கான்கிரீட் கலவை அளவு எவ்வளவு தெரியுமா? கான்கிரீட் கலவை அளவு எவ்வளவு தெரியுமா? - ETbuild

கான்கிரீட் கலவை அளவு எவ்வளவு தெரியுமா?

கட்டிடத் துக்கு வலிமை சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பவை கான்கிரீ ட்டுகள். இவை கட்டுமான பணியில் ஒரு அங்கமாக விளங்கு கின்றன.
கான்கிரீ ட்டின் உறுதி தன்மையை பொறுத்தே கட்டிடத்தின் ஆயுள் நிர்ண யிக்கப் படுவதால் கான்கிரீட் கலவை தயாரி ப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

சிமெண்டு, மணல், ஜல்லி போன்ற வைகளை கலக்கும் போது அதன் அளவைகள் சரியானதாக இருக்கிறதா? என்று பார்த்து க்கொள்ள வேண்டும்.

அளவு சரியாக இருக்க வேண்டும் 
இவைகளை சேர்ப்பது தான் கான்கிரீட் கலவை என்பத ற்காக எப்படி வேண்டுமா னாலும் கலந்து தயாரி க்கலாம் என்பது சரியான முறை அல்ல.

ஒரு பங்கு சிமெண்டு, இரண்டு பங்கு மணல், 4 பங்கு ஜல்லி என்ற விகி தத்தில் சேர்க்கப் படுவது தான் கான்கிரீட் கலவை தயாரிப்பில் சரியான நடைமுறை யாக இருந்து வருகிறது.

இந்த அளவைகள் அதிகரித்து விடாமலோ அல்லது குறைந்து விடாமலோ பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் இதன் அளவை களின் ஏற்படும் சிறு மாறுபா டும் கட்டிட த்தின் இஸ்திர தன்மையை பாதிக்க வாய்ப்பு இருக்கிறது.

இந்த கலவை களுடன் சேர்க்கப் படும் தண்ணீரும் மிகையா காமல் இருக்க வேண்டும்.

தண்ணீரின் அளவு குறைவ தும் கான் கிரீட்டின் தரத்தை பாதிக்கும்.

ஏனெனில் சிமெண்ட் கலவை யுடன் தண்ணீரை கலக்கும் போது சிமெண்டு ரசாயன மாற்ற த்துக்கு உட்பட்டு சுருக்க மடையும்.

அப்போது தண்ணீரின் அளவு சரியான தாக இருந்தால் தான் சிமெண்டு க்குள் காற்று புகாமல் இருக்கும்.

அதையும் மீறி காற்று புகுந்து வெற்றிடம் உருவானால் அந்த கான்கிரீட் கலவையின் உறுதி தன்மை கேள்விக் குறியாகி விடும்.


கவனிக்க வேண்டும் 

அதன் தாக்கம் கட்டிட த்தில் எதிரொலி க்கும். அது விரிசலா கவோ அல்லது கட்டிடத் தின் தரத்தை கேள்விக் குறியாக்கு வதாகவோ மாறும்.

ஆகவே சேர்க்கப் படும் சிமெண்டு அளவிற்கு பாதி தண்ணீர் சேர்க்கப்பட வேண்டும்.

தண்ணீரின் அளவு குறைந்தாலும் கலவை உதிரி தன்மை உடை யதாக மாறி விடும்.

அதனால் கான்கிரீட் வலிமை குறைபடும். சில வேளை களில் சிமெண்டு, மணல் கலவைக ளுடன் சேர்க்க ப்படும் ஜல்லிகள் நீருடன் கலந்து ஒன்று சேராத நிலையில் இருக்கும்.

அதுவும் கான்கிரீட் கலவைக்கு பங்கம் விளை விப்பதாக மாறும். பெரும்பா லான இடங்களில் இயந்திர ங்களை கொண்டே கான்கிரீட் கலவை தயாரிக்கப் படுகின்றன.

அதனால் கான்கிரீட் சரியான விகித த்தில் கலந்து இருக்கும் என்று சொல்லி விட முடியாது.

அந்த இயந்தி ரத்தை கையாளுபவர் சிமெண்ட், மணல், ஜல்லி, தண்ணீரின் அளவு சரியாக கலக்கப்ப டுகிறதா

என்பதை கவனித் தால் தான் கான்கிரீட் கலவை கச்சித மாக பொருந்தி இருக்கும்.

அதனால் எந்த முறையில் கான்கிரீட் கலவை தயாரிக்கப் பட்டாலும் அவை சரியாக கலக்கப் படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

உப்பு நீர் கூடாது 

அது தவிர தயாரிக்கும் கான்கிரீட் எத்தகைய கட்டுமான பணிக்கு பயன் படுத்தப் பட உள்ளது
என்பதை பொறுத்து அதில் சேர்க்கப் படும் மூலப் பொருட்க ளின் அளவுகள் மாறுபடும்.

அதற்கு ஏற்ப கலவை முறை தயாரிப்பு அமைய வேண்டும். அது போல் கான்கிரீட் கலவை தயார் செய்ய ப்படும் இடத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சூரிய ஒளி அதிகம் விழும் பகுதியில் கலவை தயாரிப் பதை தவிர்க்க வேண்டும்.

அந்த இடத்தில் தயாராகும் கலவை யில் இருக்கும் தண்ணீர் ஆவியாகும் என்பதால் கான்கி ரீட்டின் தன்மை மாறு பட்டு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக் கிறது.

மேலும் கான்கிரீட் கலவையில் சேர்க்கப் படும் தண்ணீ ரையும் கவனத் தில் கொள்ள வேண்டும்.

அந்த தண்ணீர் உப்பு தன்மை கொண்ட தாக இருக்கக் கூடாது.

சிலர் கான்கிரீட் கலவைக்கு தானே என்று தண்ணீரின் தன் மையை பரிசோதி க்காமல் இருந்து விடுவது உண்டு.

அதை தவிர்த்து உப்பு தண்ணீர் அல்லாத நல்ல தண்ணீரை பயன்படுத்த வே ண்டும்.

அதில் அலட்சியம் செய்வதும் கட்டிட த்தின் வலிமையை பாதித்து விடும். எனவே கான்கிரீட் கலவை தயாரிப்பு முறையை கண் காணிப்பது அவசியம். 
Previous Post Next Post
COMMENTS... plz use me