வீட்டின் அஸ்திவாரமும் அதில் ஏற்படும் பிரச்சினைகளும் ! வீட்டின் அஸ்திவாரமும் அதில் ஏற்படும் பிரச்சினைகளும் ! - ETbuild

வீட்டின் அஸ்திவாரமும் அதில் ஏற்படும் பிரச்சினைகளும் !

அஸ்தி வாரம் என்பது கட்டிடங்கள் மிக உறுதியாக காலங்கள் கடந்து நீடித்து நிலைக்க உதவுவது.
இதில் கட்டிடங் களின் பழுதுகளை, பலவீனங் களை நீக்கிப் பலப்படுத்தி மறுசீரமை க்கிறோம்.

ஆனால் கட்டிட ங்களின் தரையின் கீழ் ஏற்படும் சீர்கேடு களையும் அஸ்தி வாரப் பழுது களையும் சோதிக்கவோ நீக்கி மறுசீரமை க்கவோ எளிதான, பாதுகாப்பான,

நடை முறைக்குச் சாத்தி யமான வழி முறைகளைக் கண்டறிய ஆய்வுகளே இனி மேல் தான் தொடங்கப் பட வேண்டும் என்பது மிகவும் கசப்பான உண்மை.

அஸ்திவார த்தில் பல வகைகளில் பழுது ஏற்படும். அவற்றுள் மூன்று முக்கிய வகை களைச் சொல்லலாம். 

முதல் வகை
 
வடிவமைப்பு குறைபாடு, மூலப் பொருட்களில் தரக் குறைபாடு, பொருட் சேர்க்கை களில் நேரும் விகிதாச்சாரத் தவறுகள்

மற்றும் தரமான கட்டுமான முறை களைப் பின்பற் றாமை போன்றவை முதல் வகை.


இரண்டாம் வகை
 
மண்ணின் தாங்கும் திறனை தீர்மானிக்க உதவும்; மண்பரி சோதனையை மேற் கொள்ளா மல் தவிர்ப்பது,

அக்கறை யின்மை யோடு நடத்தப்படும் சோதனை கள், குளங்கள், ஏரிகள், விவசாய நிலங்கள் போன்ற தாழ்வான பகுதி களைத் தூர்த்து விட்டும்,

சரிவான - ஏற்றத் தாழ்வான பகுதிகளைச் சமன் செய்து விட்டும் கட்டப்படும் கட்டு மானங்களில் போதிய

தொலை நோக்குப் பார்வை முன்னெச் சரிக்கை இல்லாமை ஆகியவை இரண்டாம் வகை காரணிகள். 

மூன்றாம் வகை
 
கட்டிடங் களிலிருந்து கழிவு நீர் தங்கு தடையின்றி வேகமாக வெளியேறத் தடங்கள் முன் கூட்டியே திட்ட மிடப்பட்டு அமைக்கப்பட வேண்டியது மிகவும் இன்றி யமையாத ஒன்று. 

அது போலவே வெளியி லிருந்து வரும் நீர் மற்றும் ஈரக்கசிவு கட்டுமான த்தை அணுகமுடியாமல் தடுக்கப்பட வேண்டியதும் அவசியம். 

மேலும் கட்டிடங் களுக்கு அருகே மரம் வளர்க்க விரும்புவோர் கட்டிடங் களிலிருந்து குறைந்தது 10 அடி இடைவெளி விட வேண்டும். 

இல்லா விட்டால் மரத்தின் வேர்கள் அஸ்தி வாரத்தைப் பாதிக்கும். 

கழிவுநீர் மேலாண் மையில் ஏற்படும் குறைபாடு களோடு புயல், வெள்ளம், நில நடுக்கம் போன்ற இடர்களும் அஸ்திவாரப் பழுதுகளை உண்டாக்கும்.

இவை மூன்றாம் வகை முக்கிய காரணி களாக திகழ்கின்றன. 

அஸ்திவார த்தில் ஏற்படும் பழுது அல்லது அஸ்திவார த்தைத் தாங்கிக் கொண்டி ருக்கும் தரையில் ஏற்படும் சீர்கேடுகள், மண் நெகிழ்ந்து,

தரை தளர்ந்து, தாங்கும் திறனை இழத்தல் என்பது கிட்டத் தட்ட மனிதனுக்கு ஏற்படும் புற்று நோய்க்கு ஒப்பானது. 

இம்மாதிரி நோய் கண்ட கட்டிடத்தின் தரைக்குக் கீழ்ப் பகுதியில் சீர்கேடுற்ற கட்டிடம் வெளிப் பார்வைக்கு

நல்ல தோற்ற த்தைத் தந்தாலும் வெள்ளம், மழை, புயல் நிலநடுக்க சமயத்தில் தாக்குப் பிடிக்க இயலாது. 

குறுகிய காலத்தி லேயே இதய மாற்று சிகிச்சை வரையிலான விஞ்ஞான வளர்ச்சி அடைந்துள்ள நம்மால் பல்லாயிர வருட அனுபவத் திற்குப் பின்னரும் அஸ்திவாரம்,

அடித்தரை பகுதிகளை பாதுகாப் பாக மறுசீரமைக்க முடியாது என்பது யோசிக்க வேண்டிய விஷயம். 

எதிர் காலத்தில் இந்த அவலம் எப்படி ஒழிக்கப்படும் என்பதை இனி பார்க்கலாம்.

அஸ்திவாரம் மற்றும் தரை இவை இரண்டுமே சீர்கேடு அடை வதைத் தடுக்கவும் முடியும்.

அதையும் மீறி ஏற்பட்டால் மறு சீரமைக்கவும் முடியும்.

மறுசீரமைப்பு
 
மண்பரி சோதனை, மண்ணின் தன்மைக் கேற்ற சரியான வடிவமைப்பு, தரமான கட்டுமானப் பொருட்கள்,

அவற்றின் சரியான விகிதாச் சாரத்துடன் கூடிய சேர்க்கை, நன்கு திட்ட மிடப்பட்ட கழிவு நீர்மேலாண்மை 

இவற்றோடு, தரமான கட்டுமான முறை களைப் பின்பற்றி நிர்மாணிக் கப்பட்ட பாரம்பரிய கட்டிடம் ஒன்றையே உதாரண த்திற்கு எடுத்துக் கொள்ளலாம். 

கட்டுமானம் அமைந் துள்ள தரைப் பகுதியின் மொத்த பரப்பளவில் அஸ்திவாரம் அமைந்துள்ள

தரையின் பரப்பு ஏறக்குறைய 8 முதல் 15 சதவிகிதத் தற்குள் தான் இருக்கும். 

அறைகள், சுவர்களின் எண்ணி க்கைக் கேற்ப அஸ்திவார பரப்பளவு கூடும் அல்லது குறையும்.

கட்டிட த்தின் மொத்த பளுவை, 8 லிருநது 15 சதவிகித தரைப்பகுதி மட்டுமே அஸ்திவாரம் மட்டுமே 

தாங்கும் படியாக உள்ளது பாரம்பரிய வடிவமைப்பு. அதனால் அஸ்திவாரம், அதிக சுமை + கடும் அழுத்தம் இரண்டையும் ஏற்கவேண்டி யுள்ளது. 

அதே நேரத்தில் பெரும்பான் மையான 85 சதவிகித பரப்புடைய கட்டிட உட்புறத் தரைக்கு சுமை,

அழுத்தம் இவற்றை தாங்குவதில் எவ்வித பொறு ப்பும் பங்கும் தரப்படு வதில்லை. 

அதாவது கட்டிட பலம் மற்றும் பாதுகாப்பி ற்கு அஸ்திவாரம் ஒன்றை மட்டுமே நாம் காலம் காலமாக பெரிதும் நம்பி வருகிறோம்.

இதற்கு மாற்றாக உட்புறத் தரையை அஸ்திவார த்துடன் ஒன்றிணைக் கப்பட்ட கான்கிரீட் தளமாக வடி வமைக்க வேண்டும். 

RCC சீலிங் கூரைப்பகுதி மற்றும் அடுக்குமாடி வீடு களின் ஒவ்வொரு தளமும் எப்படி சுவர் களுடன் ஒன்றிணைக்கப் பட்டுள்ளதோ,

அதைப் போல தரைத் தளமும் சுவர்களுடன் ஒருங்கி ணைக்கப்பட வேண்டும். 

இதன் முலம் பலம் மற்றும் பாதுகாப் பிறகு அஸ்தி வாரத்தை மட்டுமே பெரிதும் நம்பும் நிலைமாறி,

கட்டிடத்தின் பளுவைத் தாங்கும் விதமாக, உட்தரைக்குப் பொறுப்பைக் கொடுத்து கட்டிடத்தை அதிக அளவில் பலப் படுத்தவும், ஸ்திரப் படுத்தவும் முடியும். 
அது போலவே கட்டிட பளுவையும் அழுத்த த்தையும் தாங்குவதில் எந்தப் பங்கும் இல்லாத கட்டிடத்தின்

சுற்றுப்புற நடைபாதை தளம் சுவர்களுடன் ஒன்றி ணைக்கப் பட்டால் வெளிப்புறத் திலிருந்து கட்டிடத் தையே தாங்கிப் பிடிக்கும் கூடுதல் தாங்கும் தளமாக அது திகழும்;. 

அதாவது போர்டிகோ பால்கனி போன்ற அமைப்பு க்கள் எவ்வாறு அஸ்திவார நேர் கோட்டி லிருந்து வெளிப்புறம் நீட்டப் பட்டுள்ளதோ

அது போல தரைப் பகுதியில் கட்டி டத்தின் வெளிப்புறம் கூடுதல் தாங்கும் தளம் நீட்டப் பட்டிருக்கும். 

ஒருங்கிணை க்கப்பட்ட தாங்கும் தளம் அஸ்திவாரத்தின் செயல் பாட்டில் பங்கு எடுத்துக் கொள்வ தோடு மட்டு மல்லாமல்

அஸ்திவார த்தையும் மிஞ்சி அதிக அளவு நன்மையும், செயல் திறனும் தரும்.

ஏனென்றால் அஸ்திவார த்தின் பரப்பைவிட 8 முதல் 10 மடங்கு அதிக பரப்பைக் கொண்ட தளம் கட்டிட எடையைத் தாங்கும்.

இவ்வாறு ஒருங்கி ணைந்த தளம் போடுவ தற்கு முன்பு பாரம்பரிய முறைப்படி தளத்தின் கீழத்த ரையை நன்றாக கடினப் படுத்த வேண்டியது அவசியம். 

ஒருங்கிணைக் கப்பட்ட அஸ்திவாரம்
 
இது போன்ற சுற்றுத் தரை + சுவர்கள் + உட்தரை ஒன்றி ணைக்கப் பட்ட கட்டிட வடிவம்; (Integrated Structural Design) ஏற்படுத்தப் பட்டால்

தரை சீர்கேட்டி னால் அஸ்திவா ரத்தின் ஒருபகுதி மட்டும் புதையுண்டு அஸ்திவாரம் தாங்கும் சக்தியை இழக்கும் .

‘அஸ்திவாரத் திறனிழப்பு’ (Foundation Failure) என்கிற அபாயம் நேரவே முடியாது. மேலும் தரை சீர்கேடு உண்டாகியி ருக்கிறதா என்பதைச் சோதனை செய்ய முடியும். 

சீர்கேடு ஏற்பட்டி ருந்தால், ஒன்றிரண்டு தொழி லாளர்கள் உள்ளே செல்லும் அளவிற்கு தரைப் பகுதியை குடைந்து,

மறு சீரமைத்து விட்டு சுவர்கள் சரியுமோ என்ற அச்ச மில்லாமல் பாதுகாப்பாக வெளியே வரமுடியும். 

உதாரணத் திற்கு 30 அடி அகலமுள்ள கட்டிடத்தின் அடித் தரையை 4 அடி அகலத்தி ற்குச் சுரங்கப் பாதைக்காகத் தோண்டி னால்

மீதமுள்ள 26 அடி தளம் திறமை யாகத் தாங்கிக் கொள்ளும். அதனால் சுவர்க ளோ கட்டிடமோ இடியாது. சரியாது. 

பாரம்பரிய கட்டிடங் களில் தரை, அஸ்திவாரம் சீர்கேடு ற்றால் கட்டிடத் தையே இடித்து தள்ள வேண்டிய ஒரு வழி மட்டுமே இப்போது நமக்கு உள்ளது.

இடிப்பதைத் தாமதித் தால் தானாகவே இடிந்து உயிர் பலியையும் நாம் எதிர் கொள்ள வேண்டியி ருக்கும். 

சமீபத்திய நிகழ்வு களில் ஆயிரக்கண க்கான கட்டிடங்கள் இடிக்கப் பட்டதையும், சில நேரங்களில் உயிர்பலி நேர்ந் ததையும் கண்டோம். 

இதில் நம்மை அதிகம் வேதனை க்கு உள்ளாக்கிய ஒரு அம்சம், இடிக்க ப்பட்டதில் பெரும் பாலான கட்டிடங்கள் தரைக்கு மேல்புறம் பலமாகவும் நேர்த்தி யாகவும் இருந்தன என்பது தான்.

ஒருங்கிணைக் கப்பட்ட கட்டிடவடிவம், நில நடுக்க அச்சுறுத் தலைக் கூட முறியடி க்கும் திறன் உடையது கூடுதல் சிறப்பு.

புதிய வடிவமை ப்பின் மூலம் கட்டிட பலம் மற்றும் ஸ்திரத் தன்மை பன்மடங்கு கூடும். தரை,

அஸ்திவார குறை பாடுகள் கட்டுமான த்தைச் சீர்குலைக் காமல் காக்க முடியும். 

அதுபோலவே கட்டுமா னத்தில் நேரிடும் குளறு படிகள் அடித்தரை யை, அஸ்தி வாரத்தை பாதிக்க முடியாதபடி “கூடுதல் தாங்கும் தளம்” பாதுகாப்பு கேடய மாகத் திகழும். 

அறிந்தோ, அறியாமலோ ஏற்படும் பல கட்டுமான குறை பாடுகள் கூட (Structural Deficiencies) ஈடு செய்யப் படும். கட்டிட வாழ்நாளும் பன்மடங்கு கூடும். 

பொதுவாக இரண்டு முன்று தலை முறையின ருக்கு பயன் தரும் கட்டிடம் மேலும் பல தலைமுறை களுக்கு பயன் படும்படி யாக அதன் வாழ் நாள் நீட்டிக்க ப்படும். 
Previous Post Next Post
COMMENTS... plz use me