நம் மனதில் நேர்மறையான எண்ணங்கள் உதிக்க வீட்டில் பாசிடிவ் எனர்ஜி ! நம் மனதில் நேர்மறையான எண்ணங்கள் உதிக்க வீட்டில் பாசிடிவ் எனர்ஜி ! - ETbuild

நம் மனதில் நேர்மறையான எண்ணங்கள் உதிக்க வீட்டில் பாசிடிவ் எனர்ஜி !

நம் மனதில் நேர்மறையான எண்ணங்கள் உதிக்க வேண்டு மெனில் வீடும் அதன் வழியில் இருக்க வேண்டும். இல்லை யெனில் அலுவலகத்தை காட்டிலும் வீடு எரிச்சலூட்டக் கூடிய இடமாக மாறிவிடும். 
அப்படி நேர்மறையான சக்தியை விதைக்க சில விஷயங்களை செய்ய வேண்டி யுள்ளது. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.

கதவுகளை அடைக்காதீர்கள் :

வீட்டில் இயற்கையான காற்றும் வெளிச்சமும் மனதிற்கு மெல்லிய உணர்வை அளிக்கும். அந்த வெளிச்சம் புதிய விடியலை உணர்த்தும்.

எனவே வீட்டின் கதவு, பால்கனி கதவு, ஜன்னல்களை அடைத்து வைக்காமல் திறந்து வையுங்கள். குறிப்பாக காலை வேலையில் உதிர்க்கும் சூரியனை வீட்டில் படும் படி கதவுகளை திறந்து வையுங்கள்.

தீய விஷங்களை வீசுங்கள் :
வீட்டில் உங்களுக்கு எப்போதும் உருத்தக் கூடிய அல்லது மனநிலையை கெடுக்கும் விதமான விஷயங்கள், பொருள் ஏதேனும் இருப்பின் அதை உடனடியாக தூக்கி எறியுங்கள்.

அவை வீட்டில் இருக்கும் வரை உங்கள் மனநிலையை தொந்தரவு செய்து கொண்டே இருக்கும்.

மெல்லிய இசை :

வீட்டில் பால்கனி அல்லது ஹாலில் விண்ட் சிம்ஸ் என்று சொல்லக் கூடிய மெல்லிய சத்தத்தை எழுப்பும் கருவிகளை மேற்கூரையில் மாட்டி விடலாம். 
அவ்வபோது அடிக்கும் காற்றில் இவை எழுப்பும் சத்தம் நேர்மறையான உணர்வை உண்டாக்கும்.

பசுமையோடு சூழல் வீசும் வாழ்க்கை :

வீட்டிற்குள் இண்டோர் பிளானட்ஸ் வாங்கி வைக்கலாம். பால்கனி இருந்தால் அங்கும் செடிகள் வளர்த்து பசுமையான அமைப்பை உருவாக்கலாம்.

பூத்துக் குலுங்கும் செடி, அதை பராமரித்து வளர்ப்பது போன்ற விஷயங்கள் நம் மனதையும் ரிலாக்ஸாக்கும்.

வாசனை திரவியம் :
வீட்டில் எப்போதும் மெல்லிய நறுமணம் வீசுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இதற்காகவே வாசனை எண்ணெய், ஊதுபத்தி, பாட் பூரி, வாசனைக் கட்டைகள் என விற்கப் படுகின்றன.

அவற்றை வீட்டின் ஒவ்வொரு அறையிலும் வைத்தால் நல்ல மணம் உங்கள் மனநிலையையும் தூய்மை யாக்கும்.
Previous Post Next Post
COMMENTS... plz use me