நிலநடுக்கம் ஏற்பட்டால் தாங்கும் கட்டிடம் ! - ETbuild

நிலநடுக்கம் ஏற்பட்டால் தாங்கும் கட்டிடம் !

பூமியின் மேல் பகுதி ஏழு பெரிய தட்டுக்க ளாலும் (tectonoic plates) பல சிறிய தட்டுக்க ளாலும் ஆனது உள் பகுதி கொதிக்கும் குழம்பு நிலையான லாவா வால் ஆனது.
இத்தட்டு க்களின் தடிமானம் ஏறத்தாழ 50 மைல்கள் இருக்க லாம் எனக் கணிக்கப் படுகிறது.

இத்தட்டுக் களில் வட அமெரிக்கத் தட்டு, தென் அமெரிக்கத் தட்டு, ஆப்பிரிக் காத் தட்டு, 

யூரேசியன் தட்டு, பசிபிக் தட்டு, ஆஸ்தி ரேலியத் தட்டு, அண்டார் டிகா தட்டு ஆகிய ஏழும் பெரிய தட்டுகளாக இருக் கின்றன. 

(ஆஸ்திரேலிய இந்தியத் தட்டில் நமது இந்தியா உள்ளது). இதில் கடலுக் கடியில் உள்ளதைக் கடல் தட்டு (oceamic plates) என்றும்,

நிலத்திற் கடியில் உள்ளதைக் கண்டத் தட்டு (continental plates) என்றும் ஆய்வா ளர்கள் வகையிட் டுள்ளனர்.
இத்தட்டுகள் ஒன்றுக் கொன்று பல திசைகளில் ஓர் ஆண்டு க்குச் சில அங்குல ங்கள் என நகர்ந்து கொண்டிருக் கின்றன. இவை நகர்வ தால் ஒன்றுக் கொன்று இடித்துக் கொள்ள லாம் (convergent),

இதில் கடல் தட்டும், கண்டத் தட்டும் மோதும் போது கடல் தட்டு கீழிறங்கிக் கடலில் ஆழமான பள்ளம் உருவா கிறது.

கண்டத் தட்டும், கண்டத் தட்டும் மோதும் போது நிலம் உயர்ந்து மலைத் தொடர் உருவா கலாம். 

நில நடுக்கம் 
 
சில நேரங்களில் பூமித்தட் டுகள் ஒன்றுக் கொன்று விலகிச் செல்லலாம் (divregent).

இதனால் இடைவெளி ஏற்பட்டு சூடான, பாறைக் குழம்பு (lava) பூமிக்கு உள்ளிருந்து வெளியே வந்து குளிர்ந்து தரை போல் ஆகி விடும். 

இவ்வாறா கக் கடல் விரிவடை வதும்,கண்டங்கள் விலகுவதும் (continental drift) நடை பெறுகின்றன.

மற்றொரு வகையில் பூமித் தட்டுகள் சமதளத் திலும் (transform-falut) நகரலாம். இதனால் தட்டுகளின் முனைப் பகுதி உரசி நில நடுக்கம் ஏற்படுகிறது. 

பூமித் தட்டுக் குக் கீழே எரிமலைக் குழம்புகளில் கதிரியக்கப் பொருட்கள் அழிவி னால் வெப்பம் உருவாக்கப் பட்டுப் பூமித் தட்டு களை வெடிக்கச் செய்கிறது. 

இப்படிப் பிளவுகள் அதிகரித்து நிலப் பரப்பை அகற்றிப் பரப்புக் கிடையே பள்ளம் உருவா கிறது.

தொடர்ந்து பிளவுறும் பகுதியில் கடல் நீர் உட்புகும் வாய்ப் புள்ளது. 

பூகம்பங் களின் போது கட்டிடங்கள் பக்க வாட்டு அதிர்வுகளால் அதிகம் பாதிக்கப் பட்டுக் கட்டிட த்தின் பக்கங்கள் குவிய லாகச் சரிகின்றன. 

எப்படித் தடுக்கலாம்? 
 
இதைத் தவிர்க்க உலக அளவில் சில பரிந்து ரைகள் முன் வைக்கப் படுகின்றன.

கட்டிடம் பக்க வாட்டு அழுத்ததைத் தாங்கும் திறனை அனைத்துத் திசைக ளிலும் பெறுதல் வேண்டும். 

பக்க வாட்டு அழுத்த த்தைப் பூமிக்குச் செலுத்தும் தன்மை பெறுதல் வேண்டும்.

தற்போதைய முறை களுக்கு மாற்றான பக்க வாட்டு அழுத்த தைத் தாங்கும் உத்தி அமைக்க வேண்டும் .

(புவியியல் மண்ட லத்தைப் பொறுத்து, சூழலுக்கு ஏற்ப). 

கட்டிடத்தின் அனைத்து பாகங் களும், அமைப்புகளும் சுமை களைத் தாங்கும் திறன் பெறுதல்,

கட்டிட த்தின் அனைத்து அடி பாகங் களும், அமைப்பு களும் ஒன்றுடன் ஒன்று இணைக்க பெறுதல் ஆகியவை வேண்டும்.

கட்டமை ப்பில் கட்டுமான பலவீனம் ஏற்படா தவாறு தவிர்க்க வேண்டும்.

சுலபமாக உடையும் தன்மை யுள்ள கட்டுமானப் பொருட் களைப் பயன் படுத்தக் கூடாது.

புவியியல் மண்டல த்தைப் பொறுத்து, மண்ணின் தன்மைக்கு ஏற்ற, சூழலு க்கு உகந்த அஸ்திவாரத்தை அமைக்க வேண்டும். 

கட்டமை ப்பில் உறுதியைத் தரும் சுவரை அமைக்க வேண்டும் (காங்கிரீட் சுவர், வங்கி பாதுகாப்பு அறை (safe room) லிப்ட் சுவரைப் போன்றது). 

திடீர் முடுக்கங் களைத் தாங்கும் திறன், அதற்கு இசைந்து கொடுக்கும் திறன் பெற்ற கூடு போன்ற அமைப்பு இருக்க வேண்டும். 

இது அழுத்த த்தையும், நெருக்க த்தையும், எதிர் கொள்ளும் வகையில் இருக்க வேண்டும்.

நில நடுக்க த்தின் போது ஏற்படும் பக்க வாட்டு அதிர்வு, எதிர் முடுக்க அதிர்வு ஆகிய வற்றால் கட்டிட த்தின் அமைப் புகள் உடையா மலும், 

சிதறாம லும், சுவர்கள் சரியாம லும் இருக்க, வணிகக் கட்டிட த்தைச் சுற்றித் திறந்த வெளி அமைக் கலாம் என்பது போன்ற சில யோசனை கள் முன் வைக்கப் படுகின்றன. 

கட்டுமான த்தில் மாற்றம் 
 
கட்டிடங்க ளுக்கான கம்பிகளை அதிகரிப் பதன் மூலம் அதிர்வைத் தாங்கும் வடிவமை ப்புகள் உருவாக்கப் படுகின்றன.

அடித்த ளத்தில் ரப்பர் மெத்தைகள் வைக்கும் யோச னையும் தற்போது ஆய்வில் இருக் கிறது.
அடித்தள த்தில் நகரக்கூடிய சிறுசிறு சக்கரங் களைப் பொறுத்தி அதிர்வு கேற்ப கட்டிடம் இசைந்து நகரும் முறை களும் சிலரால் முன் வைக்கப் படுகின்றன. 

அடித்தளத் தில் அதிர்வுகேற்ப தாங்கும் ஹைட்ராலிக் ஜாக் பொருத்திப் பார்க்கப் படுகிறது. மர வீடுகளும் பரிந் துரைக்கப் படுகின்றன. 

கன்டெய்னர் வீடுகள் பரிந்து ரைக்கப் படுகின்றன. இந்தியத் தர நிர்ணயக் கழகமும் நில நடுக்க த்தைத் தாங்கும் கட்டு மானத்துக் கான நெறி முறையை வகுத் துள்ளது. 
Previous Post Next Post
COMMENTS... plz use me