வீட்டு முகப்பை அழகுபடுத்தும் நவீன மேற்கூரைகள் ! வீட்டு முகப்பை அழகுபடுத்தும் நவீன மேற்கூரைகள் ! - ETbuild

வீட்டு முகப்பை அழகுபடுத்தும் நவீன மேற்கூரைகள் !

கட்டுமானத்தின் நீடித்த தன்மைக்கு கான்கிரீட்டுகளே வலிமை சேர்க்கின்றன. 
கட்டுமான பணியின் பல நிலைகளில் கான்கிரீட் கலவைகள் இணைந்து கட்டிடத்தை கம்பீரமாக எழுந்து நிற்க செய்கின்றன.

தொழில் நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப கான்கிரீட் முறைகளும் மாறுபாடுகளை சந்தித்துள்ளன. 

எனினும் மேற்கூரை அமைப்பதில் கான்கிரீட்டே பிரதான மூலப்பொருளாக விளங்குகின்றன.

நவீன மேற்கூரை

இந்தநிலையில் கான்கிரீட் அல்லாத புதுமையான முறையில் வீட்டின் மேற்கூரைகளை வடிவமைக்கும் முறைகள் பிரபலமடைந்து வருகின்றன.

அவைகளுள் ஒன்றாக பாலிகார்பனேட் முறை அமைந்துள்ளது. 

இந்த முறையில் கான்கிரீட்டு களுக்கு பதிலாக பாலிகார்பனேட் என்ற பொருள் பயன்படுத்தப்படுகிறது.

இந்த பாலிகார்பனேட் பிளாஸ்டிக் அல்லாத மூலப்பொருளால் தயாரிக்கப் பட்டது. 

இந்த நவீன மேற்கூரை கண்ணாடி போலவே வெளிச்சத்தை கடத்தும் தன்மை கொண்டது.

இதனை வீட்டின் மேற்கூரையாக அமைக்கும் பட்சத்தில் வீட்டுக்குள் எளிதாக வெளிச்சம் பரவும். அந்த அளவிற்கு ஒளியை ஊடுருவ செய்கின்றன.

வெப்பத்தாக்கம் இருக்காது

இருந்த போதிலும் இக்கூரைகள் வீட்டின் உட்புற பகுதிக்கு வெ ப்பத்தை கடத்து வதில்லை. அதனால் வீட்டுக்குள் வெப்பத் தாக்கம் அதிகமாக தென்படாது.

மேலும் இந்த பாலி கார்பனேட்டை மேற்கூரையாக கொண்ட வீடுகளுக்கு பகல் நேரங்களில் மின்சார தேவைக்கு அவசியம் இருக்காது. 

ஏனெனில் இவை வீட்டின் மூலை முடுக்கெ ல்லாம் வெளிச்சத்தை பரவ விடும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன.
இதுதவிர இந்த பாலிகார்பனேட் முறையில் வடிவமைக்கப்படும் கட்டிட ங்களில் பகல் நேரங்களில் மட்டுமி ல்லாமல் இரவு நேரங்களிலும் மின்சாரத் தை சேமிக்கலாம்.

இந்த முறையில் கூரையின் உட்புறங்கள் எரிய விடப்படும் விளக்கு களின் வெளி ச்சத்தை பன்மடங்காக பிரதிபலி க்கின்றன.

இதனால் இரவு நேரங்களில் குறைந்த அளவு ஒளி தரும் விளக்குகளை பயன்படுத்தினாலே போதுமானதாக இருக்கும். இதனால் மின்சார செலவும் வெகுவாக குறையும்.

ஓய்வறை அமைக்கலாம்

இந்த முறைப்படி முழுமையாக கட்டிடங்களை அமைக்காவிட்டாலும் வீட்டின் வெளிப்புற கொட்டகை, 

பால்கனி, வாகனம் நிறுத்துமிடம், ஓய்விடம் போன்ற இடங்களில் இக்கூரைகளை அமைக்கலாம்.

அதிலும் தோட்டங்கள் சூழ்ந்திருக்கும் இடத்தில் இந்த பாலிகார்பனேட் முறையை பயன்படுத்தி சிறிய அறையை எழுப்பலாம்.

அங்கு ஓய்வு நேரத்தை செலவிடுவதற்கு ஏற்ற வகையில் அறையை வடிவமைக்கலாம். 

காலை, மாலை நேரங்களில் அந்த அறைக்குள் அமர்ந்து ரம்மியமான சூழலை ரசிக்கலாம்.

மேற்கூரை வழியாக வெளிச்சத்தை அறைக்குள் கொண்டு வந்தாலும் அதிகமாக 

வெப்பத்தை ஈர்க்காத தன்மை படைத்தவை என்பதால் பொழுது போக்குவதற்கு ஏற்ற அறையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

 பல வண்ணங்களில் கிடைக்கும்

இது மட்டு மல்லாது, கட்டிடங்களில் முகப்பை அழகாக்கவும் இந்த கூரையை பயன்ப டுத்தலாம். 

ஒளியை ஊடுருவ செய்யும் இந்த பாலிகார்பனேட் கூரைகள் வெள்ளை நிறங்களில் மட்டுமி ல்லாமல் பல வண்ண ங்களிலும் கிடை க்கின்றன.

இதனால் வீட்டு வெளிப்புற சுவர்க ளின் வண்ணத் துக்கு ஏற்ப வண்ண மயமான கூரைகளை தேர்ந்தெடுத்து வீட்டின் முகப்பு பகுதியினை அழகுப டுத்தலாம்.
இந்த கூரையை அமைப்பதன் மூலம் பகல் நேரங்களில் வீட்டின் முகப்பு பகுதியை பிரகாசமான வெளிச்சத்தை பிரதிபலிக்கும் வண்ணம் அமைக் கலாம்.

இதன் மூலம் வீட்டின் உள்பகு தியிலும் வெளிச்சத்தின் தாக்கத்தை பரவ செய்யலாம். 

 இந்த பாலிகார்பனேட் கூரைகளை பராமரிப்பதற்கும் சிரமம் இருக்காது. எளிய முறையில் பராமரிப்பு பணிகளை மேற்கொ ள்ளலாம்.
Previous Post Next Post
COMMENTS... plz use me