நீர்கசிவு விரிசல்களை தடுக்கும் பெனிட்ரான் அட்மிக்ஸ் ! நீர்கசிவு விரிசல்களை தடுக்கும் பெனிட்ரான் அட்மிக்ஸ் ! - ETbuild

நீர்கசிவு விரிசல்களை தடுக்கும் பெனிட்ரான் அட்மிக்ஸ் !

கட்டுமான வேலைகள் நடைபெறும் நேரத்திலேயே நீர்க்கசி வையும் வெடிப்பு களையும் தடுக்கவல்ல
சேர்மானப் பொருளாக உலகெ ங்கும் புகழ் பெற்றிரு க்கிறது பெனிட்ரான் அட்மிக்ஸ் (Penetron Admix) எனப்படும் கலவை.

இது அண்மைக் கால அதி நவீனக் கண்டு பிடிப்பு. கான் கிரீட்டுக்குள் தண்ணீர் புகாமல் தடுக்கும் வேலையைத் திறம் படச் செய்வதில் ஈடு இணை யற்றது.
 
பெனிட்ரான் அட்மிக்ஸ் கலவையை கான்கிரீட்டைத் தயாரிக்கும் இடத்தி லேயே, தயாரிப்பு வேலைகள்  நடக்கும் போதே கலக்கலாம்.

ஆலைகளில் தயாரித்து எடுத்து வரப்படும் கான்கிரீட் எனில் அந்த ஆலைக ளிலேயே கலந்து கொள்ளலாம்.

கட்டட வேலைகள் நடைபெறும் இடத்திலேயே கான்கிரீட் தயாரிக்கப் படுவதாக இருந்தால் அதே இடத்தி லேயும் கலக்கலாம்.

பெனிட்ரான் அட்மிக்ஸ் சேர்மானத்தைக் கான்கிரீட்டுடன் எவ்வளவு அளவுக் குக் கலப்பது?

கான் கிரீட்டில் இடம் பெற்றி ருக்கும் சிமெண்ட் தன்மை கொண்ட பொருட் களின் எடையில் நூற்றுக்கு   0.8 என்ற விகித த்தில் கலந்தால் போதும்.

இந்த முறையைப் பயன்படுத்துவது மிகமிகச் சிக்கன மானதாக இருக்கும்.

தண்ணீர்க் கசிவுத் தடுப்பு நடவடிக்கை களுக்காக மீண்டும் தனி வேலைக ளைச் செய்ய வேண்டிய தேவை ஏற்படாது.
ஏற்கனவே இடப்பட் டுள்ள கான்கிரீட்டா? அதனால் பரவா யில்லை.

அதன் மீதும் பெனிட்ரான் அட்மிக்ஸ் கலவையைப் பயன்படு த்தலாம். ஆலை களில் முன்ன தாகவே தயாரித்து வைத்துக் கொண்டு தேவைப் படும் இடத்தில்,

நேரத்தில் பயன்படுத் தப்படும் ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவை களிலும் இதைச் சேர்க்கலாம்.

நிரூபணம் தேவையா?

பெனிட்ரான் அட்மிக்ஸ் கலவையின் பலன் களைக் சோதித்துப் பார்ப்ப தற்காக

அமெரிக் காவின் அயோவா மாநிலத்தில்  ஒரு கட்டுமான த்தில் சில சோதனை களை மேற்கொ ண்டார்கள்.

ஒரு பெரிய தண்ணீர்த் தொட்டி கட்டும் வேலை. அதில் இந்தக் கலவை யைப் பயன்படு த்தினார்கள்.

ஆரம்பத்தில் பெரிய வேறுபாடு எதுவும் தெரிய வில்லை. இன்னும் சொல்லப் போனால் ஆங்காங்கே தண்ணீர் கசிந்து வெளியேறுவதைப் பார்க்க முடிந்தது.

ஒன்றிரண்டு நாட்களுக்குப் பின் இந்தக் கசிவின் வேகம் குறைந்தது. சொட்டுச் சொட்டாக மட்டுமே நீர் வெளியேறியது.
தொட்டியில் இருந்த நீர் ஆவியாகி வெளியேறும் இடங்களில் மட்டும் ஈரம் தென் பட்டது.

இது தொட்டியின் விளிம்பி லிருந்து 7 முதல் 10 செ.மீ ஆழம் வரை காண ப்பட்டது.

இந்த நேரத்தி ற்குப் பிறகு, படிகங்கள் உருவாகி வருவதை வெறும் கண்களா லேயே பார்க்க முடிந்தது.

வெடிப் புகளை இந்தப் படிவங்கள் அடைத்துக் கொள் வதைக் கண்ணால் காண முடிந்தது.
 
முழுமையாக ஏழு நாட்கள் கழிந்த பிறகு எந்த வொரு வெடிப்பும் படிகங் களால் அடைக்க ப்படாமல் இல்லை என்பதை உணர்ந் தார்கள்.

படிகங்கள் தாமே வளர்ந்து வெடிப் புகளை அடைத்துக் கொள்கி ன்றன என்பது சந்தேகத் திற்கு இடமில்லாமல் நிரூபணம் ஆயிற்று.

கடலுக்குள்ளும் வேலை செய்ய ஏற்ற பெனிட்ரான் அட்மிக்ஸ்

கடலுக்குள் அமைக்கப் பட்டுள்ள கட்டுமான ங்களைப் பராமரி க்கவும் பழுது பார்க்கவும் எழும் தேவைகள் பல விதமா னவை. துறை முகங்கள், கப்பல் கட்டும் தளங்கள்,

ஆழ் கடல் துரப்பண மேடைகள் போன்ற இடங்களில் உள்ள கட்டு மானங்க ளின் பெரும் பகுதி எப்போதும் கடல் தண்ணீ ருக்குள் தான் மூழ்கிக் கிடக்கும்.

கடல் தண்ணீரில் உள்ள குளோரைட் கான்கிரீட்டுக்குள் புக நேர்ந்தால் கம்பிகளை அரித்து விடும். கம்பிகள் விரைவில் இற்றுப் போய் விழுந்து விடும்.

இது போன்ற தொல்லைகளைத் தடுக்க வேண்டுமானால் பெனிட்ரான் அட்மிக்ஸ் கலவையைப் பயன்படுத்துவது சிறந்த பாதுகாப்பு ஏற்பாடாக அமையும். 
Previous Post Next Post
COMMENTS... plz use me