வீட்டுக் கடன் வட்டிக் குறைப்பு... எவ்வளவு லாபம்? வீட்டுக் கடன் வட்டிக் குறைப்பு... எவ்வளவு லாபம்? - ETbuild

வீட்டுக் கடன் வட்டிக் குறைப்பு... எவ்வளவு லாபம்?

சமீப காலத்தில் கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி 0.25 சதவிகிதத்தை தலா இருமுறை குறைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அவற்றின் வட்டி விகிதத்தை (பேஸ் ரேட்) குறைத்துள்ளன.

இதனால் வீட்டுக் கடனுக்கான வட்டி 0.15% முதல் 0.25% வரை குறைந்திருக்கிறது. சில வங்கிகள், ஏற்கெனவே கடன் வாங்கியவர் களுக்கும் புதிய வாடிக்கையாளர் கள் அளவுக்கு வட்டியைக் குறைத்துள்ளன.

சில வங்கிகள் ஏற்கெனவே கடன் வாங்கியவர் களுக்கு புதியவர்கள் அளவுக்கு வட்டியைக்  குறைக்காமல், கொஞ்சம் குறைவாகவே குறைந்துள்ளன.

ஐசிஐசிஐ பேங்க், அனைத்து (பழைய மற்றும் புதிய) வாடிக்கை யாளர்களுக்கும் வீட்டுக் கடன் வட்டியில் (மாறுபடும் வட்டி) 0.25% குறைத்து 9.90 சதவிகிதத்துக்கு கடன் வழங்குகிறது.

அதே நேரத்தில், எஸ்பிஐ புதிய வாடிக்கை யாளர்களுக்கு 9.90%-ல் வீட்டுக் கடன் வழங்குகிறது.

அதுவே பழைய வாடிக்கை யாளர் களுக்கான வட்டியை (ஃப்ளோட்டிங்) 10.10 முதல் 10.15 சதவிகிதத்தி லிருந்து 9.95 முதல் 10 சதவிகித மாகக் குறைத்துள்ளது.  

இதனை பெரிய வித்தியாசம் என்று சொல்ல முடியாது. பெண் களுக்கு சிறப்பு வட்டியாக 

ஐசிஐசிஐ பேங்க் 10.10 சதவிகிதத் திலிருந்து 9.85 சதவிகித மாகவும், எஸ்பிஐ 10.10 சதவிகிதத்திலிருந்து 9.95 சதவிகித மாகவும் குறைத்துள்ளன.

எவ்வளவு லாபம்?  

வீட்டுக் கடனுக்கான வட்டி 0.25% குறையும் போது எவ்வளவு லாபம் கிடைக்கும்? ‘‘ஒருவர் ரூ.30 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனை 10.15% மாறுபடும் வட்டியில் 20 ஆண்டுகளில் திரும்பக் கட்டுவதாக அண்மையில் வாங்கி இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

இவருக்கான இஎம்ஐ ரூ.29,249. இவருக்கு வீட்டுக் கடன் வட்டி 0.25% குறைக்கப்பட்டு 9.90 சதவிகிதமாக மாறுகிறது. அப்போது இஎம்ஐ ரூ.28,752-ஆக குறையும்.

கடனுக்கான வட்டி 10.15 சதவிகிதமாக இருக்கும் போது கடன் வாங்கியவர் 20 ஆண்டு களில் இஎம்ஐ ரூ.29,249 என்கிற பட்சத்தில், வட்டியாக மட்டும் ரூ.40,19,862 கட்டி இருப்பார்.

இதுவே வட்டி 9.90 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டு, இஎம்ஐ ரூ.28,752 என்கிற பட்சத்தில், வட்டியாக ரூ.39,00,520 கட்டி இருப்பார். 

மொத்த வட்டி மிச்சம் ரூ.1,19,342. அதாவது, ஒரு மாதத்துக்கு ரூ.497 வட்டி சேமிப்பு’’ என்றவர், சற்று நிறுத்தி தொடர்ந்தார்.

‘இஎம்ஐ-யை மாற்றாமல் ரூ.29,249 என தொடர்ந்து கட்டி வந்தால், அவருக்கு கடன் ஓராண்டுக்கு முன்பாக, 

அதாவது 19 ஆண்டுகளிலே முடிந்திருக்கும். அப்போது அவர் வட்டியாக ரூ.36,67,206 கட்டி இருப்பார். வட்டியில் ரூ.3,52,700 மிச்சமாகி இருக்கும். 

வட்டியைக் குறைக்க மறுத்தால்..?

நீங்கள் வீட்டுக் கடன் வாங்கிய வங்கி அல்லது வீட்டுக் கடன் வசதி நிறுவனம் வட்டியை குறைக்க வில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்? 

உதாரணமாக,  உங்கள் வீட்டுக் கடனுக்கான வட்டி 10.20%. இன்னொரு வங்கி 10 சதவிகிதத்துக்கு வீட்டுக் கடன் அளிக்கிறது.

உங்களின் வீட்டுக் கடன் தொகை ரூ.40 லட்சம். கடனை 20 ஆண்டுகளில் திரும்பக் கட்டினால், 

உங்களின் மாதத் தவணை ரூ.530 குறையும். மொத்தம் 20 ஆண்டுக் காலத்தில் வட்டி ரூ.1.27 லட்சம் மிச்சமாகும்.

ஆனால், கடனை மாற்றும்முன் சில செலவுகளை நீங்கள் செய்ய வேண்டும். 

புதிதாக கட்டட மதிப்பீடு அறிக்கை, லீகல் ஒப்பீனியன் போன்றவை தர வேண்டும். மேலும், பரிசீலனைக் கட்டணம் இருக்கும்.

இந்தச் செலவுகள் எல்லாம் சேர்ந்து, அதற்கு 20 ஆண்டுகளுக்கு 10% வட்டி போட்டால், 

வரும் தொகை ரூ.1.27 லட்சத்துக்கு குறைவாக இருந்தால் மட்டுமே கடனை மாற்றலாம்.

உங்கள் வங்கி, கடனுக்கான வட்டியை இப்போது குறைக்கவில்லை. அடுத்த சில மாதங்களில் குறைக்கும் என்றால் அது வரைக்கும் காத்திருக்க லாம். தப்பில்லை.

அல்லது நீங்கள் மாதத் தவணையை சரியாக கட்டிவருபவர் என்றால் மற்ற வங்கிகள் எல்லாம் வட்டியைக் குறைத்த மாதிரி உங்களுக்கும் குறைக்கும்படி கேட்கலாம்.

அப்படி குறைக்க வில்லை என்றால் வேறு வங்கிக்கு கடனை மாற்ற நீங்கள் முயற்சித்தால், நல்ல கடன்தாரரை இழக்க விரும்பாமல் கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்க வாய்ப்பு இருக்கிறது.

ஏற்கெனவே வீட்டுக் கடன் வாங்கியவர் களுக்கும் வட்டியைக் குறைக்கிறோம்  என்று வங்கிகள் சொன்னாலும் வங்கிக்கு நேரில் சென்று அதனை உறுதிப் படுத்திக் கொள்வது நல்லது.

சில வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள் வட்டியைக் குறைக்கச் சொல்லி கடிதம் கொடுத்தால் மட்டுமே வட்டியைக் குறைக்கின்றன என்பதையும் மனதில் கொள்ளுங்கள்!
Previous Post Next Post
COMMENTS... plz use me