வீடு கட்டுவதில் சிக்கனம் செய்வது எப்படி? வீடு கட்டுவதில் சிக்கனம் செய்வது எப்படி? - ETbuild

வீடு கட்டுவதில் சிக்கனம் செய்வது எப்படி?

வீடு கட்ட வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்து விட்டாலே, அத்தியா வசிய செலவு களை கொஞ்ச மாவது தியாகம் செய்து தான் ஆக வேண்டும்.
வீடு கட்டுவதில் சிக்கனம்
கை நிறைய சம்பாதித் தால் மட்டும் போதாது, முடிந்த அளவு சிக்கன மாக இருந்து சேமிக்க வேண்டும். 

பாடுபட்டு சேர்த்த பணத்தை வீடு கட்டும் போது வீணடிக்க கூடாது. எனவே கட்டு மானத்திலும் செலவை குறைக்க வேண்டியது அவசியம். 

பொதுவாக மர வேலைப் பாடுகள் தான் அதிகம் செலவு வைப்பவை.. வாசல் கதவுக்கு மட்டும் லட்சங் களை செலவு செய்தவர் களும் இருக்கி றார்கள். 

எனவே மர வேலைப் பாடுகளில் மட்டும் கவனம் செலுத்தாமல், அலுமினிய ஜன்னல்கள், மரம் போன்ற 

தோற்ற த்தை தரும் ஸ்டீல் கதவுகள் போன்ற வற்றை கூட பயன் படுத்தலாம். 

மணல் விலை தாறு மாறாக இருக்கிறதே என கவலைப்ப டுபவர்கள் செயற்கை மணலை பயன் படுத்தலாம். 

இது மேனுபேக்சரிங் சேண்ட் அல்லது எம்.சேண்ட் எனவும் அழைக்கப் படுகிறது.

எம்.சேண்ட் என்பது பாறை களை இயந்தி ரங்கள் மூலம் உடைத்து அதில் இருந்து தயாரிக் கப்படுவது. 
கோவை மாவட்ட த்தில் செட்டிப் பாளையம், பொள்ளாச்சி, சிறுமுகை, காரமடை, உடுமலை போன்ற இடங்களில் இந்த செயற்கை மணல் தயாரிக்கப் படுகிறது. 

ஆனால் ஆற்று மணல் போன்று இல்லாமல் கருப்பு நிறத்தில் இருக்கும். 

இருந் தாலும், கட்டிடங் களுக்கு தாராளமாக பயன் படுத்தலாம் என்று நிபுணர்கள் கூறுகி ன்றனர். 

ஆற்று மணலை விட விலை மிகவும் குறைவாக இருப்ப தால் கட்டுமான செலவு அபரி மிதமாக குறையும் 

என்பதில் சந்தேகமே இல்லை என்று கட்டுமான பணிகளில் அனுபவம் உள்ள சிலர் கூறுகின்றனர்.

சென்ட்ரிங் போடும் போது ஸ்டீல் தகடுகளை வைத்து போட்டால் சிமென்ட் பூசுவதை குறைக்க லாம் இதிலும் செலவு மிச்சப்படும். 

இரண்டு அறைகளுக்கு இடையில் உள்ள சுவர்களை குறைந்த கனத்தில் அமைக்க லாம். 

அஸ்திவாரம் போடுவதில் இருந்து பெயிண்ட் அடிப்பது வரை ஒவ்வொ ன்றையும் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு திட்ட மிடுங்கள். 
சிறந்த கட்டுமான வல்லு னரையும், ஏற்கனவே வீடு கட்டியவர் களையும் சந்தித்து யோசனை கேளுங்கள். 

இதுகூட தெரிய வில்லையா என்று மற்றவர்கள் நினைப் பார்களோ என தயங்கா தீர்கள். எல்லா வற்றுக்கும் இருக்கிறது தீர்வு.
Previous Post Next Post
COMMENTS... plz use me