வீட்டுக் கடன் வாங்க வங்கியை எப்படி அணுக வேண்டும்? வீட்டுக் கடன் வாங்க வங்கியை எப்படி அணுக வேண்டும்? - ETbuild

வீட்டுக் கடன் வாங்க வங்கியை எப்படி அணுக வேண்டும்?

னிதனின் இன்றியமையாத தேவைகளில் முதல் மூன்று இடத்தைப் பெறுபவை உணவு, உடை, உறைவிடம். இதில் முதலிரண்டு தேவைகளுக்கு பெரிதாகப் போராட வேண்டிய தில்லை. 
 கடன் வாங்க வங்கியை எப்படி அணுக வேண்டும்?

ஆனால், சொந்தமாக ஒரு வீடு என்பது நடுத்தர மக்கள் பலருக்கும் இன்று பகல்கனவாக இருக்கிறது. இந்த கனவு நிஜமாக வேண்டு மெனில் வீட்டுக் கடன் கிடைத்தால் மட்டுமே முடியும்.  

இன்றைக்கு பல வங்கிகளும் வீட்டுக் கடனை தரத் தயாராக இருந்தாலும் அதை வாங்குவதற்கு பல படிகளைத் தாண்டி செல்ல வேண்டி இருக்கிறது.

வீட்டுக் கடன் வாங்க வங்கியை எப்படி அணுக வேண்டும்? அதற்கு என்ன தகுதிகள் வேண்டும்? வங்கிகளிடம் என்னென்ன ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்?

அடிப்படைத் தகுதி!
 
'வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பவர் மாதச் சம்பளம் வாங்குபவராக இருந்தால் அவர் நிரந்தரமான பணியில் இருப்பவராக இருக்க வேண்டும்.

தனி நபராகவோ அல்லது கணவன், மனைவி அல்லது தந்தை, மகன், நெருங்கிய சொந்தபந்தம் என இருவர் இணைந்தும் வீட்டுக் கடனை வாங்கலாம்.

வீட்டுக் கடன் வாங்கும் போது கடன் வாங்கும் நபர் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் நிகர சம்பளத்தை கணக்கில் எடுத்துக் கொள்வார்கள்.
வீட்டுக் கடனுக்கு

கணவன், மனைவி என இருவர் சேர்ந்து கடன் வாங்க விண்ணப்பித்தால் இருவரின் நிகர சம்பளத்தை கணக்கில் கொண்டு கடன் தொகையை நிர்ண யிப்பார்கள். இதனை 'நெட் மன்த்லி இன்கம்’ என்பார்கள்.

வங்கி ஸ்டேட்மென்ட், சம்பளச் சான்றிதழ், கடந்த மூன்று வருடங்கள் வருமான வரி தாக்கல் செய்த விவரங்கள் உள்ளிட்டவை களை முதலில் வங்கியில் கொடுக்க வேண்டும்.

மேலும், உங்களது வயது, சொத்து, வீடு கட்டப் போகும் அல்லது வாங்கப் போகும் இடத்தின் மதிப்பு, கடனை திரும்பச் செலுத்தும் திறன் உள்ளிட்ட வற்றை வைத்து உங்களுக்கு கடன் தரலாமா என்று முடிவு செய்வார்கள்.  

தேவையான ஆவணங்கள்!
 
சொத்து ஆவணங்கள் விற்பனை ஒப்பந்தம், லே அவுட் பிளான் அப்ரூவல், வீடு கட்ட அனுமதி வாங்கிய ஆவணம், அங்கீகரிக் கப்பட்ட மதிப்பீட்டாளர் மூலம் தரப்பட்ட சொத்தின் மதிப்பீடு, 

கட்டிய வீட்டை வாங்குவதற்கு கடன் என்றால் வீட்டு வசதி வாரியம் / கூட்டுறவு சங்கம் / பில்டர்களிடமிருந்து பெறப்பட்ட ஒதுக்கீட்டு கடிதம்.

பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
 
வாக்காளர் அடையாள அட்டை/  பாஸ்போர்ட்/ டிரைவிங் லைசன்ஸ்/ பான் கார்டு - இதில் ஏதாவது ஒரு அடையாள அட்டை.

பிஸினஸ் செய்யும் நபர் எனில் அவர்கள் பிஸினஸ் செய்யும் முகவரிக்கு உரிய அடையாளச் சான்றிதழ்.

வங்கிக் கணக்கின் கடந்த ஆறு மாத பரிவர்த்தனை.

சொத்து மற்றும் கடன் விவரம்.

சமீபத்திய சம்பளச் சான்றிதழ்.

வருமான வரி படிவம் 16 அல்லது கடந்த இரண்டு நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்த விவரம். பிஸினஸ் செய்யும் நபர்கள் எனில் மூன்று வருட வருமான வரி தாக்கல் செய்த விவரம்.   

மார்ஜின் தொகை!
வீட்டுக் கடன்

நீங்கள் கட்டப்போகும் அல்லது வாங்கப் போகும் வீட்டின் மதிப்பில் 20-25 சதவிகித மார்ஜின் தொகையை நீங்களே போட வேண்டும். மீதித் தொகையே வங்கியிலிருந்து கடனாகப் பெற முடியும்.

வீடு கட்டுவதற்கான மனை ஒரு ஊரில் இருக்கிறது; உங்கள் வங்கிக் கணக்கு வேறு ஊரில் இருக்கிறது எனில், இந்த இரண்டில் ஏதாவது ஒரு ஊரில் வீட்டுக் கடன் பெற முடியும்.

அஸ்திவாரம் போட, ரூஃப் கான்கிரீட் போட, ஃபினிஷிங் செய்ய என பல்வேறு கட்டமாகத் தான் வங்கிகள் கடன் தரும்.

கட்டி முடிக்கப்பட்ட வீடாக இருந்தால், உரிய ஆவணங் களை ஒப்படைத்து அனைத்தும் சரியாக இருப்பின் முழுத் தொகையும் வழங்கப்படும். 

எதற்கெல்லாம் கடன்?
 
வீடு கட்ட அல்லது வாங்க. 

ஃப்ளாட் கட்டுவதற்கு அல்லது வாங்குவதற்கு. 

வீட்டுப் பராமரிப்பு வேலைகள் செய்வதற்கு. 

மேலும், வீடு கட்ட ஆரம்பித்து சில ஆண்டுகள் கழித்து மேற்கொண்டு கட்ட  டாப்-அப் லோன் பெறலாம். உங்கள் சம்பள உயர்வு மற்றும் சொத்து மதிப்பு உயர்வுக்கு ஏற்ப இந்தக் கடன் தொகை இருக்கும்.
Previous Post Next Post
COMMENTS... plz use me