வீட்டுக்கு எடுப்பான தோற்றம் தரும் வளையும் கான்கிரீட் கற்கள் ! வீட்டுக்கு எடுப்பான தோற்றம் தரும் வளையும் கான்கிரீட் கற்கள் ! - ETbuild

வீட்டுக்கு எடுப்பான தோற்றம் தரும் வளையும் கான்கிரீட் கற்கள் !

கட்டுமான த்தின் நீடித்த உறுதி தன்மையை கான்கிரீட் முறைகளே தீர்மானி க்கின்றன. மாடி வீடுகள், அடுக்கு மாடி வீடுகள், தனிநபர் வீடுகள்
என வீட்டின் தன்மைக்கு ஏற்றார் போல் கான்கிரீட் பயன்பாட்டு முறைகள் வேறுபடு கின்றன.

நிரப்பு முறை, ரெடிமேட் முறை என பல முறைகளில் கட்டுமா னத்துக்கு தேவையா ன கான்கிரீட் நிரப்ப ப்பட்டு வருகிறது.

வளையும் கான்கிரீட் 

அந்த வகையில் தற்போது வளையும் திறன் கொண்ட புதிய வகை யிலான கான்கிரீட் ரகம் அறிமுகப்ப டுத்தப்ப ட்டுள்ளன.

‘என்ஜினியர்ட் சிமெண்டேஷன் காம்போசைட்’ என்று அழைக்கப்படும் இம்முறை யில் உருவாகும் கான்கிரீட் கற்கள் சுமார் 40 டிகிரி வரை வளையும் திறன் பெற்றிரு க்கின்றது.

‘பைபர் ரீன்போர்ஸ்ட் கான்கிரீட்’ என்ற முறை இந்த வளையும் கான்கிரீட் முறையில் பயன் படுத்தப்ப டுகின்றன.

இவை நுண்ணிய அள விலான மூலக் கூறுகள் என்பதால் இவற்றைக் கொண்டு உருவாக் கப்படும் கான்கிரீட்களை மெல்ல மெல்ல எளிதாக வளைத்துக் கொள்ள முடியும்.
இவை முன் னதாக அறிமுகப் படுத்தப் பட்ட ‘போர்ட்லாண்ட்’ சிமெண்ட் முறைக ளின் வாயிலாக கண்ட றியப்ப ட்டுள்ளன.

இந்த வளையும் தன்மை கொண்ட கான்கிரீட் தற்சமயம் கட்டுமானத் துறையில் கண்டறியப் பட்டுள்ள விந்தை யாகவே கருதப் படுகிறது.

இந்த முறையில் கான்கிரீட் டுடன் வெறும் 2 சதவீத அளவிற்கு மட்டுமே பைபர் சேர்க்கப் படுகிறது.

இது நானோ–மைக்ரோ–மாக்ரோ முறையில் செயல்பட்டு சுவர்களுக்கு வளையும் தன்மையை கொடுக்கிறது.

 சுவர்களை வளைக்கலாம் 

இதன் மற்றொரு அம்சமாக இதில் உருவாகும் கற்கள், கட்டுமா னங்கள் சில குறிப்பிட்ட தன்மை களை பெற்று ள்ளன.

இந்த முறையில் உருவாகும் கற்கள் மற்ற கற்களை விட எடை குறைவாக உள்ளன.

கான்கிரீட் கலவை களுடன் கண்ணாடி கழிவுகள், பாலிமர் பொருட்கள் போன்ற எடை குறைவாக மூலக்கூறுகளை கொண்டு இந்த கான்கிரீட் கற்களை தயாரிக் கின்றனர்.

வளையும் கற்கள் மூலம் கட்டப் படும் கட்டு மானங்கள் எல்லா சமயங் களிலும் வளையும் தன்மையை பெறுவதில்லை.
இதற்காக சில வழிமுறை களை மேற்கொள் கின்றனர். கட்டமைக் கப்படும் கட்டிடங் களில் வளையும் கற்களின் பங்கு அதிகமாக உள்ளன.

கட்டுமானத் துறையில் பொதுவாக வளைந்த சுவர்களை வடி வமைக்க இரண்டு சுவர்களை இணைத்து சற்று வளைவாக கான்கிரீட் சுவர்கள் அமை ப்பார்கள்.

ஆனால் இந்த முறையில் அமைக்கப் பட்ட சுவர்களையே நம் தேவைக் காகவும் அழகிற் காகவும் வளைத்துக் கொள்ள முடியும்.

விரிசலை தடுக்கும் 

இது இயற்கை அழகினை கொடுப் பதுடன் வீட்டிற்கு எடுப்பான தோற்ற த்தை தரவல்லது.

 மேலும் இதன் வளைப்பு திறன் அதிகரி ப்பதால் இதன் கடினத்த ன்மையில் எந்தவித பாதிப்பும் ஏற்படு வதில்லை.

இவற்றைக் கொண்டு பல இடங்களில் அணைகள் மற்றும் அடுக்குமாடி குடியிரு ப்புகள் அமைத்து சாதனை படைத்திருக் கின்றனர்.

இதன் மூலம் வீடுகள் கட்டுவதினால் வீட்டின் தரை மட்டத்தில் (பேஸ்மெண்டில்) ஏற்படும் விரிசல்கள் தடுக்க ப்படும்.
இதில் பைபர் பொருட்கள் பயன்ப டுத்துவ தால் தண்ணீர் உட்புகுதல் மற்றும் நீர் கசிதல் போன்ற வையும் தடுக்கப்ப டுகின்றன.

மழைக் காலங்களில் இதன் பயன்கள் குறிப்பிடும் வகையில் இருக்கும்.

இவற்றை புதிதாக கட்டும் கட்டுமா னங்களில் பயன்படுத் துவது போல முன்னதாக கட்டப் பட்டுள்ள கட்டுமா னங்களின் மேற்புறங் களிலும்

இந்த கலவை முறையை நீர் கரைசல் போல தெளித்து கட்டிடத் துக்கு வலுக் கூட்ட முடியும்.

தற்போது விரிசல் கல்களை சரிசெய்ய பயன்படு த்தப்படும் கான்கிரீட் கலவை களில் இந்த முறை பெரிதும் பயன் படுத்தப் படுவது குறிப்பிடத் தக்கது
Previous Post Next Post
COMMENTS... plz use me