சிக்கனமான செலவில் வீடு கட்ட சில வழிகள் ! சிக்கனமான செலவில் வீடு கட்ட சில வழிகள் ! - ETbuild

சிக்கனமான செலவில் வீடு கட்ட சில வழிகள் !

அடுக்கு மாடிக் குடியிருப்பு வீடு அல்லது கட்டு நர்களே கட்டி விற்கும் தனி வீடு போன்ற வீடுகளை வாங்கு வதில் சில சவால்கள் இருக்கும். 


ஆனால், ஒரு இடத்தை வாங்கி வீடு கட்டுவது உண்மை யிலேயே மிகப் பெரிய சவால். ஏனெனில், சொந்த வீடு என்பது வாழ்க்கை யில் பெரும் பாலானவர் களுக்குக் கனவு. 

அந்தக் கனவை நாமே கட்டி யெழுப்பும் போது ஒரு திருப்தி கிடை க்கும். அதே நேரத்தில் கட்டிய வீடு என்றால் அதற் கான விலை என்பது திட மானதாக இருக்கும்.
ஆனால், நாமே இடம் வாங்கி வீடு கட்டும் போது எவ்வளவு செலவாகும் எனத் திட்ட மாகச் சொல்ல முடியாது.

எவ்வளவு தான் பட்ஜெட் போட் டாலும் செலவு கைமீறிப் போகும்.

இந்தச் செலவு களைக் கட்டுப் படுத்த முன்பே சில யோச னைகள் செய்து கொள்ளலாம்.

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்று சொல் வதைப் போல, வீடு கட்ட முக்கியத் தேவை, மனை. 

இதை வாங்க ஆகும் செலவு மிக முக்கிய மானது. அடுத்த தாக, வீடு கட்டத் தேவை யான பொருட் களைக் கொள் முதல் செய்வது. 

ஆவண ங்கள் பதிவு, குடி நீர், மின் இணைப்புக் கோரி விண்ணப் பிப்பது, திட்ட அனுமதி வாங்குவது ஆகிய வற்றுக்கு ஆகும் செலவு ஆகி யவை அடிப் படைச் செலவி லேயே வரும். 

இச்செலவு களைப் பற்றி அனுபவம் வாய்ந்த வர்களிடம் கேட்டுச் சிக்கன மாகச் செல வழிக்க முயல வேண்டும். 

இது தவிர நமக்கு ஏற்படும் செலவு களில் அவசியச் செலவு எது, தவிர்க்கக் கூடிய செலவு எது என்பதைப் பிரித்துப் பார்க்கக் கூடிய திறமை நமக்கு இருந்தால் செலவி னங்கள் நம் கட்டுக்குள் இருக்கும்.

கட்டு மானத் தொழி லாளர் களுக்கு ஊதியம் அளித்தல், மின்சாரச் செலவு, கட்டு மானப் பொருட் களை எடுத்து வரும் 

போக்கு வரத்துச் செலவு ஆகியவை யெல்லாம் அவசியச் செலவின் கீழ் வரும். இந்தச் செலவின ங்களைத் தவிர்க்க முடியாது. 

ஆனால், நாம் போடும் திட்டச் செலவை விடச் சில சமயங் களில் இந்தச் செலவினம் அதிகமாகி விடும்.

சில நேரங் களில் வீடு கட்டுப வர்களு க்குப் பண நெருக்க டியை ஏற்படு த்தும் செலவினம் இது.

வீடு கட்ட முறை யாகத் திட்டம் போட்டுப் பணிகள் நடந்து கொண்டி ருக்கும்.

அப்போது நண்பர்கள் சொன் னார்கள், உறவி னர்கள் சொன் னார்கள் எனப் புதிய யோச னையைப் பொறியா ளரிடம் சொல்வார்கள். 

இன்னும் சில வீட்டில் உறுப்பி னர்கள் ஆசைப் படுகிறார்கள் என்று புதிய யோச னையைச் செய்து முடிக்க வற்புறுத் துவார்கள். 

கூடுதல் செலவு ஆகும் என்றாலும், இப்போது விட்டால் எப்போது செய்து முடிப்பது என்று யோச னையை நிறை வேற்ற ஆயத்த மாகி விடுவார்கள்.

இது எதிர் பாராத செலவுக் கணக் கில் வரும். ஆனால், கடைசி நேரத் தில் திட்ட த்தில் மாற்றம் செய்து

செய்ய ப்படும் பணிக ளுக்கு மதிப்பிடப் படும் தொகையை விடக் கூடுதல் செலவு ஆகவும் வாய்ப் புகள் உண்டு.
கட்டுமானப் பொருட்களின் திடீர் விலை உயர்வும் எதிர் பாராத செலவைச் சாரும்.

எல்லாச் செலவுக ளுக்கும் எப்போதும் ஒரு விஷயம் தீர்வா கவும் அமைந்தி ருக்கிறது. அது தான் சிக்கனம். 

எல்லாச் செலவு களிலும் ஓரளவு சிக்கன த்தைக் கடை பிடிக்க முயன் றால், கட்டுமானச் செலவு எகிறாமல் பார்த்துக் கொள் ளவும் முடியும்.

பணத் தேவை இல்லாமல் வீட்டுக் கட்டுமானத்தை மேற் கொள்ளவும் முடியும். 
Previous Post Next Post
COMMENTS... plz use me