ப்ளே-ஆஷ் கற்கள் ( fly ash stone) பறக்கும் சாம்பலில் கட்டுமானக் கற்கள் ! ப்ளே-ஆஷ் கற்கள் ( fly ash stone) பறக்கும் சாம்பலில் கட்டுமானக் கற்கள் ! - ETbuild

ப்ளே-ஆஷ் கற்கள் ( fly ash stone) பறக்கும் சாம்பலில் கட்டுமானக் கற்கள் !

இன்றைக்கு ஆற்று மணலு க்குத் தட்டுப்பாடு உள்ளது போல் செங்கற் களுக்கும் தட்டுப்பாடு தான்.
தமிழ்நாடு முழுவதும் செங்கற்கள் தயாரிக்கப்படு வதில்லை. சில இடங்களில் மட்டுமே தயாரிக்கப் படுகின்றன.

அதனால் ஒரு பகுதியில் தயாரிக்க ப்படும் செங்கல்லை மற்றொரு பகுதியில் கொண்டு சென்று விற்கும் போது இயல் பாகவே விலை கூடுதல் ஆகிவிடும். 

மேலும் செங்கல் தயாரிப் புக்கான மண்ணை எடுப்பதால் இயற்கை வளம் பாதிக்க ப்படும்.

செங்கலை உண்டாக்க உலை இடுவ தற்கும் விறகுகள் பயன் படுத்தப் படுகின்றன.

அதனால் இயற்கை வளம் பாதிக்க ப்படும். இந்தச் சூழலில் தான் மாற்றுக் கட்டுமானக் கற்கள் புழக்க த்துக்கு வந்தன. 
அவற்றுள் ஒன்று தான் ப்ளே-ஆஷ் கற்கள். இது மரபான செங்கல்லைக் காட்டிலும் சிறந்தது;

நீடித்து உழைக்கக் கூடியது. ஆனால் இந்தக் கற்களைக் குறித்த விழிப்பு ணர்வு இன்னும் மக்கள் மத்தியில் வரவில்லை. 

சுற்றுச் சுவர் கட்டுவதற்கு மட்டுமே இந்த வகைக் கற்கள் பயன் படுகின்றன.
இவற்றை வீடு கட்டப் பயன்படுத்தும் போது சிமெண்ட் பயன்பாடும் குறைய வாய்ப்பி ருக்கிறது.

ப்ளே-ஆஷ் கற்கள், ஹல்லோ ப்ளாக் கற்கள் தயாரிப்பு முறைப் படிதான் தயாரிக்ப் படுகின்றன. 
இதன் முக்கிய மான மூலப் பொருள் நிலக்கரிச் சாம்பல். அதாவது தொழிற் சாலைகளில் பறக்கும் நிலக்கரிச் சாம்பல்.

அதனால் ப்ளே-ஆஷ் கற்கள் என்ற பெயர் இதற்கு வருகிறது. நிலக்கரிச் சாம்பலுடன் மணல், சுண்ணாம்புக் கல், ஜிப்சம் ஆகியவ ற்றையும் சேர்க்கிறார்கள். 

இந்தக் கலவை களுடன் தண்ணீரும் சேர்க்கப் படுகிறது. இது மரபான செங்கல் லுடன் ஒப்பிடும் போது எடை குறைவு.

மேலே சிமெண்ட் பூச வேண்டிய அவசி யம் இல்லை.  
Previous Post Next Post
COMMENTS... plz use me