வீட்டிற்கு பெயின்ட் அடிக்கும் பெயிண்டர்களுக்கு டிப்ஸ்கள் ! வீட்டிற்கு பெயின்ட் அடிக்கும் பெயிண்டர்களுக்கு டிப்ஸ்கள் ! - ETbuild

வீட்டிற்கு பெயின்ட் அடிக்கும் பெயிண்டர்களுக்கு டிப்ஸ்கள் !

இங்கே சொல்லி யிருக்கும் குறிப்புகள் பெயின்டர் களுக்கு மட்டுமின்றி தங்கள் வீடுகளுக்கு பெயின்ட் அடிக்க திட்ட மிட்டிருக்கும் வாசகர் களுக்கும் பொது வானது.
1. வீட்டு உரிமையா ளர்களின் பட்ஜெட் என்ன என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளு ங்கள். 

தற்போதுள்ள பெயின்ட் வகைகளில் அவர்கள் எதைப் போன்ற ஃபினிஷிங் குகளை விரும்புகி றார்கள் என்பதையும் கேட்டு அறிந்து கொள்ளு ங்கள்.

2 . பெயின்டர் என்றால் பெயின்ட் அடிப்பது தான் வேலை என்று மட்டும் இருந்து விடாமல், 

பெயின்டிங் தொடர்பான ஆலோசனை களையும் நாம் அளிக்கக் கூடியவராக இருக்க வேண்டும்.
3,இப்போ தெல்லாம் பெயிண்ட் நிறுவ னங்கள் தங்க ளுடைய தயாரிப்புகள் மற்றும் நிறங் களுக்கு ஏற்ற வகையில் அறைகளை எப்படி உருவா க்கலாம்? 

என்பதை வண்ணப் புகைப் படங்கள் அடங்கிய கேட்டலாக் குகளாக வெளியி டுகின்றன.

அவற்றை பெயிண்டர் களும் வைத்திருப்பது அவசியம். அப்போது தான் வாடிக்கையா ளர்களுக்கு எந்த பெயிண்ட்? 

எந்த அறைக்கு எந்த நிறம்? என்ற முடிவுகளைச் சுலபமாக எடுக்க முடியும்.

4. எந்த அளவு பரப்பிற்குப் பெயின்ட் செய்ய வேண்டும் என்பதைச் சரியாக கணக்குப் போட்டுக் கொள்வது முக்கியம்.


5. சதுர அடிக் கணக்கா அல்லது மொத்த மாகப் பேசிக் கொள்வதா? என்பதில் கவனமாக இருக்க வேண்டும். இதை ஒரு ஒப்பந்த மாகவே எழுதி வாங்கிக் கொள்ள வேண்டும்.

6. எந்த கடையில் வாங்கப் போகி றார்கள் என்பதை வீட்டு உரிமையா ளர்களின் முடிவுக்கே விட்டு விடுங்கள். 

அவர்கள் ஏம றாமல் இருப்பதற்குச் சில வழிகளைச் சொல்லுங்கள்.

7. நீங்கள் குறிப்பிடும் கடைகளில் தான் வாங்க வேண்டும் என்பதில் பிடிவாதம் காட்டாதீர்கள். 
உங்கள்க மிஷனுக்காகத் தான் அப்படிச் செய்கிறீர்கள் என்று நினைக்க இடம் கொடுத்து விடாதீர்கள்.

8. வீட்டு உரிமையா ளர்களின் இரசனை ஒவ்வொரு விதமாய் இருக்கும். அவர்களது விருப்பத் திற்குக் குறுக்கே நிற்காதீர்கள்.

9. இந்த பரப்பிற்கு இது ஒத்து வரும், இது ஒத்து வராது என்பதைத் தொழிற் நுட்ப ரீதியில் புரிய வையுங்கள். 

‘நான் சொல்கிறபடி செய்து விட்டுப் போ’ என்கிறவர் களிடம் முறைத்துக் கொள்ள வேண்டாம்.

10. செய்யப் போகும் வேலை புதிய கட்டட த்திலா அல்லது பழைய கட்டடத் திலா என்பதைத் தெளிவாக்கிக் கொள் ளுங்கள். 

இரண்டிற்கும் உள்ள வேறுபாடு உங்களுக்கு நன்றாகத் தெரி ந்திருக்க வேண்டும்.

11. உங்களுக்குச் சில கணக்கு களைச் சரியாகப் போடத் தெரிந்திருக்க வேண்டும். 

இத்தனை லிட்டர் பெயின்டை வாங்கினால் இத்தனை சதுர அடிக்குப் பூச முடியும் என்பதை நீங்கள் துல்லி யமாகக் கணக்குப் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

12. எந்த நேரத்தில் எந்த இடத்து வேலையை எடுத்துக் கொள்வது என்பதில் உங்களது திட்டமிடும் திறமையைக் காட்டுங்கள். 

வெயில் கொளுத்திக் கொண்டி ருக்கும் வெளிப்புறச் சுவர்களை மாலை வேளையில் தேர்ந்தெடுக் கலாமே.

13. பழைய சாமான்கள், பழைய சுவர்களைப் பெயின்ட் செய்யுமுன் அவற்றின் பரப்பைச் சுத்தம் செய்வதற்கு அதிக முக்கி யத்துவம் கொடுங்கள். 

இதனால் உங்கள் வேலை நீடித்து நிற்கும். நல்ல பெயரைப் பெற்றுத் தரும்.

14. எதையும் வீணாக்கக் கூடாது என்பதில் கவனமாக இருங்கள். பெயின்ட் டின்னைத் திறந்து வைத்துவிட்டு மறந்து போய்வி டக் கூடாது. 

கவிழ்ந்து கொட்டி வீணாக இடம் கொடுக்கக் கூடாது.

15. நீங்கள் தேர்ந் தெடுக்கும் பிரஷ்கள் தரமான வையாக இருக்க வேண்டும். தரமற்ற பிரஷ்களால் உங்கள் வேலை தான் இழுத்தடிக்கும். 

 கட்டுபடியா காமல் போய் விடலாம்.

16. நீங்கள் அடிக்கும் பெயின்ட் எவ்வளவு விரைவில் காயும் என்பது பற்றிய கணக்கும் தெரிந் திருக்க வேண்டும். 

அதற்கேற்றபடி உங்களது அடுத்த கட்ட நடவடிக் கைகளைத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

17. இந்த தொழிலில் உங்களது உடல் நலம் கெடுவத ற்கான வாய்ப்புகள் அதிகம். 

தகுந்த பாதுகாப்பு நடவடிக் கைகளை மேற் கொள்ள வேண்டும். அலட்சியம் கூடாது.

18. உங்களுடைய கருவிகள் உங்களது வேலையை எளிதாக ஆக்குப வையாக இருக்க வேண்டும். 


இதற்காக நீங்கள் செய்யும் செலவு ஒரு முதலீடு தான். புதிய தொழிற் நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தக் கற்றுக் கொள்ளுங்கள்.

19. சில பெயின்ட் தயாரிப்பு நிறுவ னங்களே பயிற்சி கொடுக்கும் முறை யையும் அறிமுகப்படு த்துகின்றன. 

அத்தகைய பயிற்சிகளில் கலந்து கொண்டு உங்களது திறமையை வளர்ததுக் கொள்ளுங்கள்.

20. ஒரே நேரத்தில் பல வேலை களுக்கு முன்பணம் வாங்க வேண்டாம். 

உங்களிடம் போது மான எண்ணிக் கையில் திறமையுள்ள உதவி யாளர்கள் இருக்கி றார்களா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.

21. உங்கள் தொழிலை ஒரு சீசனல் பிசினஸ் என்ற கோணத்தில் அணுக வேண்டும். 

சில மாதங்களில் கட்டுமான வேலை களையே செய்ய மாட்டா ர்கள். சில மாதங்களில் அடித்துப் பிடித்து விரட்டி வேலை வாங்கு வார்கள்.
Previous Post Next Post
COMMENTS... plz use me