எல்லா வகை கட்டுமானங்களுக்கும் ஏற்ற ஃ போம் கான்கிரிட் கற்கள் ! எல்லா வகை கட்டுமானங்களுக்கும் ஏற்ற ஃ போம் கான்கிரிட் கற்கள் ! - ETbuild

எல்லா வகை கட்டுமானங்களுக்கும் ஏற்ற ஃ போம் கான்கிரிட் கற்கள் !

செங்கற்களின் பயன்பாடு குறைந்து ஃப்ளை ஆஷ் கற்கள் ஆதிக்கம் செலுத்தும் இக்காலத்தில் மற்றும் 
ஒரு பசுமைக் கட்டிடப் பொருளாக கட்டுமானச் சந்தைக்குள் நுழைந்திருக்கும் புதிய வரவு தான் ஃபோம் கான்கிரீட் 

(செல்லுலர் லைட் வெயிட் கான்கிரீட்) மற்றும் ஃபோம் கான்கிரீட் பிளாக்குகள்.

இதனைத் தயாரிப்பதில் இந்திய அளவில் முன்னணியில் உள்ள நிறுவனமான டாம் இன்ஜினியர்ஸ் நிறுவனத்தின் 

நிர்வாக இயக்குநர் திரு. அருள்குமார் அவர்களை சந்தித்து ஃபோம் கான்கிரீட்டை பற்றி கேட்ட போது
“2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எங்கள் நிறுவனம் ஜெர்மன் தொழிற் நுட்பத்தை தழுவி நம் நாட்டிற்கேற்ற வாறு கீழ்க்கண்ட வற்றை தயாரித்து அளிக்கிறோம்.

 ஃபோம் கான்கிரீட் சொலூஷன்ஸ் ஃபோம் கான்கிரீட் மிக்ஸர் யூனிட்.

ஃபோம் ஜெனரேட்டர் ஃபோமிங் ஏஜெண்ட் ஃபோம் பிளாக் கட்டிங் மெஷின் ஸ்டீம் கியூரிங் சைலோ / கன்வேயர் ஃபோம் கான்கிரீட் பிரிக்ஸ் அதாவது, 

ஃபோம் கான்கிரீட் பிளாக்குகளைத் தயாரிக்கும் இயந்திரங் களையும், ஃபோம் கான்கிரீட் பிளாக்கு களையும் நாங்கள் உற்பத்தி செய்து தருகிறோம்

சிறிய அளவிலான பில்டர்கள் மற்றும் பொது மக்கள் ஃபோம் கான்கிரீட் பிளாக்குகளை மட்டும் வாங்க விரும்புவார்கள். நடுத்தர, 

பெரிய பில்டர்கள் மற்றும் பன்னடுக்கு குடியிருப்புகளைக் கட்டும் மெகா பில்டர்கள் எங்களது 

ஃபோம் கான்கிரீட் தயாரிக்கும் இயந்திரங்களை வாங்கி அவர்களே சொந்தமாக கற்களை தயாரித்துக் கொள்வர்.

அத்தகை யோருக்கு கற்களைத் தயாரிக்கும் செயல் முறைகளை சொல்லித் தருவதோடு, தேவையான மூலப்பொருட்களையும் தருகிறோம்.

சந்தையில் உள்ள பிற கற்களை விட ஃபோம் கான்கிரீட்டின் பல சாதகமான அனுகூலங்களால் தற்போது ஃபோம் கான்கிரீட் இயந்திரத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது”.

பிற கற்களை விட ஃபோம் கான்கிரீட் கற்களை பயன்படுத்தும்போது கிடைக்கக் கூடிய நன்மைகள் என்ன?

“இத்தயாரிப்புகளை கட்டுமானத்தில் பயன்படுத்தும் போது பளு தாங்கும் திறன், வெப்பத்தைக் கடத்தா திறன் ((Thermal Insulation), 

ஒலியைக் கடத்தா திறன், தீயைக் கடத்தா(Fire Proof)திறன் போன்ற கூடுதல் சிறப்புகளைப் பெறுகிறது.

அளவில் பெரியது. எடை குறைவானது. வேஸ்டேஜும் மிகக் குறைவாகும். மேலும், கட்டுமானப் பணிகளை விரைவாக முடித்து விடலாம்.

கட்டு மானத்தின் மொத்த செலவுகளில் 15 சதவிகிதம் முதல் 20 சதவிகிதம் வரை நிச்சயம் மிச்சப் படுத்தலாம். 

சந்தைக்கு வந்த புதிதில் மக்களிடையே மார்க்கெடிங் செய்வதற்கு மிகவும் சிரமப்பட்டோம்.

தற்போது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இன்று எங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளின் நன்மைகளை அறிந்து, தாமகவே முன் வந்து பொறியாளர்கள் முதல் சிறு வாடிக்கை யாளர்கள் வரை பயன்படுத்து கிறார்கள்.

எங்கள் தயாரிப்புகளை வாடிக்கை யாளர்கள் கேட்கும் அளவுகளிலும், ரெடிமேட் அளவுகளிலும் தயாரித்து வழங்கி வருகிறோம். 

கூரைகள் மீது வெப்பத்தை தாங்கும் வகையில் ‘தெர்மல் இன்சுலேஷன்’ கலவையை பூசுவதால் உள்ளே வெப்பம் புகுவது தடுக்கப்படும்.

சாதாரண கற்களில் சிமெண்ட், மணல், குவாரி டஸ்ட் போன்ற பொருட்கள்  கொண்டு கலவை இருக்கும். 

அதன் அடர்த்தி அதிகம் என்பதால் ஒலி மற்றும் வெப்பத்தினை கடத்தும் தன்மை பெற்றிருக்கும்.

ஆனால் லைட் வெயிட் கான்கிரீட்டில் அடர்த்தி குறைவு. ஃபோம் கான்கிரீட் இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப் படுகிறது.

எரிசாம்பல் (ஃபிளை ஆஷ்), சோயாபீன்ஸ் மற்றும் தாவர எண்ணெய்களி லிருந்து 

பெறப்படும் ஃபோம் மற்றும் மூலப்பொருட் களைக் கொண்டு உற்பத்தி செய்யப் படுகிறது.

இதுவே இந்திய காலநிலைக்கு சிறந்தது. சராசரி பிரிக்ஸ்களை விட எடை குறைவானது, 

வெவ்வேறு அளவுகளிலும் கிடைக்கும். தனி வீடு புராஜெக்டுகளில் ரூஃப் கான்கிரீட்டாகவும் இதை பயன்படுத்த லாம்.

இரு பக்கங்களிலும் மோல்டுகளை வைத்துவிட்டு ஆட்டோ ஃபில்லிங் முறையில் கலவை ஊற்றப்படும் போது, 

கான்கிரீட், பீம்கள், காலம்கள் போன்ற எல்லாமே தயார். பிறகு இரண்டே நாட்களில் வீடுகள் தயார்.

பிரீகாஸ்ட் கட்டுமான முறையில் இது பயன்படுத்தப் படுகிறது. உலக நாடுகள் அனைத்திலும் இந்த வகை கற்களைக் கொண்டு கட்டுமானம் அமைத்து வருகிறார்கள்.

ஆனால், இந்திய சந்தைக்கு இந்த வகை கட்டுமானப் பொருட்கள் புதுசு. பொறியா ளர்களுக்கும், 

வாடிக்கை யாளர்களுக்கும் இந்த இயந்திரம் இயக்குவது பற்றி பயிற்சி அளிக்கிறோம்” .

 உங்கள் தயாரிப்புகளின் உத்திரவாதம் பற்றி ?

“மற்ற தயாரிப்புகளைக் காட்டிலும் கூடுத லான ஆண்டுகள் உத்திரவாதம் தருகிறோம்.

ஏனெனில், மற்ற வகை கற்கள் நாட்கள் செல்ல செல்ல அதன் கடினத் தன்மை குறைந்து ஆயுள் குறையும்.

ஆனால், ஃபோம் கான்கிரீட் தயாரிப்புகள் அதற்கு மாறாக நாட்கள் அதிகரிக்க அதிகரிக்க மேலும் அதன் கடினத்தன்மை கூடும். 

இயற்கைக்கு கேடில்லா பொருட்கள் கொண்டு தயாரிப்பதால் நீண்ட ஆண்டுகள் நீடிக்கும்”

என்றார் திரு.அருள்குமார்.
Previous Post Next Post
COMMENTS... plz use me