குளிர் சாதனப் பெட்டி ! குளிர் சாதனப் பெட்டி ! - ETbuild

குளிர் சாதனப் பெட்டி !

ஒரு முறை வாங்கி, பல முறை பயன்ப டுத்தப்படும் பொருள் ஃப்ரிட்ஜ் என்ற ரெஃப்ரிஜி ரேட்டர். எந்தெந்த பிராண் டுகளில் என்னென்ன வகை ஃப்ரிட்ஜுகள் கிடைக்கின்றன? விலை என்ன? எப்படிப் பராம ரிப்பது?...
 
இதோ உங்களுக் கான வழிகாட்டி! வெர்ல்பூல், எல்.ஜி., சாம்ஸங், காத்ரேஜ், கெல்வினேட்டர், வீடியோகான், எலெக்ட் ரோலக்ஸ், ஹேயர்... இப்படி ஏகப்பட்ட பிராண்ட்... 

180 லிட்டரி லிருந்து 400 லிட்டர் வரை கொள்ளளவு கொண்ட விதம் விதமான ஃப்ரிட்ஜுகள் மார்க் கெட்டில் உள்ளன.

4 பேர் கொண்ட குடும் பத்துக்கு 180 லிட்டர் கொள் ளவைத் தாங்கும் ஃப்ரிட்ஜ் போதுமானது.

பிராண்டு களும் விலை களும் தோராயமாக..

(180 லிட்டர்)

எல்.ஜி. ரூ.11,000
சாம்ஸங் ரூ.10,800

வெர்ல்பூல் ரூ.11,500

கெல்வினேட்டர் ரூ.9,500

வீடியோகான் ரூ.9,000

எலெக்ட்ரோலக்ஸ் ரூ.9,850

ஹேயர் ரூ. 9,450

காத்ரேஜ் ரூ.9,500

டைரக்ட் கூலிங் வசதியுள்ள சிங்கிள் டோர், ஃப்ராஸ்ட் ஃப்ரீ வசதி கொண்ட டபுள் டோர், ட்ரிபிள் டோர், பல வசதிகள் கொண்ட சைடு பை சைடு டோர்... 
இப்படி பல வகைகளிலிருந்து நம் தேவை, பயன்பாட்டுக்கு ஏற்ப தேர்ந்தெ டுக்கலாம். இதே போல 190, 195, 200 லிட்டர் அளவுகளிலும் ஃப்ரிட்ஜுகள் கிடைக்கின்றன.

கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ‘ஸ்டார் ரேட்டிங்’. மின்சாரம் பயன்படுத்தும் பொருட் களில் நல்ல ஸ்டார் ரேட்டிங் இருந்தால் அது மின்சாரச் செலவைக் குறைக்கும் என்று அர்த்தம். ஃப்ரிட்ஜுகளில் வகைக்கு ஏற்ப, ஒன்றிலிருந்து 5 வரை ஸ்டார் இருக்கும்.

ஐஸ் அதிகம் தேவைப்படு பவர்களுக்காக வெர்ல்பூல் பிராண்டில் ‘ஐஸ் மேஜிக் ஃப்ரிட்ஜ்’ இருக்கிறது. சிங்கிள் டோர் வசதி கொண்ட இந்த ஃப்ரிட்ஜை நாம் தான் சுத்தம் செய்ய வேண்டும்.

ஆட்டோமேட்டிக்காக தானே க்ளீன் செய்து கொள்ளும் வகையில் அதே வெர்ல்பூல் பிராண்டில் ‘ஐ-மேஜிக்’ ஃப்ரிட்ஜ் புதிதாக வந்தி ருக்கிறது. 
இதன் விலை ரூ.13,500. சிங்கிள் டோர் ஃப்ரிட்ஜுகளைப் பொறுத் தவரை ஃப்ரீசரும் உள்ளேயே இருப்பதால் சுத்தமாக வைத் திருப்பது அதற்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.

6 முதல் 8 பேர் கொண்ட குடும்பத் துக்கு 230 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஃப்ரிட்ஜ் தேவைப்படும். டபுள் டோர் வசதி கொண்ட இந்த வகைகளில் ‘ஆட்டோ மேடிக் க்ளீன்’ வசதி இருக்கிறது.

பிராண்டு களும் விலைக ளும் தோராயமாக... (230 லிட்டர்)

எல்.ஜி. ரூ.15,350

சாம்சங் ரூ.16,250

காத்ரேஜ் ரூ.15,850

வெர்ல்பூல் ரூ.16,500

டபுள் டோர்களில் 245, 255, 260 லிட்டர் கொள் ளளவுகளில் கிடைக் கின்றன. 3 கதவுகள் கொண்ட ஃப்ரிட்ஜ் வகைகளில் காய்கறிகளை ஸ்டோர் செய்யும் வசதியும், தனியாக ஃப்ரீசரும் இருக்கும்.

வெர்ல்பூல், ஹிட்டாச்சி பிராண்டு களில் இந்த வகை ஃப்ரிட்ஜுகள் கிடைக் கின்றன. 20 ஆயிரம் ரூபாயி லிருந்து தொடங் குகிறது விலை.

ஸ்டோரேஜ் வசதி அதிகம் தேவைப் படுபவர்களுக் காகவே பிரத்யேகமாக பெரிய சைஸ் கதவுக ளோடு, கிராண்ட் லுக் தரும் ஃப்ரிட்ஜுகள் எல்.ஜி.யில் கிடைக்கும். விலை ரூ.50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல்.

எல்.ஜி. பிராண்டில் நவீன வசதிகளுடன் கூடிய பிரமாண் டமான ஃப்ரிட்ஜ் அறிமுகமாகி இருக்கிறது.

லிநி நிசி வி237 கிநிழிழி என்கிற இந்த மாடலில் வொண்டர் டோர் சீரிஸ், 679 லிட்டர் கொள்ளளவு வசதி, ஐஸ் கட்டிகளை சீக்கிரம் உருவா க்கும் வசதி என பல சிறப்ப ம்சங்கள். உள்புறம் 52 லிட்டர் அளவுகளில் தனித்தனி அறைகள்.

இதன் காரணமாக, ஃப்ரிட்ஜின் மெயின் டோரைத் திறக்காமல், குறிப்பிட்ட அறையில் இருந்து தே வைப்படும் பொருளை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். 
நவீன வசதிகள் ஒருபுறம் இருந்தாலும், ஹெல்த் கார்டு டெக்னாலஜியின் அடிப்படையில் காற்றை சுத்தப்படுத்தும் வசதி உள்ளது.

இதைப் பயன்படுத்தி உட்புறம் இருக்கும் தேவையி ல்லாத தூசுகள், பூஞ்சைகள், பாக்டீரி யாக்கள், துர்நாற்றம் எல்லாவ ற்றையும் விரட்டி உணவுப் பொருட்களை பாதுகாப்பாக வைத்தி ருக்கலாம்.

சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வடிவமைக் கப்பட்ட இந்த ஃப்ரிட்ஜில் காய்கறி, பழங்கள் வைப்ப தற்கென தனித்தனி அறைகள், ஆட்டோமேடிக் ஃப்ரீசர் வசதியும் இருக்கின்றன.

பவர்கட் நேரத்தில் இந்த ஃப்ரிட்ஜை இயக்கு வதற்கென ஸ்பெஷல் இன்வெ ர்ட்டர் 10 வருட உத்தரவா தத்துடன் கிடைக்கிறது. இது, கூட்டுக் குடும்பத்தி னருக்கும் புதுமை விரும்பி களுக்கும் சரியான சாய்ஸ். விலை ரூ.1.25 லட்சம்.

ஒரு ஃப்ரிட்ஜ் நீண்டநாள் உழைக்க வேண்டு மானால் அதை எப்படிப் பராமரிக்க வேண்டும்? விளக்குகிறார் ஃப்ரிட்ஜ் மெக்கானிக் சுந்தரம்.

ஃப்ரிட்ஜ் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷய ங்களில் ஒன்று ஸ்டெபி லைஸர். தரமான, பிராண்டட் ஸ்டெபிலை ஸர்களை பயன் படுத்துவது நல்லது.

ஃப்ரிட்ஜில், ஃப்ரீசர் கதவுக்குப் பின்னால் என்னென்ன பொருட்களைப் பயன்படுத் தக்கூடாது என்பதையும் பயன்ப டுத்தும் வழிமுறைகளையும் எழுதி வைத்தி ருப்பார்கள். 

முதலில் அதைத் தெளிவாகப் படித்து, அதில் குறிப்பிட்டிரு க்கும்படி பயன்படுத்த வேண்டும்.

ஃப்ரீசரில் வைத் திருக்கும் பொருட்கள் நன்றாக உறைந்து விட்டால் அவற்றை எடுப்ப தற்குக் கூரான ஆயுதங் களைப் பயன்படுத்தக் கூடாது. 

அது அமைந் திருக்கும் பிளாஸ்டிக் டப்பாவில் அலுமினியம் காயில் பொருத்தப்ப ட்டிருக்கும்.

கூரான பொருட் களைப் பயன் படுத்தினால், காயில் மீது பட்டு உள்ளிருக்கும் கேஸ் வெளியேறி விடும். அதனால் விபத்து ஏற்படவும் வாய்ப்பி ருக்கிறது.

ஃப்ரிட்ஜ் ரிப்பேரா னாலோ, தொடர்ந்து மின்சாரம் தடைப்பட்டாலோ உள்ளே இருக்கும் பொருட் களை வெளியில் எடுத்து விடுங்கள். அடிக்கடி தடைப் படும் மின்சார த்தால் உள்ளே இருக்கும் பொருட்கள் சீக்கிரமே அழுகி துர்நாற்றம் வீசத் தொடங்கி விடும்.

இது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால், ஃப்ரிட்ஜை நன்றாகத் துடைத்து, எலுமிச் சைப் பழத்தை வெட்டி உள்ளே ஆங்காங்கே வைத்து விட வேண்டும். அதனால் துர்நாற்றம் மறையும். கிருமிகளின் பாதிப்பும் இருக்காது.

ஃப்ரீசரில் இருந்து உறைந்த பொருட் களை எடுக்கும்போது டீஃப்ராஸ்ட் பட்டனை அழுத்த வேண்டும். 

அப்படி அழுத்தும் போது ஃப்ரிட்ஜில் அதிகப்ப டியாக இருக்கும் ஐஸ் கரைந்து, அதற்குப் பின்னால் உள்ள டிரேயில் விழுந்து விடும். 2 மாதங்க ளுக்கு ஒரு முறை டீஃப்ராஸ்ட் செய்தால்,

ஃப்ரிட்ஜ் பழுதா காமல் நீண்ட நாள் உழைக்கும்.

ஃப்ரிட்ஜை ஒரு தடவை ‘ஆஃப்’ செய்தால், உடனடியாக ‘ஆன்’ செய்யக் கூடாது. பேக்கிங் சோடா, காபித்தூளை ஃப்ரிட்ஜின் உட்புறம் வைத்தால் துர் நாற்றம் ஓடி விடும். 

கேஸ்கட்டை எப்போதும் சுத்தமாக வைத் திருக்க வேண்டும். வாங்கிய நாலைந்து வருடங்களில் உள்ளே பொருத்தப் பட்டிரு க்கும் கேஸ்கட் சற்று தளர்ந்து விடும். 
இதனால் உட்புறம் இருக்கும் குளிர்ந்த காற்று வெளியேறி விடும். பாக்டீரி யாக்கள் உள்ளிட்ட கிருமிகள் கதவில் ஏற்ப ட்டிருக்கும் இடுக்கு வழியாக உள்ளே போய், கொஞ்சம் கொஞ்ச மாக உணவுப் பொருட்களையும் பாதித்து விடும்.

எனவே, கேஸ்கட்டை சரியாகப் பொருத்த வேண்டும். ஃப்ரிட்ஜை சுத்தம் செய்ய சாதாரண சோப்புத் தண்ணீரைப் பயன் படுத்தினால் போதும். 

அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. சுத்தம் செய்த பிறகு, உட்புற அறைகளை துணியைக் கொண்டு நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.

வெளியூ ருக்குப் போகும் போது பொரு ட்களை எல்லாம் வெளியில் வைத்து விட்டு, ஃப்ரிட்ஜை ஆஃப் செய்துவிடுவது நல்லது.
எந்த வகை ஃப்ரிட்ஜாக இருந்தாலும் இரண்டு மாதங்க ளுக்கு ஒரு முறை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இடம் இருக்கிறது என்பதற்காக அளவுக்கு அதிக பொருட் களைத் திணிக் கக் கூடாது.

ஒரு பொருளை எடுத்தால், உடனே ஃப்ரிட்ஜை மூடிவிட வேண்டும். இல்லை யென்றால் உள்ளே இருக்கும் குளிர்ச்சி வெளியேறி விடும். மறுபடியும் ஃப்ரிட்ஜைக் குளிர்விக்க அதிக மின்சாரம் தேவைப் படும்.

சுவருக்கும் ஃப்ரிட்ஜுக்கும் இடையில் குறைந்தது 6 இஞ்ச் தூரமாவது இடை வெளி இருக்கு ம்படி பார்த்துக் கொள்ளு ங்கள். அப்போது தான் அதிகம் சூடாகாமல் இருக்கும். உள்பக் கமாக இருந்து வரும் காற்று வெளியேறவும் வசதியாக இருக்கும்.

கீரை, காலிஃப்ளவர் போன்ற வற்றில் புழுக்களும் பூச்சிகளும் இருக்க வாய்ப்பிரு க்கிறது. அவை மற்ற உணவுப் பொருட்க ளையும் பாதித்து விடும். எனவே, அவற்றை காகிதத்தில் சுற்றி வைப்பது நல்லது.

ஃப்ரிட்ஜின் மேல் பகுதியில் பொருட்களை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். ஃப்ரிட்ஜ் வைக்கும் போதே எர்த் சரியாக உள்ளதா என்று எலெக்ட்ரீஷியனைக் கொண்டு பரிசோ தித்துக் கொள்ள வேண்டும்.

6 மாதங்க ளுக்கு ஒரு முறை மெக்கா னிக்கை அழைத்து வந்து ஃப்ரிட்ஜை சர்வீஸ் செய்து, பழுதி ல்லாமல் சரியான நிலையில் வைத் திருக்க வேண்டும்.
Previous Post Next Post
COMMENTS... plz use me