மாடுயுலர் கிச்சன் அமைப்பது எப்படி? மாடுயுலர் கிச்சன் அமைப்பது எப்படி? - ETbuild

மாடுயுலர் கிச்சன் அமைப்பது எப்படி?

பாட்டி தரையில் உட்கார்ந்து விறகு அடுப்பில் சமைத்து போட்டு சாப்பிட்டு இருக் கிறேன்.
அம்மா நின்று கொண்டே LPG அடுப்பில் சமைத்து போட்டு பார்த்து இருக் கிறேன்.

இன்றும் எங்கள் வீட்டில் சமைய லறை கொஞ்சம் அழுக்காகத் தான் இருக்கும். எண்ணைய் கறை, திறந்து கிடக்கும் அலமாரிகள்,

மளிகை சாமான்கள் நிரப்பிய அலுமினியம் மற்றும் சில்வர் டப்பாக்கள், சுவரில் மாவுச் சிதறலோடு கிரைண்டர், மூடி வைத்த தண்ணீர் தவலைகள், அரிவாள் மனை.. ம்..ம்.. 
என்ன இருந்தாலும் அந்த வாசமே தனி தான்... இனிமேல் அதுபோல் சமையலறை இருக்க இனி வரும் மக்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

இனி யெல்லாம் மாடுயுலர் மயம். மேலை நாடுகளி லிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மற்றுமொரு வாழ்க்கை மாற்றம் தான் மாடுயுலர் கிச்சன்.

10 வருடங்க ளுக்கு முன்பு மிகப் பெரும் பணக்கார ர்கள் மேலை நாடுகளி லிருந்து சமைய லறையை

அப்படியே இறக்குமதி செய்து தங்கள் வீடுகளில் அமைத்துக் கொள்வர். 

இம்முறை சிறிது நாட்களி லேயே தோல்வி அடைந்தது. இறக்குமதி க்கு ஆகும் அதிக செலவு, அதிக கால நேரம்,

இந்தியாவில் அதை பொருத்தும் போது வரும் நடை முறைச் சிக்கல் போன்ற வற்றால் இம்முறை யை மக்கள் நிராகரிக்கத் தொடங்கினர்.

ஆனால் இப்பொழுது நிலமையே வேறு. பல உள்ளூர் நிறுவனங் கள் வெளிநாட்டு நிறுவனங் களுடன் இணைந்தும், 

பல சுயமாகவும் இத்தொழிலில் வெற்றிக் கொடி நாட்டியும் வருகின்றனர்.

சமையல றையை பகுதி பகுதியாக செய்து இன்ஸ்டால் செய்து கொள்வது தான் மாடுயுலர் கிச்சன். 

ஏதாவது ரிப்பேர் செய்ய வேண்டு மென்றாலும் அந்த ஒரு பகுதியை மட்டு கழ ற்றிக் கொண்டு போய் பழுது பார்த்து மறு படியும் வந்து மாட்டி விடு வார்கள். 

இப்போது உங்களுக்கு டிஷ் வாஷர் வாங்க விருப்பமோ வாய்ப்போ இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். 

மாடுயுலர் கிச்சன் இருந்தால் நீங்கள் விருப்பப் பட்டபோது வாங்கி உங்கள் சமைய லறையில் எளிதில் பொறுத்தி விட முடியும்.

சமைய லறையின் எல்லா இயந்திரங் களையும் எளிதில் பொருத்தி விடக் கூடிய அளவில் இதை வடி வமைத்து இருப்பர். 

இருக்கும் குறைவான இடத்தை முழுமையாக உபயோகப் படுத்தி நிறைய பொருட் களை நாம் சமைய லறையில்

வசதியான வகையில் வைத்துக் கொள்ளும் வகையில் வடிவமைப் பதே மாடுயுலர் கிச்சனின் வெற்றி க்கான ரகசியம்.

சொல்லவே தேவை யில்லை மாடுயுலர் கிச்சனின் அழகு தான் நம் இல்லத் தரசிகளை அதனிடத்தே ஈர்ப்பது.
இத்தோடு, இதை நிறுவ இரண்டு மூன்று நாட்களே போதும் என்பது மற்றுமொரு சிறப்பு மாடுயுலர் கிச்சன்,

சுமார் 75000 ரூபாயிலிருந்து, 25 இலட்சம் ரூபாய் வரை எல்லா விதமான விலைக ளிலும் நிறுவலாம். 

எல்லாம் நீங்கள் தேர்ந் தெடுக்கும் டிசைனை பொறுத்தது. சராசரியாக ஒரு 8*10 அடி மாடுயுலர் சமைய லறை அமைக்க சுமார் 1.75 முதல் 2 இலட்சம் வரை செலவாகலாம். 

இப்பொழுது புதிதாக கட்டும் எல்லா அடுக்குமாடி குடியிருப்பு களிலும் மாடு யுலர் கிச்சன் நிறுவு கிறார்கள்.

இந்த மாடுயுலர் கிச்சன் வியா பாரத்திற்கு இந்தி யாவில் மிகப்பெரும் எதிர்காலம் உள்ளதாக கணிக் கிறார்கள்.

இதன் அழகும், விலையும் நிச்சயம் பிரம்மிக்க வைக் கின்றன.
Previous Post Next Post
COMMENTS... plz use me