நம் வீட்டை சுத்தமாக வைத்திருக்க எளிய வழிகள் ! நம் வீட்டை சுத்தமாக வைத்திருக்க எளிய வழிகள் ! - ETbuild

நம் வீட்டை சுத்தமாக வைத்திருக்க எளிய வழிகள் !

வீட்டை தூய்மையாக வைத்தி ருக்க கூடுதல் கவனம் செலுத்தி னாலும் சில மணி நேரங்களில் தூசிகள் சேர்ந்து விடுவது தவிர்க்க முடியாததாகி விடு கிறது.
எனினும் நாம் பராமரி ப்பதை பொருத்தே குப்பைகள் சேராது வீட்டு தூய்மை பளிச்சிடும்.

அதில் சிறிது கவனக் குறைவாக செயல் பட்டாலும் துர்நாற்றம் வீசி, வீட்டில் உள்ளவ ர்களின் உடல் ஆரோக்கி யத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 
ஆகையால் வீட்டை தூய்மை யாக வைத்தி ருக்க கடைப் பிடிக்க வேண்டிய சில குறிப்புக ளை பார்ப்போம்.

* வீட்டில் சேரும் குப்பைகளே தூய்மைக்கு முதல் எதிரி. அதனால் குப்பைக ளை சேர விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

முக்கியமாக குப்பைகள் போடுவத ற்கான கூடையில் குப்பைகளை சேர விடக் கூடாது.

அந்த கூடை யின் சுற்றுப்பகுதி காற் றோட்டம் சூழ்ந்த வடிவமை ப்புடன் கூடியதாக இருக்க வேண்டும்.

அப்போது தான் அதில் இருந்து துர்நாற்றம் அதிகமாக வீசாது.

* குப்பை தொட்டியின் மேல்புறம் மூடியுடன் கூடியதாக இருக்க வேண்டும்.

அவை திறந்து இருந்தாலும் துர்நாற்றம் வீச வழி வகுத்து விடும். பூச்சிகள் படையெடுத்து குப்பைகளை ஆக்கிரமித்து விடும்.

அதனால் நோய் பரப்ப வித்திடும் இடமாக குப்பை தொட்டி மாறிவிட வாய்ப்பு இருக்கிறது.

ஆகவே குப்பை தொட்டியில் இருக்கும் குப்பைகளை உடனுக் குடன் அப்புறப் படுத்தி விடு வது நல்லது.

தினமும் இரண்டு முறையாவது குப்பைகளை அப்புறப்ப டுத்துவது நலம்.

* குப்பைகள் அதிகம் சேரும் இடம் சமையல் அறையாக தான் இருக்கும். காய்கறி கழிவுகள் அதிக அளவில் சேரும்.

அவற்றை குப்பை தொட்டியில் கொட்டு வதை விட வீட்டு தோட்டத் துக்கு உரமாக பயன்படுத்த சாத்தியம் இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும்.
வீட்டுக்கு வெளியே தனி தொட்டியில் எளிதில் மக்கும், மக்காத கழிவுகளை தரம் பிரித்து உரமாக மாற்ற வேண்டும்.

* சமையல் செய்து முடித்த வுடன் சமையல் அறையை உடனே சுத்தம் செய்து விட வேண்டும்.

சாப்பிட்டதும் பாத்திரங் களை உடனுக்குடன் கழுவி விடுவது வேலை சுமையை குறைக்கும். சமையல் அறையும் தூய்மையாக காட்சி அளிக்கும்.

* வீட்டில் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டிய அறைகளான குளியல், கழிவறை களை பராமரி ப்பதை பொறுத்தே வீட்டு சுத்தம் வெளிப்படும்.

அவற்றை முறையாக சுத்தம் செய்யா விட்டால் துர்நாற்றம் வீச ஆரம்பித்து விடும். ஆகையால் அடிக்கடி சுத்தம் செய்து வர வேண்டும். 

அறைக்குள் காற்றுடன் கலந்து நறுமணம் ஏற்ப டுத்தும் ’ஏர் பிரஷனர் களை’வைப்பது துர்நா ற்றத்தை குறைக்கும்.

அந்த அறைகளை சுத்தப் படுத்தும் பொருட்கள் வாசனை கலந்து இருப்பது அறைக்குள் நறுமணம் வீச செய்யும்.

* குளியல், கழிப் பறைகளில் ஈரப்பதம் செறிந்து இருக்கா தவாறு பார்த்து கொள்ள வேண்டும்.

அவை துர்நாற்றம் தோன்ற வித்திட்டு விடும் என்பதால் நீர் தேங்காமல் உடனுக்குடன் துடைத்து விட வேண்டும்.

அறையை பயன் படுத்திய பின் உடனே மூடி வைப்பது அந்த அறையின் வாசம் மற்ற அறைக்குள் பரவுவதை தவிர்க்கும்.

* வீட்டில் காற்றோட்டம் சூழ்ந்து இருந்தாலே துர்நாற்றம் பரவினாலும் அவை உடனே வெளியேறி விடும். சூரிய வெளிச்சமும் துர்நா ற்றத்தை விரட்டி அடித்து விடும்.
 
ஆகவே அதற்கு வசதியாக ஜன்னல்கள் காலை, மாலை பொழுதி லாவது திறந்து இருக்கு மாறு பார்த்து கொள்ள வேண்டும்.

வீட்டை அடிக்கடி சுத்தம் செய்து வந்தாலே வீட்டு தூய்மை மேம்படும்.
Previous Post Next Post
COMMENTS... plz use me