தங்கத்தை அடுத்து விலை மதிப்பில்லாமல் ஜொலிக்கும் மணல் துகள்கள் ! தங்கத்தை அடுத்து விலை மதிப்பில்லாமல் ஜொலிக்கும் மணல் துகள்கள் ! - ETbuild

தங்கத்தை அடுத்து விலை மதிப்பில்லாமல் ஜொலிக்கும் மணல் துகள்கள் !

மணல் இல்லாமல் காங்கிரீட் இல்லை. கட்டுமானத் துறையின் பெரும்பசிக்கு தீனி போடுவதற்காக ஆஃப்ரிக்காவில் உள்ள நதிப்படுகைகள் தோண்டப்படுகின்றன.
தங்கத்தை அடுத்து விலை மதிப்பில்லாமல் ஜொலிக்கும் மணல் துகள்கள் !
நதிகளும், ஆரோக்கியமாக இருந்தால் தான் அதை சார்ந்திருப்பவர்களும் வாழ முடியும். இது பற்றி கென்யாவைச் சேர்ந்த ஹரியெட் கான்ஸ்டபிள் அலசுகிறார். 
 
மணல்… இந்த வார்த்தை விடுமுறை கால நினைவுகளுடன் தொடர்புடையது. மணலில் வீடு கட்டுவதும், அதில் பதற்றமான நண்டுகள் ஊறிச் செல்வதும், 
 
நண்டு உருவாக்கும் பெரிய வளைகள், வளையில் மறைந்திருக்கும் நண்டு என பால்ய காலம் பற்றிய நீங்கா நினைவலைகளை மணல் பற்றிய எண்ணம் எழுப்புகிறது.
 
கடலுக்கு அழகூட்டும் கடற்கரைப் பகுதிகளை மின்னச் செய்கிறது மணல். லட்சக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து வண்ண மயமான, எண்ணிலடங்கா துகள்களை ஜொலிக்கும் மணலாக உருவாக்குகிறது 
இயற்கை. எண்ணிக்கைக்குள் அடக்க முடியாத மணலின் தேவையும் கட்டுக்குள் அடங்காமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 
 
சிந்தித்துப் பார்த்தால் தெளிவாக புரியும். கட்டுமானத்திற்கு தேவைப்படும் முக்கிய பொருட்களான காங்க்ரீட், செங்கல், கண்ணாடி அனைத்திற்கும் மணல் தேவைப்படுகிறது. 
 
அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கமும், கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான தேவையும் உலகின் மிக முக்கிய இயற்கை பொருட்களின் தேவைப்பட்டியலில் நீருக்கு அடுத்த இடத்தை மணல் இடம் பெற்று விட்டது. 
 
பில்லியன் கணக்கான டன்கள் அளவிலான மணல் உல்கம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. 
 
'2012ம் ஆண்டில் மட்டும் பயன்படுத்தப்பட்ட மணலைக் கொண்டு பூமத்திய ரேகையை சுற்றி 27 மீட்டர் உயரம், 27 மீட்டர் அகலத்தில் ஒரு கான்கிரீட் சுவரை எழுப்ப முடியும் என்று ஐ.நா அறிக்கை ஒன்றில் கணிப்பு வெளியிட்டுள்ளது.
 
மணலால் சூழப்பட்டுள்ள கடற்கரையைத் தேடி நாம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை, மணல் நம் நகரங்களில் வானளாவ உயர்ந்திருக்கும் கட்டிடங்களாக மாறுவேடம் பூண்டு விட்டது.
 
டிவியில் படகுகள் மூலம் கடலில் இருந்து பெருமளவிலான மணல் தோண்டி எடுக்கப்படுவதால், பவளம், மீன்வளம், கடல் புல்லை வளரச் செய்யும் மண் ஆகியவை உருவாவது தடுக்கப்படுகிறது. 
 
இந்தக் கடல் புல் தான் கடல் ஆமைகளின் உணவாகிறது. ஆற்றுப்படுகைகள் மற்றும் கடலில் இருந்தே கட்டுமானத்திற்குத் தேவையான மணல் எடுக்கப்படுகிறது. 
 
பாலைவன மணல் மென்மையாக இருப்பதால் கட்டுமானத்திற்கு தேவையான கலவையை உருவாக்குவதற்கு பயன்படுவதில்லை.
பிரம்மாண்டமான கட்டுமானத் திட்டங்களால் துபாயின் கடல் மணல் வெகு விரைவாக கபாளீகரம் செய்யப்பட்டு விட்டது. 
எனவே தற்போது அங்கு கட்டுமானத்திற்கு தேவைப்படும் மணல் ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
 
பார்ப்பதற்கு சாதாரணமானதாக தெரிந்தாலும், மணலுக்கு இருக்கும் மகத்தான தட்டுப்பாட்டினால், வாழ்வாதரம், இயற்கை சூழலமைப்பு பாதிக்கப்படுவதுடன் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
 
இந்தியாவில் முறைகேடாக மணல் அள்ளப்பட்டு கள்ளச்சந்தையில் மணல் மாஃபியாக்களால் விற்கப்படுகிறது. 
 
சீனாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான போயாங் ஏரியில் மணல் அளவுக்கு அதிகமாக அள்ளப்பட்டு வறண்டு போய் விட்டது. 
 
இதனால் இந்த ஏரியின் மீன்வளத்தை நம்பியிருந்த நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்ட்தோடு, மில்லியன் கணக்கான புலம் பெயரும் பறவைகளும் பாதிக்கப் பட்டுள்ளன.
 
கென்யாவில், மக்குணி போன்ற ஏழை கிராமங்களின் ஆற்றுப் படுகைகளில் மணல் சுரண்டப்படுவதால் சில இடங்களில் தண்ணீரே கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
 
அடுத்த 40 ஆண்டுகளில் கென்யாவின் மக்கள் தொகை இரட்டிப்பாகலாம் என்று நம்பப்படும் சூழலில், கென்யாவின் நியூ ஸ்டேண்டர்ட் கேஜ் ரயில்வே (new Standard Gauge Railway) போன்ற பெரிய அளவிலான திட்டங்களும் அவசியமானதே. 
 
ஆனால் அதற்கு தேவைப்படும் மில்லியன்கணக்கான டன்கள் அளவிலான மணல் எங்கிருந்து கிடைக்கும்? 
 தங்கத்தை அடுத்து விலை மதிப்பில்லாமல் ஜொலிக்கும் மணல் துகள்கள் !
அண்மை ஆண்டுகளில் கென்யாவின் கடற்கரை மற்றும் உள்ளூர் நதிகள் அனைத்தும் தேவைக்கு அதிகமாக சுரண்டப்பட்டு விட்டன. இதனால், மக்குணி மிகவும் தீவிரமான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
 
மொம்பசாவிலிருந்து நைரோபி வரை 609 கிமீ தொலைவுக்கான கென்யாவின் நியூ ஸ்டேண்டர்ட் கேஜ் ரயில்வே கட்டுமானத்திற்கு மில்லியன் கணக்கான டன் மணல் தேவை.
மக்குணியில் ஆண்டு முழுவதுமே 35C (95F) க்கு அதிகமான வெப்பம் நிலவுகிறது. பருவ காலத்தில் ஆறுகள் வறண்டு போய் மணல்பாங்காய் காட்சியளிக்கும். 
 
மழைக்காலத்தில் பொழியும் மழை நீர் மணல் துகள்களின் வழியாக நிலத்திற்கு கீழே சென்று சேரும். 
 
வறட்சி காலத்தில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்களின் நீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மணலில் கிணறுகளை தோண்டப்படுகிறது.
 
இருந்த போதிலும், தற்போது நிலைமை மாறி விட்டது. அளவுக்கு அதிகமான மணல் தோண்டப்பட்டு, பாறைப்படுகைகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் மழை நீர் தேக்கப்படும் வாய்ப்பு அரிதாகி விட்டது.
 
நாடு முழுவதிலும் உள்ள மணம் எடுக்கும் பல்வேறு இடங்களுக்கு இந்த ஆண்டு துவக்கத்தில் நான் பயணம் மேற்கொண்டேன். 'இந்த நதியை இறந்து போன ஆறு என்று சொல்கிறோம் என்கிறார் உள்ளூர்வாசியான ஆண்டனி.
 
மக்குனியில் சிவப்பு கலந்த பழுப்பு நிற செங்குத்தான பாறையின் உச்சியில் நின்று கொண்டு தரிசாய் போன கிலோமே இகொல்யா நதிப்படுகையை ஏக்கத்துடன் பார்க்கிறார்.
 
சில ஆண்டுகளுக்கு முன்னர் சமதளத்தில் சென்று கொண்டிருந்த இந்த நதி தற்போது கரையின் மேல் பகுதியில் இருந்து படுகை வரை 10 மீட்டர் கீழே போய் விட்டது. 
நதி இருந்த இடம் வறண்டு போய் பாறைகளும், அதிலிருந்து மரத்தின் வேர்களும் வெளியே தெரிவது பார்ப்பதற்கே அலங்கோலமாக இருக்கிறது.
 
வளைந்து நெளிந்து நளினமாக சென்ற நதி, வறண்டு, நிலத்தின் அடியில் பாறைப் படுகைகளில் குச்சிகள் தெரிவதும், அங்கு சூரிய ஒளி பிரகாசிப்பதையும் பார்க்க முடிகிறது. 
இங்கிருந்து இனிமேல் யாருமே நீர் எடுக்க முடியாது என்கிறார் ஆண்டனி. மணல் என்பது சிலருக்கு வாழ்க்கை, பலருக்கு பணம். 
 
வேலை வாய்ப்புகள் அரிதாக இருக்கும் வறுமையான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வாழ்வின் மீது அவநம்பிக்கை ஏற்படுத்தும் காரணங்களில் ஒன்றாக மணல் மாறி விட்டது.
 
மக்குணியில் சட்ட விரோதமாக அளவுக்கு அதிகமான மணல் அள்ளப்படுவதை தடுக்க முயற்சிகளை மேற்கொண்ட உள்ளூர் காவல்துறை அதிகாரி ஜியோஃபெரி கஸ்யோகி அங்குள்ளவர்களிடம் பிரபலமானவர். 
 
2011 பிப்ரவரியில் பட்டப்பகல் நேரத்தில் கஸ்யோகி மீது விஷம் தோய்ந்த அம்புகளை எய்தும், அவர் தலையை சிதைத்தும் அவரை இளைஞர் கூட்டம் ஒன்று கொன்று விட்டது.
 
எங்களை தடுத்து நிறுத்த முயற்சிக்காதீர்கள் என்ற மிரட்டலை விடுத்திருக்கிறார்கள் மணல் மாஃபியாக்கள் என்று தமது கணவரின் கல்லறை அருகே நின்று கொண்டு சொல்கிறார் ஜியோ ஃபரேயின் மனைவி இர்னே நடுகு கஸ்யோகி.
 
அங்கிருந்து ஆண்டனியும் நானும் நடந்து வந்த போது, பகல் நேரத்திலேயே பட்டவர்த்தனமாக மணல் அள்ளி குவிக்கப்பட்டு, கொண்டு செல்வதற்கான டிரக்குக்காக காத்துக் கொண்டிருந்ததை பார்த்தோம்.
 
வறண்ட நதியையும், குவிக்கப்படும் மணலையும் பார்க்கும் போது, சிறு வயது நினைவுகளில் மட்டுமே இனிமேல் மணலை பார்க்க முடியுமோ என்று அச்சம் எழுகிறது. 
 தங்கத்தை அடுத்து விலை மதிப்பில்லாமல் ஜொலிக்கும் மணல் துகள்கள் !
இருந்த தடமே மறைந்து போகும் அளவு சுரண்டப்படும் மணல் இல்லாமல், இங்கு வசிப்பவர்கள் சந்தித்து வரும், சந்திக்கப் போகும் பிரச்சனைகளை நினைத்தால் கவலையாக இருக்கிறது.
 
அங்கு வசிப்பவர்கள் சாப்பிடுவதா, பட்டினி கிடப்பதா என்பதை இந்தப் பிரச்சினை தீர்மானிக்கும். 
 
குடிநீர் கிடைக்குமா கிடைக்காதா? தங்கள் அன்புக்கு உரியவர்களை மீண்டும் ஒரு முறை பார்க்க முடியுமா முடியாதா என்ற கேள்விகளும் இந்த 'இறக்கும் ஆறுகள் ஏற்படுத்தும் மீளாத்துயர்.
 
மணல் இல்லாமல் போனால் மரிப்பது நதிகள் மட்டுமல்ல, மனிதர்களும், உயிரினங்களும் தான். அவர்களோடு மணலை கொள்ளையடிக்கும் மனிதர்களும் மறைந்து போவார்கள்.
Previous Post Next Post
COMMENTS... plz use me