வீட்டுப் பணிகளை முழுமையாக்கும் சென்ட்ரிங் வேலை ! வீட்டுப் பணிகளை முழுமையாக்கும் சென்ட்ரிங் வேலை ! - ETbuild

வீட்டுப் பணிகளை முழுமையாக்கும் சென்ட்ரிங் வேலை !

வீடு கட்டும் பணிகளில் முக்கிய மானது, சென்ட்ரிங் இடுவது. அதாவது வீட்டுக்கு மேற்கூரை அமைக்கும் பணி. இதை கான்கிரீட் போடுவது எனக் குறிப்பிடு வார்கள். 
இந்தப் பணிக்குத் தான் மிக அதிக அளவிலான பணியா ளர்கள் தேவைப் படுவார்கள்.

இந்தப் பணி முடிந்ததும் தான் கிட்ட தட்ட வீடு ஓரளவு முழுமையை அடையும்.

இந்தப் பணிகளில் ஏதாவது பிழை ஏற்பட்டு விட்டால் அது சரிசெய்ய முடியாத நீண்ட காலப் பிரச்சினை யாக மாற வாய்ப்பி ருக்கிறது.

எனவே இந்தப் பணியில் தான் அதிகக் கவனத் துடனும் இருக்க வேண்டும். 
அடைப்புப் பலகை

கான்கிரீட் இடுவதற்கு முன், அந்தப் பகுதியை முழுமை யாகச் சோதிக்க வேண்டும்.

பலகை அடைக்கும் வேலைகள் சரியாக நிறைவேற்றப் பட்டுள்ள னவா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.

பலகை அடைப்பின் அளவு, வடிவம் ஆகிய வற்றையும் சரி பார்த்துக் கொள்ள வேண்டும். கலவை வழிந்து வெளியே ஓடி விடாமல் இருப்ப தற்கும்,

வீணா வதைத் தடுப்ப தற்கும் ஏற்பாடுகள் செய்யப் பட்டிருக் கின்றனவா என்பதையும் கவனிக்க வேண்டும். 

சென்ட்ரிங் பாரத்தைத் தாக்கும் முட்டுக் கம்புகள் சரியான விதத்தில் அமைக்கப் பட்டுள்ளனவா என்பதையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதன் இணை ப்புகள் வலுவாக இருப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். 

கம்பிகள் 

கான்கிரீட் போடுவதற்கு முன்பாக முக்கிய மானது கம்பி கட்டும் பணி. கம்பி கட்டும் போது தரமான,

தேவையான அளவு தடிமன் உள்ள கம்பிகள் பயன் படுத்தப்படு கின்றனவா என்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். 

இப்போது ரெடிமேட் கம்பிகள் சந்தையில் கிடை க்கின்றன. நம் தேவையைச் சொன்னால் தொழிற் சாலையில் நமக்குத் தேவையான அளவுடன் கொண்டு வந்து இறக்கி விடுவார்கள். 

இதனால் கம்பிகள் வீணாவது குறையும். வேலையும் சுலபமாக நடக்கும். தேவையைப் பொறுத்து இதைப் பயன் படுத்திக் கொள்ளலாம்.

கம்பி கட்டிய பிறகு மேலே நடப்பது நல்லதல்ல. அதனால் கம்பி கட்டு அளவை விட்டு விலகித் தாழ்ந்து செல்ல வாய்ப்பு உள்ளது. 

கம்பி கட்டும் போது மின்சார ஒயர்கள் கொண்டு செல்ல வசதியாக பிளாஸ்டிக் பைப்புகள் பதிக்கப் பட்டுள்ளனவா என்பதையும்

மின் விசிறிகள், ஊஞ்சல், தொட்டில்கள் ஆகியவை பொருத்து வதற்காக ஊக்குகள் தேவையான இடத்தில் வைக்கப் பட்டுள்ளனவா என்பதையும் கவனிக்க வேண்டும். 

கான்கிரீட்டின் தரம் 

இப்பணியில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் கான்கிரீட் கலவை.

அது தரமாகத் தயாரிக் கப்பட்டி ருக்கிறதா என்பதைச் சோதித்து அறிய வேண்டியது அவசியம்.

சிமென்ட், ஜல்லி, மணல், தண்ணீர் ஆகிய நான்கும் சரியான அளவில் கலக்கப் படுகின்றதா என்பதையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.

கான்கிரீட் போட்ட பிறகு தளத்தின் மேற்பரப்பு வழவழப் பாக இருக்கக் கூடாது.

காரணம் இதனால் விரிசல்கள் ஏற்பட வாய்ப் புள்ளது. எனவே இதைத் தடுக்க துடைப்பம் கொண்டு தேய்த்து விட வேண்டும். 
அது போல கான்கிரீட் கலவை சமமின்றி மேடாகவும் பள்ள மாகவும் இருக்கும்.

இதைச் சரிசெய்ய மட்டப் பலகை வைத்து தளத்தைச் சமப்படுத்த வேண்டும்.

அதுபோல கான் கிரீட்டில் கட்டிகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

அப்போது தான் கலவையைச் சீராக இட முடியும். வெடிப்புகள் இருந்தால் உடனடி யாகச் சரிசெய்ய வேண்டும். 

சிறிய குறைபா டுகளைக் கூட கவனமாகப் பார்த்துச் சரி செய்ய வேண்டும்.

கான் கிரீட்டுக்குள் காற்று, வெற்றிட ங்களை உருவாக்க தவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 
Previous Post Next Post
COMMENTS... plz use me