ரெஸிஸ்டர்கள் என்பது? ரெஸிஸ்டர்கள் என்பது? - ETbuild

ரெஸிஸ்டர்கள் என்பது?

ரெஸிஸ்டர்கள் ஒரு கண்டக்டர் மின்னோட்டத்தைச் சிறந்த முறையில்ச் செலுத்தும். ஒரு இன்சுலேட்டர் மின்னோட்டத்தை அறவே செலுத்தாது தடுத்து நிறுத்தி விடும். 
ரெஸிஸ்டர் - Resistors

சில சமயம் ஒரு கம்பயின் வழியாக வரும் மின்னோட்டத்தைக் குறைக்க வேண்டி வரும்.

இப்படிப்பட்ட இடங்களில் ரெஸிஸ்ரர்கள் என்ற பொருட்களை இணைத்து விட்டால் 

அவற்றின் மதிப்பிற்கு ஏற்ப (ஓம்ஸ் அளவிற்கு ஏற்ப) கரண்ட் அளவைக் குறைத்து மீதிக் கரண்டை செலுத்து கின்றன. 

இவற்றில் பல வகைகள் இருக்கின்றன. Wire Wound வயர் என்றல் கம்பி எனவும் வவ்ண்ட் என்றால் சுற்றப்பட்டது எனவும் பொருள்படும். 

இவை கம்பியாலே அமையப்பட்ட ரெஸிஸ்ரராகும். 30கேஜ் பருமனுள்ள 100அடி நீளமுள்ள கம்பியின் தடைத் தன்மை 50ஓம்ஸ் ஆகும். 

இதே 30கேஜ் பருமனில் 100அடி நீளத்தில் நைக்ரோம் கம்பியின் தடைத் தன்மை 500ஓம்ஸ் அளவாகக் கூடியிருப்பதைக் கவனிக்கலாம். அதாவது பொருளைப பொறுத்து அதன் தடைத் தன்மை கூடி விட்டது, 


இன்னும் 1000 ஓம்ஸ் 2000 ஓம்ஸ் ரெஸிஸ்ரன்ஸ் வேண்டுமானால் அதே நைக்ரோம் கம்பியின் 200 அடி 300 அடி என எடுத்துக் கொண்டு

ஒரு பீங்கான் குழாய் மேல் சுற்றிக் கொண்டால் 1000, 2000 ஓம்ஸ் கிடைக்கும். 

Wire Wound ரெஸிஸ்ரர்கள் பொதுவாக அதிகளவு மின்சக்தி விரயமாகும் இடங்களில் பயன்படுத்தப படுகிறது. 

அதாவது 5வாட் 10வாட் 100வாட் மின்சக்தி தாங்க வேண்டிய இடங்களில் உபயோகப் படுத்தப் படுகின்றன. ஆனால் அதன் ஓம்ஸ் அளவு 10,000ஓம்ஸ் அளவிற்கு மேலாகக் கிடைக்காது. 

மெயின் கரண்டில் வேலை செய்யும் ஏஸி-டிஸி ரேடியோ களில் மின்னழுத்தம் (ஓல்ட்) பெருமளவில் குறைக்கப்பட வேண்டி யுள்ளது. 

அந்த மாதிரியான இடங்களில் மின் சக்தியும் அதிக அளவில் செலவாகு மாதலால் இந்த ரெஸிஸ்ரர்கள் தான் பயன் படுத்தப் படுகின்றன.
Previous Post Next Post
COMMENTS... plz use me