கார்பன் ரெஸிஸ்டர்களின் வேலை என்ன? கார்பன் ரெஸிஸ்டர்களின் வேலை என்ன? - ETbuild

கார்பன் ரெஸிஸ்டர்களின் வேலை என்ன?

கார்பன் ரெஸிஸ்ரர்கள் மிகவும் சிறிதாகவே இருக்கும். ஆனால் அவற்றின் மதிப்பு 10 கோடி ஓம்ஸ் வரை இருக்கும். இதில் "கார்பன்"(கரி) மிகவும் பிரதானமான பொருளாகப் பயன்படுத்தப் படுகிறது, 
கார்பன் ரெஸிஸ்டர்

102 மூலப் பொருட்களில் காபன் 6 என்ற அணு எண்ணைக் கொண்ட எலிமென்ட் ஆகும்.

ஒரு மண்ணெணை விளக்கி லிருந்து வரும் புகையை ஒரு கண்ணாடியில் படும்படி வைத்துக் கொண்டால் அந்தப் புகைப்படலம் ஒரு நல்ல கார்பனாக அமையும். 

இதோடு சிறிதளவு கண்ணாடி, பேக்லைட் சேர்த்துவிட்டால் அது ஒரு நல்ல கார்பன் ரெஸிஸ்ரராக அமைந்து விடும். கார்பன் ரெஸிஸ்ரர்கள் 0.25, 0.5, 1, 5 வாட் வரை கிடைக்கின்றன. 

இவற்றின் மதிப்பு அப்படியே அதன் மேல் 100ஓம், 1000ஓம் என குறிப்பிடப் படுவதில்லை. அதற்கு பதிலாக பல வண்ணங்களில் ஒரு ஓரமாக 3 மோதிரங்கள் போல் கோடிட்டு அதன் மதிப்பை தெரிவிக்கிறார்கள். 

முதல் மூன்று வளையங்கள் தான் அதன் மதிப்பைத் தெரிவிக்கும் அதனை அடுத்துள்ளவை தங்கக் கோடு 5% அல்லது வெள்ளிக்கோடு 10%. இதை "டாலரன்ஸ் கலர்" என்றும் சொல்வர். 

உதாரணத்துடன் பல ரெஸிஸ்ரர்கள் மதிப்பை எப்படி கணக்கிடுவது என கவனியுங்கள். முதல் வட்டம் என்ன என கவனியுங்கள். 


அந்த வண்ணத்திற் குரிய எண்ணை அந்த ரெஸிஸ்ரரின் முதல் அளவாகவும், மூன்றவது வண்ணத்திற குரிய எண்ணிற்கு ஏற்ப

முதல் இரு எண்களையும் அடுத்து அத்தனை பூஜ்யங்களையும் சேர்த்து மொத்தமாக பார்த்து அறிந்து கொள்ள வேண்டியது தான். 

முதல் வட்டம் சிகப்பு வண்ணமாக இருந்தால் 2என குறிக்கவும், 2வது வட்டம் பச்சை வண்ணமாக இருந்தால் அதற்குரிய எண் 5யும் சேர்த்துக்கொண்டால் 25 என்று ஆகிவிடும். 

அதை அடுத்து 3வது வண்ணமாக ஒரேஞ்ச் இருந்தால் அத்ற்கேற்ப மூன்று பூஜ்யங்களை சேர்துதுக் கொண்டால் 25,000ஓம்ஸ் என கிடைத்து விடும். 

ஆயிரம் என்ற எண்ணை மெற்றிக் முறையில் கிலோ என சொல்கிறோம். ஆகவே இதன் தடை மதிப்பு 25K ஓம்ஸ் ஆகும். 
கார்பன் ரெஸிஸ்டர் வேலை

எந்த ரெஸிஸ்ரரிலும் முன்னும் பின்னும் கறுப்பு வண்ணம் இருந்தால்

அத்ற்கு மதிப்பு எதுவும் கொடுக்காமல் நடுவிலுள்ள வண்ணத்திற் குரிய மதிப்பை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். 

அதாவது 11 ஓமிலிருந்து 99 ஓம் வரை உள்ள இரு ஸ்தான் மதிப்புள்ள ரெஸீஸ்ரர்களின் கடைசி வண்ணம் கறுப்பாகவும்,

1 லிருந்து 9 ஓம் வரையுள்ள ஒரு ஸ்தான ரெஸிஸ்ரர்களில் மதிப்பு முதல் வண்ணமும் கடைசி வண்ணமும் கறுப்பாக இருக்கும். 

சில ரெஸீஸ்ரர்களீல் கடைசி வண்ணம் வண்ணமாக இருப்பதற்கு பதிலாக வெள்ளி அல்லது தங்க வளையம் இடப்பட்டிருக்கும். 

இது வெள்ளியாக இருந்தால் முதல் இரு வளையங் களிக்குரிய மதிப்பை 100 ஆல் வகுத்து கொள்ள வேண்டும். தங்கமாக இருந்தால் முதல் இரு வளையங் களுக்குரிய மதிப்பை 10ஆல் வகுத்துக் கொள்ளவும். 

தங்ககோடோ வெள்ளி கோடோ இல்லாமல் காலியாக விடப்பட்டி ருந்தால் அதன் மதிப்பு 20% கூடும் அல்லது குறையும் என்று பொருள்.
Previous Post Next Post
COMMENTS... plz use me