன ரக இயந்தி ரங்களை அங்கு கொண்டு செல்ல இயலாதா? ஒரே ஆள் தூக்கிச் செல்லக் கூடிய அளவிலான கான்கிரீட் கித்தான் 

சுருள்களைத் தேர்ந்தெடு க்கலாம்.அளவில் பெரிய வேலை. நல்ல போக்குவரத்து வசதி.

இத்தகைய சூழ்நி லைகளில் அதிக அகலம், நீளம், எடை கொண்ட கான்கிரீட் கித்தான் களைப் பயன் படுத்தலாம்.

கலவை போட வேண்டிய அவசியமே இல்லை. கலவை போடுவ தற்குத் தேவை இல்லை என்பதால் கலக்க வேண்டிய பொருட் களை எடை போட்டோ, கன அளவைக் கணக் கிட்டோ அளந்து போட அவசியமே இல்லை.

எப்போதும் தண்ணீர் தேங்கியே இருக்கக் கூடிய சூழ்நிலை இருந்தாலும் தப்பில்லை.

தண்ணீருக்கு அடியிலே யேயும் கான்கிரீட் கித்தானைப் பயன் படுத்தலாம். அவ்வ ளவு ஏன்..

கடுமை யான கடினநீர், உப்புத் தண்ணீர், கடல் தண்ணீ ரிலும் கூடக் கான்கிரீட் கித்தான் திறம்பட வேலை செய்யும்.
படு வேகம் தண்ணீர் தெளிக்கப் பட்டு இரண்டு மணி நேரம் வரை கான்கிரீட் கித்தானில் செய்ய வேண்டிய வேலைகள் எல்லா வற்றையும் செய்து முடித்து விடலாம். அதற்குப் பின் ஒரு நாள் இடைவெளி விட்டால் போதும்.

எண்பது சதவீ தம் வரை உறுதி ப்பட்டு விடும். வேக வேகமாகக் கெட்டிப்பட வேண்டும் என்றாலும் கொஞ்சம் மெதுவா கவே இறுகினால் நல்லது என்று நினை த்தாலும் சரி..

கான்கிரீட் கித்தான் எதற்கும் ஏற்றதாகத் தயாரித்துத் தரப்படும். தேவை எப்படி என்பதைத் தெரிவி த்தால் போதும்.

மாசுக்கே இடமில்லை கான்கிரீட் கித்தானால் சுற்றுச் சூழல் மாசுபடும் என்கிற பேச்சுக்கே இட மில்லை. கான்கிரீட் கித்தான் எடை குறை  வானது .

இதன் உற்ப த்தி யிலும் பயன் பாட்டிலும் உழைப்பிலும் கரியமில வாயு உருவாக் கப்படும் அபாயம் இல்லை. இதனால் புவி வெப்ப மயமாகும் ஆபத்தும் இல்லை.

பலவிதத் தேவைகளு க்கான கான்கிரீட் கித்தானைத் தயாரிப் பதில் வழக்க மான கான் கிரீட்டுக்குத் தேவைப்படும் மூலப் பொருட்களில் 95% வரை மிச்சப்படு த்தலாம்.

கான்கிரீட் கித்தானில் காரத்தன்மை மிக மிகக் குறைவு. தண்ணீரால் கரைக்கப் பட்டு அரித்துச் செல்லப் பட்டுவிடு மோ என்றும் அஞ்சத் தேவை யில்லை. 

மேலும் கான்கிரீட் கித்தானைப் பயன் படுத்து வதற்குப் பெரிய இயந்திரங்களோ, சாதனங்களோ, மின் சக்தியோ தேவைப் படாது.

கான்கிரீட் கித்தானை எந்த வடிவத்தின் மீதும் கச்சிதமாகப் படியும்படி போர்த்த லாம். பதிக்கலாம். மூடலாம்.

சந்து பொந்து களையும் எளிதாக அடைக் கலாம். இரட்டை வளைவு களைக் கொண்ட வடிவங் களின் மீதும் கச்சிதமா கப் பொருத்தலாம்.

இன்னும் சரியாகப் படியாமல் இருக்கிறது என்கிற சந்தேகம் வந்தால் அந்தப் பகுதியை மட்டும் வெட்டி அப்புறப் படுத்தி விட்டு வேறு துண்டைப் பொருத்த லாம். 

இதற்குச் சாதாரண மாகப் பயன்படுத் தப்படும் கைக் கருவிகளே போதுமா னவை.

கான்கிரீட் கித்தான் உறுதி யானது. இதில் வெடிப்புகள், விரிச ல்கள் ஏற்படாது. சம் மட் டியால் அடித்தாலும் அடியை வாங்கிக் கொண்டு படிமான மாகவே இருக்கும்.

கிழிசல், துளைகள் போன்ற தொல் லைகளும் ஏற்படாது. எந்தத் தேவைக் காக எடுத்துக் கொள்கி றோமோ அந்தத் தேவை நிறை வேற வில்லை என்கிற குறை உருவாகாது.

கான்கிரீட் கித்தான் எந்தவொரு வேதிப் பொரு ளாலும் பாதிக்கப் படாது.

பருவ நிலை மாற்ற ங்களால் சிதை வடையாது. புறஊதாக் கதிர்களால் சேதம டையும் போக்கும் காணப் படாது.

எனவே, கான்கிரீட் கித்தான் நீண்ட காலம் பழுதின்ஷூ உழைக்கும். கான்கிரீட் கித்தானின் ஊடாகத் தண்ணீர் உட்புகாது. 

இதன் ஒரு பரப்பில் பாலி வினைல் க்ளோரைட் படலம் பொருத்தப் பட்டிருப்ப தால் தண்ணீர்க் கசிவு என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

வேதிப் பொருட் களாலும் அரிப்பு ஏற்படாது. கான்கிரீட் கித்தானில் தீப்பிடி க்காது.

இதைப் பயன்படுத்தி உருவாக்கப் பட்ட பரப்பின் மேல் வேறு வகையில் தீ பற்ஷூ எரிந்தாலும் அதன் சுவாலை களைக் கான்கிரீட் கித்தான் பரவ விடாது.

புகை உருவா வதற்கும் வாய்ப்புக் குறைவு. தீங்கு விளை விக்கக் கூடிய வாயுக்கள் வெளியேற் றப்படுமோ என்றும் அஞ்சத் தேவை யில்லை. 

ஐரோப்பியத் தரக் கட்டுப் பாட்டு விதி முறைகளுக் கேற்பக் கான்கிரீட் கித்தான் தயாரிக்கப் படுகிறது.

கான்கிரீட் கித்தானை இப்படி யெல்லாம் பயன்படு த்தலாம் சுரங்க ங்களை வெட்டிக் கொண்டு செல்லும் போது மேல், பக்க வாட்டுச் சுவர்கள் சரிய ஆரம் பிப்பது உண்டு.

இதை முட்டுக் கொடுத்துத் தாங்கிப் பிடிக்க வேண்டும்.சரிவுக ளைத் தடுக்கவும் முட்டுக் கொடுக்கும் தூண்களை உருவாக்கவும் கான்கிரீட் கித்தான் பெரிதும் கை கொடு க்கும்.

ஓரிடத்தில் கலவை கலக்க வேண்டும். பொருட்க ளைக் கொட்டி வைக்க வேண்டும். காய விட வேண்டும்.

வெறும் தரையில் போட்டால் மண் ஒட்டிக் கொள் ளும். இந்த வேலைகள் ஒருசில நாட்களுக்கு மட்டுமே அந்த இடத்தில் நடத்தப் பட வேண்டும். 

இது போன்ற தேவைக ளுக்குக் கான்கிரீட் கித்தானைக் கொண்டு சீரான சமத ளத்தைக் கொண்ட பரப்பை வெகு விரைவில் அமைத்து விடலாம்.

குறைந்த செலவில் தற்காலிகப் பயன்பா ட்டிற்கு வைத்துக் கொள்ளலாம். தேவை முடிந்ததும் அப்புறப் படுத்தி விடலாம்.

குடிநீரைக் கொண்டு செல்வத ற்குப் பல விதங்களில் பைப் லைன்களை அமைப் பார்கள்.

இந்தக் குழாய்ப் பாதைகள் தரையோடு தரையாக அமைக்கப் படுவதும் உண்டு. தரைக்குக் கீழ் பள்ளம் தோண்டிப் பதிக்கப் படுவதும் நடக்கும்.

இப்படி எந்த வகையில்அமைக் கப்பட்ட குழாய்ப் பாதையாக இருந் தாலும் அந்தக் குழாய் களுக்கு எந்த விதச் சேதமும் ஏற்படாத வகையில் கான்கிரீட் கித்தான் கொண்டு மூடலாம்.

இரும்புக் குழாய்க ளையும் கூடக் கான்கிரீட் கித்தா னால் போர்த்திப் பாதுகாக் கலாம்.
தற்போது இரும்புக் குழாய்க ளுக்குப் பாதுகாப்பு அளிக்கக் கான்கிரீட் கலவை யைக் கலந்து போடும் முறை தான் பெரிய அளவில் பின்பற்றப் படுகிறது.

கான்கிரீட் கித்தான் இந்தத் தேவையை வெகுவாகக் குறைத்து விடும். சில குழாய்கள் தண்ணீரு க்கடியில் பதிக்கப்பட வேண்டி இருக்கும். 

பிவிசி முதலிய வற்றால் ஆகிய குழாய்கள் தண்ணீ ருக்குள் மூழ்காமல் மிதந்தபடி இருக்க முயல்வதும் நடக்கும்.

அவ்வாறு மிதக்கும் நிலையில் இருக்கும் குழாய் களைத் தண்ணீருக் கடியில் தரையோடு ஒட்டிப் பதிய வைக்கவும் கான்கிரீட் கித்தானைப் பயன்ப டுத்தலாம்.

பல வகையான கேபிள்களைத் தரைக் கடியில் புதைத்து எடுத்துச் செல்கி றார்கள்.

 கான்கிரீட் கித்தானைக் கொண்டு மூடலாம்.. சில இடங்களில் கேபிள்களை மண் ஓடுகளால் பாதுகாப்பாக மூடி இருப்பார்கள்.

அத்தகைய ஓடுகள் உடைந்து விடாமல் இருக்க வேண்டு மானால் அவற்றைக் கான்கிரீட் கித்தான் கொண்டு மூடுவது சிறந்தது.

சரிவான தளங்களில் மனிதர்கள், விலங்குகள், வாகனங்கள் செல்வதைத் தடை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படலாம்.

இம்மாதிரி யான தேவைகள் எல்லாவ ற்றிற்கும் கான்கிரீட் கித்தான் பொருத்த மான தேர்வாக அமையும்.

சிறு அணைக் கட்டுகளின் சுவர்களைப் பலப் படுத்தும் நடவடிக்கை களுக்கும் இதைப் பயன்படுத் தலாம்.

கரைகளில் வேதிப் பொரு ட்களால் அரிப்பு ஏற்படக் கூடிய அபாயம் இருக்கிறதா?

அதையும் தடுக்கக் கான்கிரீட் கித் தான் பயன் படுத்தப் படலாம். கான் கிரீட்டால் சுவர் எழுப்ப வேண்டி  இருப்பதைத் தவிர்க் கலாம்.

இதனால் கணிசமான அளவில் பொருட் சிக்கனம் ஏற்படும்.

காண்ட்ராக்டர் களுக்குக் கை கொடுக்கும் கான்கிரீட் கித்தான்கழிவு நீர்க் கால்வா ய்களின் கரைகளை வலுப்ப டுத்திக் கசிவி ல்லாமல் செய்ய வேண்டும்.

இந்த வேலைகளு க்கான ஒப்பந்தத்தை எடுத்திருக் கிறீர்களா? வழக்கமான முறையில் கான்கிரீட் கலவை தயாரித்துக் கொட்டும் வேலையை நிறுத்திக் கொள்ளு ங்கள்.

நீங்கள் அதற்குப் பதிலாகக் கான்கிரீட் கித்தானைப் பயன்படு த்தலாம்.

இது சிக்கன மானது. விரைவாக வேலை களை முடிக்க உதவுவது. பயன் பாட்டில் எந்தக் குறைக்கும் இடம் கொடுக்காதது.

நீடித்து உழைப்பது. நீளவா க்கில் கரைகளைப் பயன்படுத்த வேண்டிய தேவைக ளுக்கு வழக்கமான கான்கிரீட் முறையை விடக் கான்கிரீட் கித்தான் முறை பெரிதும் இலாபகர மானது.

100 ச. மீ பரப்பிற்குக் குறுக்காக லைனிங் செய்ய வேண்டிய வேலையா? கான்கிரீட் லைனிங் கொடுக்க ஆகும் கலவைப் பொருள், ஆட்கூலி ஆகியவ ற்றைக் கணக்குப் போடுங்கள்.

ஒரே நாளில் மூன்றே மூன்று ஆட்களை வைத்துக் கொண்டு இந்த வேலை யைக் கான்கிரீட் கித்தான் மூலம் முடித்து விடலாம். ஒப்பிட்டுப் பாருங்கள்.

பாயைச் சுருட்டி எடுத்து வருவதைப் போலவே கான்கிரீட் கித்தானைக் கொண்டு வந்து விடலாம்.

இதைத் தேவைப் படும் இடத்திற்கு எடுத்துச் செல்வத ற்காக விசேஷஷ  வாகனம் எதையும் தேடிக் கொண்டி ருக்க வேண்டிய தில்லை.

வேதிப் பொருட்களால் அரிப்பு ஏற்படும் என்பதும் கிடையாது. பருவ நிலை மாற்ற ங்களை நன்றாகவே தாக்குப் பிடிக்கும்.

தீப்பற்றும் தன்மை அறவே இல்லை.வெடிப்புகள் ஏற்படாது . மோதல் களையும் அதிர்ச்சி களையும் தாக்குப் பிடித்து நிற்கும்.

230 கிலோ எடை கொண்ட கான்கிரீட் கித்தானை எடுத்துக் கொண்டால் 172 சதுர அடிப்ப ரப்பை மூடலாம். இதில் கூரைப் பகுதி 16 சதுர மீட்டர் உடைய தாக இருக்கும். செலவு?

வழக்க மான செலவைக் காட்டிலும் மூன்றில் ஒரு பகுதிக்கும் குறை வாகவே முடித்து விடலாம்.

கால்வாய்க் கரைக ளையும் தளத்தையும் பாதுகாக்கும் விதத்தில் கான்கிரீட் கித்தானைப் பயன்படு த்தலாம்.

விரித்துப்பரப்பிப் பொருத்தி விட்டால் போதும். தண்ணீர்க் கசிவு, ஊறல் என்று எந்தப் பிரச்ச னையும் இருக்காது.

வழக்கமான முறையில் இந்த வேலைகளைச் செய்ய பள்ளம் எடுக்க வேண்டும். பலகை அடைக்க  வேண்டும் .

கலவை போட வேண்டும். படிய விட வேண்டும்.நீராற்ற வேண்டும்.
கான்கிரீட் கித்தானைப் பயன்படு த்தினால் இது மாதிரி யான தேவைகள் எதுவும் இல்லை.

 நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் வேலை களை முடித்து விடலாம்.

இதற்கென்று தனிக் கருவிகள் எதுவும் தேவைப் படாது. 30 மீட்டர் நீளம் கொண்ட ஒரு கழிவு நீர்க்கா ல்வாய் வேலையை வெறும் முக்கால் மணி நேரத்தில் முடித்து விடலாம்.

கணக்குப் போட்டுப் பார்த்தீர்கள் என்றால் வழக்க மான முறையில் கான்கிரீட் கலவை யைத் தயாரித்துப் பயன்படுத் துவதைக் காட்டிலும்

தயார் நிலையில் கிடைக்கும் கான்கிரீட் கித்தானை வாங்கிப் பயன்படு த்துவது பல்வேறு வகைக ளில் விரும்பத்த க்கதாக இருக்கும்.

வழக்கமான முறையில் ஏற்படுத் தப்படும் கான்கிரீட் பாதுகாப்பு என்போம். இதற்காக 100 மி.மீ கனம் கொண்ட கான்கிரீட் இடப்படுவதாக வைத்துக் கொள்வோம்.

இதே அளவு பாதுகாப்பை வெறும் 8 மி.மீ கனம் கொண்ட கான்கிரீட் கித்தானைப் பயன்படு த்துவதன் மூலம் பெற்று விடலாம்.

கான்கிரீட் கித்தானில் வீணாவது என்று எதுவும் இல்லை.

அப்படியே வீணாகிறது என்றாலும் அது மிக மிகக் குறைந்த அளவுக்கே இருக்கும். மறு சுழற்சி செய்து மீண்டும் பயன் படுத்திக் கொள்ளவும் முடியும்.

கான்கிரீட் உருவாக்கத் திற்குத் தேவைப்படும் பொருட் களைக் காட்டிலும் பத்தில் ஒரு பங்கு பொருட் களைக் கொண்டே கான்கிரீட் கித்தான் உற்பத்தி செய்யப் படுகிறது. 
Previous Post Next Post
COMMENTS... plz use me