ரெஸிஸ்டரின் பதிப்பை வேண்டிய அளவில் மாற்றும் வசதியுடைய ரெஸிஸ்டர் தான் பொட்டேன்சியோ ரெஸிஸ்டர் ஆகும்.
இது ரேடியோவில் வால்யூம் கன்ரோல் , டொன் கன்ரோல், பேஸ்-ட்ரிபிள் கன்ரோல், என்றும்
டிவி களில் பிரைட்னெஸ் கன்ரோல், கொன்ராஸ்ட் கன்ரோல் போன்ற வற்றிலும் பயன்படுத்தப் படுகிறது.
டிவி களில் பிரைட்னெஸ் கன்ரோல், கொன்ராஸ்ட் கன்ரோல் போன்ற வற்றிலும் பயன்படுத்தப் படுகிறது.
இதில் மூன்று முனைகள் இருக்கும். இறுதியாக உள்ள முனைகளுக் கிடையே ரெஸிஸ்ரரின் தன்மை ஸ்திரமாக அமைக்கப் பட்டிருக்கும்.
முனை அந்த ஸ்திரமான ரெஸிஸ்ரர் பக்கத்தில் தொட்டுக் கொண்டே இருக்கும்.
முனை அந்த ஸ்திரமான ரெஸிஸ்ரர் பக்கத்தில் தொட்டுக் கொண்டே இருக்கும்.
இதன் மூலம் அஜஸ்ட் செய்து ரெஸிஸ்ரரின் மதிப்பில் என்ன அளவு வேண்டுமோ அதை பெற்றுக் கொள்ளலாம். இந்த ரெஸிஸ்ரர் களின் மதிப்பு 5ஓம் இலிருந்து 10 லட்சம் ஓம்ஸ் வரை கிடைக்கின்றன.
இந்த ரெஸிஸ்ரர் களில் இரண்டு வகை இருக்கின்றன. லீனியர் டைப் லொக் டைப் (Log Type) லீனியர் டைப் என்றால் இதன் தடை தன்மை சம தூரத்தில் சம அளவிலேயே கூடிக் கொண்டே போகும்.
லொக் டைப் (Log Type) இல் சம தூரத்தில் தடை தன்மை லொக் அளவில் கூடிக்கொண்டே போகும். (லொக் அளவு என்பது 10 மடங்கு விகிதாசாரத்தில் அதிகரிக்கும்).
ரெஸிஸ்ரரின் மதிப்பு சம தூரத்தில் 100 ஓம்-1000 ஓம்-10,000ஓம்-1 லட்சம் ஓம்-10 லட்சம் ஓம் என பத்து மடங்கு விகிதாசாத்தில் அதிகரிக்கும். நமது காதின் அமைப்பில் ஒரு அதிசய குணம் ஒன்று உள்ளது.
ஒரு சத்தத்தின் அளவை 1 மடங்கி லிருந்து 2 மடங்காகக் கேட்க வேண்டு மானால் அச்சத்தத்தை உண்டு பண்ணும் சத்தக்கருவி உற்பத்தி செய்யும் அளவை 10 மடங்காக அதிகரிக்க வேண்டும்.
3 மடங்காக கேட்க வேண்டு மானால் சத்த அளவை 100 மடங்காக அதிகரிக்க வேண்டும்.
உதாரணமாக 100 வாட்ஸ் ஸ்பீக்கரில் பாடல் ஒலித்தால் அதனை இரண்டு மடங்காக கேட்க 300 வாட்ஸ் வரை அதிகரிக்கவேண்டும். இதனையே லொக் ஸ்கேல் எங்கின்றனர்.
இவ்வா றில்லாமல் 200 வாட்ஸ் என்றாலேயே நம்காதால் இரண்டு மடங்கு சத்தத்தை நம் காதால் கேட்க கூடியவாறு இருந்திருக்கு மானால் கொழும்பில் உண்டாகும் சத்தத்தை யாழ்ப்பாணத்தில் இருப்பவர்கள் கேட்க நேரிடும்!
லொக் ஸ்கேல் அடிப்படையில் நம் காதை அமைத்த ஆண்டவனை வணங்குவோம் ஏன் எனில், அருகில் இருப்பவர் கதைப்பது எவ்வாறு கேட்கும் யோசித்துப் பாருங்கள்?
ஒரு ரேடியோவில் உள்ள நிகழ்ச்சிகளை காதின் லொக் ஸ்கேல் இற்கு ஏற்ப கூட்டவோ குறைக்கவோ இந்த இரண்டாவது வகை ரெஸிஸ்ரரை தான் பயன்படுத்த வேண்டும்.
லீனியர் டைப் பயன்படுத்தினால் இரு குறிப்பிட்ட தூரம் வரை சத்தம் கூடும் அதன் பின் வித்தியாசத்தை எம்மால் உணர முடியாது.
Tags:
electric