வீடு கட்டும் போது பணத்தை மிச்சப்படுத்த பலர் செய்யும் தவறு களிமண் கலந்த அடிமண்ணை, வெட்டு
மண்ணைக் கொண்டு அடித்தளத்தையும் வெளிப்புறச் சுவர்களையும் நிரப்புவது.
அது கூடாது. நீர் உலர்ந்த களிமண்ணில் கரையான்கள் எளிதாகப் புற்று வைக்கும்.
இதுவே பெரிய வில்லன் என்பது பலருக்கும் (கட்டட மேஸ்திரி உட்பட) தெரிவது இல்லை.
கட்டடம் கட்டும் போது மிகச் சரியாக அதற்கான மருந்தை அடித்தாலும் அதன் வீரியம் நான்கைந்து மழைக்குப் பின்
(5 ஆண்டுகளுக்குப் பிறகு) பெரிதும் குறைந்து விடவே, உலர் களிமண்ணில் மீண்டும் கரையான் உற்பத்தியாகிறது.
இவ்வாறாக முன்பே கட்டிய வீட்டில் இப்போது கரையான் வந்துள்ளதைத் தடுப்பது /ஒழிப்பது எப்படி?
வீட்டின் வெளிப்புறச் சுவர்களை ஒட்டி சுற்றி 2 அடி அகலத்தில் 3 அடி ஆழத்திற்கு (upto Grade Beam level) தோண்டி களிமண் முழுவதையும் வெட்டி எடுத்து வெளியே கொண்டு கொட்டவும்.
தோண்டிய பள்ளத்தில் (2'0' முதல் 3'0') கருங்கல் உடைதூள் (Stone crusher dust - Quarry) கொட்டி முழுமையும் நிரப்பவும்.
அதற்கு மேலும் சுவர்களை அணைத்து 10" உயரத்திற்குக் கொட்டவும். இதன் வாயிலாக மீண்டும் கரையான் உற்பத்தியாவதை முழுமையாகத் தடுக்கலாம்.
வீட்டுக்குள் கரையான்களை கட்டுப்படுத்துவது எப்படி?
சூரிய வெளிச்சம்
மரச்சாமான்களில் கரையான்கள் இருந்தால், அவற்றை வெளியில் குறைந்தது 4 மணி நேரமாவது வைக்க வேண்டும்.
இப்படி வைத்தால், சூரிய வெப்பமானது கரையான்களை அழித்து, எளிதில் வெளியேற்றி விடும்.
வீடுகளின் தரைப்பகுதி மற்றும் வெளிப்புறத்தில் சிறிய துவாரங்கள் இல்லாமல் கவனித்துக் கொள்ளவும்.
பழங்கால வீடுகளில் கரையான்கள் வசிக்க ஏற்ற இடங்கள் இருக்கும். இவை வீட்டை சுற்றிலும் உள்ள பகுதிகளில் காணப்பட்டாலும் பெரும் ஆபத்தை விளைவிக்கலாம்.
எனவே அவற்றை கட்டுப்படுத்துவது சிறந்தது. மிளகாய்த் தூள் கரையான்களை அழிக்கும் சக்தி கொண்டது.
இவற்றை மரச்சாமான்களில் தூவி விட, கரையான்கள் அழிந்து போகும்.
வேப்பிலையை பொடியாக அரைத்து, கரையான் அரித்த மரச்சாமான்களில் தூவி விடலாம்.
வேப்பிலையின் கசப்பினால் கரையான்கள் மடிந்து விடும். அல்லது வேப்பிலையை அரைத்து தண்ணீரில் கலந்து, அதனை கரையான் படிந்த மரப்பலகைகளில் தெளிக்கலாம்.
பலகைகள், மேற்புறங்களில் டெர்மைட் கன்ட்ரோல் (Termite Killer) என்ற பூச்சிக் கொல்லி மருந்தைத் தெளித்து விட்டால் கரையான்கள் வராது.
உப்பு கரையான்களை அழிக்கும். இவற்றை மரச்சாமான்களில் தூவி விட அல்லது கரைத்து தெளித்து விட, கரையான்கள் அழிந்து போகும்.
ஈரப்பதமான காலங்களில் கரையான்கள் தென்னை மரங்களை அரிக்கின்றது. இதனால் தென்னை வலுவிழந்து விடும்.
காய் உற்பத்தியும் பாதிக்கும். இதில் இருந்து தப்பிக்க, தென்னை மரங்களின் கீழ்ப்பகுதியில் சுண்ணாம்பு அடிக்கலாம்.
மரச்சாமான்களில் கரையான்கள் இருந்தால், அவற்றை வெளியில் குறைந்தது 4 மணி நேரமாவது வைக்க வேண்டும்.
இப்படி வைத்தால், சூரிய வெப்பமானது கரையான்களை அழித்து, எளிதில் வெளியேற்றி விடும்.
Tags:
hous