ஏசியை பராமரிப்பது எப்படி? ஏசியை பராமரிப்பது எப்படி? - ETbuild

ஏசியை பராமரிப்பது எப்படி?

ஏசியை சரியாகப் பராமரிக்கா விட்டால் நீண்ட நாள் உழைக்காது. அதோடு, குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு தீ விபத்து ஏற்படுவ தற்கும் வாய்ப்பு இருக்கிறது. முறை யாகப் பராமரி க்காத ஏசி அதிகம் செலவு வைக்கும்.
மாதம் ஒரு முறை யாவது ஏசியை சர்வீஸ் செய்ய வேண்டும். அதிகமான புகை, புழுதி உள்ள இடங்க ளில் வசிப்பவர்கள் குறைந்தது மாதத்துக்கு 2 முறை சர்வீஸ் செய்ய வேண்டும்.

அதிக தூசி ஏசியில் சேர்ந்தால் பாதிப்பு நமக்குத் தான். எனவே, ஏசியில் உள்ள ஃபில்டரை சுத்த ப்படுத்த சர்வீஸ் செய்வது அவசியம். அதிகம் பயன் படுத்தாத காலகட்டத்தி ல்கூட சர்வீஸ் செய்து வைப்பது ஏசியின் வாழ் நாளைக் கூட்டும்.

ஏசி வாங்கும் போது இலவச ஸ்டெபிலை ஸரையும் சேர்த்துக் கொடுப் பார்கள். அது ஒரிஜினல் பிராண்ட் தானா என்பதைப் பார்த்து வாங்கவும்.

சில கடைகளில் விலை மலிவான சீனத் தயாரிப்பு களைக் கொடுத்து விடுவார்கள். அலுமினிய ஸ்டெபி லைஸர் ஏசியைப் பாழாக்கி விடும். நல்ல தரமான ஸ்டெபி லைஸரில் தாமிரம் இருக்கும். அதுதான் நீடித்து உழைக்கும்.

ஏசி இணை ப்பில் இருக்கும் ஒயர்கள் அடிக்கடி லூசாகி விடும். அதனால் தான் தீ விபத்து, ஏசி வெடிப்பது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.

ஏசியில் உள்ள ஒயர்கள் சரியாகப் பொருத்தப் பட்டு இருக்கிறதா என்பதை மெக்கானிக் கின் உதவியோடு அவ்வப் போது சோதனை செய்வது நல்லது.

குளிர் முகத்தில் பட வேண்டும் என்பதற்காக உங்களுக்குப் பிடித்த இடத்தில் ஏசியை வைக்கக் கூடாது. குறைந்தது 6 அடிக்கு உயரமான இடத்தில் தான் ஏசி இருக்க வேண்டும். அப்போது தான் அதிலிருந்து வெளியாகும் குளிர்ச்சி அறை முழுக்க நிரம்பும்.

நல்ல குளிர்ச்சி வேண்டும் என்பத ற்காக அளவுக்கு அதிக டிகிரியில் டெம்பரேச்சர் வைக்கக் கூடாது. 23 டிகிரிக்கு குறைவாகச் செல்லும்போது ஏசியில் அதிக பிரஷர் ஏற்படும். அதனால் தீப்பிடி க்கும் அபாயம் இருக்கிறது.

எனவே 23 – 24 டிகிரி என அளவான டெம்ப ரேச்சருக்கு பழக்கப் படுத்திக் கொள்வது நல்லது. ஏசி ஆனில் இருக்கும் போது பெர்ஃப்யூம், ரூம் ஸ்பிரே ஆகிய வற்றை ஏசியின் மீது அடிக்கக் கூடாது. 
அப்படிச் செய்தால், ஏசியின் உள்ளே இயங்கும் காயில் பழுதாகி விடும். ஏசி அறையில் சூரிய ஒளி படாதவாறு ஸ்கிரீன் போட்டுக் கொள்வது நல்லது. வெப்பம் அறைக் குள் நுழைந்தால் அவ்வளவு சீக்கிரம் குளிர்ச்சி அடையாது. இதனால் மின்சாரமும் வீணாகும்.

ஏசியை சரியாக துளையிட்டு பொருத்தா விட்டால் அதிகம் சப்தம் எழுப்பும். பர்ச்சேஸ் செய்யும் கடையிலேயே பிராண் டுக்கு ஏற்றபடி ஏசி பொருத்திக் கொடுக்க நபர்கள் இருப்பார்கள். அவர்களையே அழைத்து ஏசியை பொருத்து வது நல்லது.

சர்வீஸ் செய்யும்போது காயில் க்ளீன் செய்யப் படுகிறதா? ஃபேன் மோட்டார் களுக்கு ஆயில், பெல்ட் அட்ஜஸ்ட்மெண்ட், கம்ப்ரஸர் க்ளீனிங் எல்லாம் செய்கிறார் களா என்பதை அருகிலிருந்து சோதனை செய்து கொள் ளுங்கள்.

ஏசி பொருத்தப் பட்ட அறையில் அளவுக்கு அதிக பொருட் களை வைக்கக் கூடாது. அப்படி இருந்தால், அறை குளிர்ச்சியா வதற்கான நேரம் அதிகமாகும். அதன் காரணமாக மின்சாரம் அதிகம் செல வாகும்.

ஏர் கூலர் எப்படி?

அதிக விலை கொடுத்து ஏசி வாங்க முடியா தவர்கள், சுவரில் ஏசி பொருத்தும் வசதி இல்லாத வர்களுக்கு ஏர்கூலர் சரியான சாய்ஸ். ஆனால், ஏர்கூலர் கடல் காற்று வீசும் அல்லது அதிக ஈரப்பதம் நிலவும் பிரதேச ங்களில் சரிவர பயன் அளிக்காது.

சென்னை உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் ஏர்கூலரால் பலனில்லை. ஏர்கூலர் குளிர்ந்த காற்றை மட்டுமே தரும். ஏசியில் கிடைக்கும் குளிர்ச்சி ஏர் கூலரில் கிடைக்காது.
Previous Post Next Post
COMMENTS... plz use me