நம் வீட்டில் ஏசியை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி? நம் வீட்டில் ஏசியை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி? - ETbuild

நம் வீட்டில் ஏசியை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

இப்போ தெல்லாம் கோடை காலத்தில் பெரும் பாலானோர் வீடுகளில் ஏசி பயன்படுத்துவது அதிகமாகி விட்டது. வாட்டி வதைக்கும் வெயிலுக்கு இதமாக குளு குளுவென நம் வீட்டை வைப்பதற்கு கோடை காலங்களில் ஏசி பயன்பாடு மிகவும் அதிகமாக இருக்கும். 
ஏசியை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

இதே சமயத்தில், ஏசியை முறையான பாதுகாப்புடன் பயன்படுத்தாவிட்டால், அதனால் ஏற்படும் விபத்துகளும் அதிகம்.

ஆதலால் ஏ.சியை நம் வீடுகளில் பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி என்பதை பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

பயனுள்ள தகவல்கள்: ஏசி தொழில்நுட்ப வல்லுனரின் அறிவுரையின் படி, வீட்டின் அளவு மற்றும் மின்சார வசதியை பொறுத்து, சரியான அளவு ஏ.சி-யை வைக்க வேண்டும்.

Ventilation Unit எனப்படும், வீட்டுக்கு வெளியே வைக்கப்படும் ஏ.சி-யின் பாகம் பாதுகாப்பான, திறந்த வெளியில் இருக்க வேண்டும்.
பயனுள்ள தகவல்கள்: சீரான இடைவேளையில் ஏ.சியில் உள்ள வடிகட்டி தூசியை சுத்தம் செய்வது அவசியம்.

 நாம் தூங்கும் அறையில் குளிரின் அளவு சரியாக வரவில்லை என்றால் உடனடியாக ஏ.சி மெக்கானிக் மூலம் சரி பார்த்துக் கொள்வது நல்லது.

பயனுள்ள தகவல்கள்: பெரும்பாலும் இன்வர்ட்டர் மூலம் ஏசியை பயன்படுத்து வதை தவிர்ப்பது நல்லது. ஏசி யூனிட்கள் மற்றும் வயர்களை வெப்பம் நிறைந்த பகுதியில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்.

பயனுள்ள தகவல்கள்: ஏசி மற்றும் மின்சாதன பொருட்கள் அதிக திறன் கொண்டது என்பதால், அதனை தினமும் சரிபார்ப்பது நல்லது.

கோடை காலங்களில் ஏசி பயன்பாடு அதிகம் இருக்கும் என்பதால், அவ்வப்போது ஏ.சி-யை சர்வீஸ் செய்ய வேண்டும்.

பயனுள்ள தகவல்கள்: ISO சான்றிதழ் பெற்ற ஸ்டேபிலைசேர் பயன்படுத்த வேண்டும்.
ஏசி பயன்பாட்டை எப்படி தவிர்க்கலாம்?

அதே போல் குளிர் காலத்தில் பயன்படுத்தாத ஏசியை சர்விஸ் செய்த பிறகே ஏசியை பயன்படுத்த வேண்டும். குறிப்பாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஏசியை சர்விஸ் செய்ய வேண்டும்.

அதிக மின்சார வாட்ஸ் தாங்கக்கூடிய பிளக், சுவிட்ச், கேபிளை பயன்படுத்த வேண்டும். ஏசி கருவியை அவ்வப்போது பரிசோதனை செய்வது மிகவும் அவசியம், அறையின் செயல் திறனை கொண்டு ஏசியை பயன்படுத்த வேண்டும்.
குறிப்பாக 100 சதுர அடிக்கு 1 டன், அதற்கு மேல் ஒன்றரை டன், பெரிய அறைக்கு 2 டன் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட ஏசியை பயன்படுத்த வேண்டும்.

ஏசி பயன்பாட்டை எப்படி தவிர்க்கலாம்?

‘ஏர் கூலர்’ பயன்படுத்தலாம் ஏசிக்குப் பதிலாக ‘ஏர் கூலர்’ பயன்படுத்துவது மின்சார செலவைப் பெருமளவு குறைக்கும். ஆனால், இந்த ‘ஏர் கூலர்’ வறண்ட கால நிலையைக் கொண்ட இடங்களுக்குத் தான் ஏற்றது.

இந்தியாவில் வடக்குப் பகுதிகளிலும் மேற்குப் பகுதிகளிலும் இதைப் பயன்படுத்த லாம்.

ஆனால், ‘ஏர் கூலர்’ வாங்குவதற்கு முன்னால் அவற்றின் இரைச்சல் அளவைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது. இரைச்சல் குறைவாக இருக்கும் ‘ஏர் கூலர்களும்’ இப்போது சந்தையில் வந்து விட்டன.
Previous Post Next Post
COMMENTS... plz use me