ஸ்கிரீட்
என்றால் என்ன என்று உங்களுக்கு எளிதாகப் புரிய வேண்டும் என்றால் திமிசுக்
கட்டை என்று சொல்லலாம்.
இது அளவில் சிறியதாக இருக்கும். இதையே , பெரிய
அளவில் இயந்திரங் களைக் கொண்டு இயக்கும் விதத்தில் தயாரிப்பார்கள்.
இவை
ஸ்கிரீட் எனப்படும். தட்டிக் கொட்டிப் பரப்பி, இறுக்கிவிடும் அளவு
குறிப்பட்ட அகலம் கொண்டதாக அமைக்கப்படும் ஸ்கிரீட்கள் வழக்கத்தில் உள்ளன.
இதிலேயே இன்னொரு படி மேலே போய், தேவைப்படும் அகலத்தை விருப்பம் போல் நீட்டித்துக் கொள்ள உதவுபவை எக்ஸ்டெண்டிங் ஸ்கிரீட் ஆகும்.
இந்த
புதிய வகை அறிமுகத்தால், வேலை செய்யக் கூடிய பரப்பின் அகலத்தை இரண்டு
முதல் 9.5 மீட்டர் வரை தேவைக்கேற்றபடி மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
ஏற்கனவே
பயன்பாட்டில் இருக்கும் இயந்திரங் களுடன் இந்தப் புதிய வகை
ஸ்கிரீட்களையும் இணைத்துப் பயன்படுத்தலாம்.
0.5 மீ. முதல் 3 மீ.
வரையிலான நீளத்திற்கு மட்டுமே
பயன்படுத்தக் கூடிய
ஸ்கிரீட்களை இன்னும் அதிக அகலத்தில் வேலை செய்ய வைக்க முடியும் என்பது
இந்த கண்டு பிடிப்பினால் ஏற்படும் ஆதாயமாகும்.
மேலும்,
வேலையின் தன் மைக்கேற்ப இவற்றை வேறு பல இறுக்கும் சாதனங்களுடன் இணைத்தும்
பயன்படுத்த முடியும்.
கன ரக கட்டுமான இயந்திரங்கள் தயாரிப்பில்
புகழ்பெற்று விளங்கும் வோஜெல் நிறுவனம் இத்தகைய ஸ்கிரீட்களை அறிமுகம்
செய்திருக்கிறது.
தரைப்பரப்புகளை உருவாக்க உதவும்
இயந்திரங்கள் வரிசையில் உலகிலேயே முதல் அறிமுகம் என்று
சொல்லத்தக்க
பதினோரு படைப்புகளை இவர்கள் சந்தைக்கு விட்டிருக்கிறார்கள்.
புதிய வகை
ஸ்கிரீட்களை , இயக்கும் நபர் தனது இருக்கையில் இருந்தபடியே இயக்க
முடியும்.
எளிதான இயக்கத்திற்கு ஹைட்ராலிக் முறையில்
இயங்கக் கூடிய பாகங்கள் பொருத்தப்பட்டுக் கிடைக்கின்றன.
தார் முதலிய
கலவைகளைச் சூடுபடுத்தி, சூடு ஆறாமல் தள்ளிப் பரப்ப வேண்டிய அவசியம்
ஏற்படும்.
இதற்காக, ஸ்கிரீடின் லேயர் கணிசமான அளவில்
அதிகரிக்கப் பட்டிருக்கிறது.
இதன் காரணமாக அதனை எளிதில் சூடேற வைக்கலாம்.
மிகக் குறைந்த நேரத்திற் குள்ளாகவே சூடு படுத்திப் பயன்படுத்த முடியும்.
இரைச்சலைக்
குறைத்து இயக்கும் விதத்தில் கவனமாக வடிவமைத் திருக்கிறார்கள்.
மேலும்,
இயக்குபவர்களின் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான
அமைப்பு பாதுகாப்பை உறுதி செய்கிறது.
இந்தச் சாதனத்தை இயக்கும் பொறுப்பில் இருப்பவருக்குப் பல வித இயந்திரக் கருவிகள் உதவியாக இருக்கும் வகையில் அமைத்தி ருக்கிறார்கள்.
இரவிலும் கூட இதனை இயக்குவது எளிது. சுழன்று சுழன்று வேலை செய்ய வைக்கலாம்.
இன்னும் சொல்லப் போனால் கண்ணை மூடிக் கொண்டு இயக்கலாம்.
எவ்வளவு
அகலம் கொண்ட நடைபாதை என்பதை மிகவும் துல்லியமாகக் கணக்கிட்டு அதே
அளவுகளுக்கு அமைக்க முடியும்.
வேகமாக முன்னே செலுத்த வேண்டுமா? விரைவாகப் பின்னே இழுக்க வேண்டுமா?
எளிதாகச் சில சக்கரங்களை இயக்குவதன் மூலம் கடினமான வேலையையும் கஷ்டமே இல்லாமல் செய்யலாம்.
பல அதி நவீன அம்சங்களுடன் இந்த வகைச் சாதனங்கள் அறிமுகம் செய்யப் பட்டிருக்கின்றன.
அடிக்கடி, சாலைப்பரப்பு அளவுகளை மாற்றி வேலை செய்ய வேண்டி இருக்கும்
சூழ்நிலைக ளுக்கு இது பெரிதும் பொருத்தமானது.
Tags:
build