கட்டுமானத் துறையில் கடந்த சில ஆண்டு களாக நீடித்து வரும் தேக்க நிலை, பொருளாதார மந்தநிலை, கட்டுமானப் பொருட் களின் விலை யேற்றம்,
வீடுகளைக் கட்டி முடிப்பதில் கால தாமதம், பணமதிப்பு நீக்கம் போன்றவை அந்தத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இதன் காரணமாக, கட்டப் பட்ட சொகுசு வீடுகளை விற்க முடியாமல் கட்டுமான நிறுவ னங்கள் திணறி வருகின்றன.
இதனால், பல நகரங் களிலும் இன்று சொகுசு வீடுகள் அல்லது வில்லா எனப்படும் தனி வீடுகளைக் கட்டக் கட்டுமான நிறுவனங்கள் தயங்கு கின்றன.
மாறாக, குறைந்த விலை வீடுகளைக் கட்ட கட்டுமான நிறுவ னங்கள் ஆர்வம் காட்டு கின்றன.
இன்று முக்கிய நகரங்களின் மையப் பகுதிகளில் நிலத்தின் விலை முன்பை விட எகிறி விட்டது.
அதனால், நகர்ப் புறங்களின் மையப் பகுதியில் இடம் கிடைத் தாலும் கட்டுமான நிறுவ னங்கள் வீடு கட்ட விரும்புவ தில்லை.
எல்லா நிறுவன ங்களும் புறநகர்ப் பகுதிகளைத் தேடித்தான் போகின்றன.
சென்னையில் மட்டு மல்ல டெல்லி, மும்பை, கொல்கத்தா, அகமதாபாத் போன்ற பெருநகரங் களிலும் இதே நிலை தான்.
அதனால், நகரிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் கூடக் குறைந்த விலை வீடுகளைக் கட்டுமான நிறுவனங்கள் கட்டு கின்றன.
அப்படிக் கட்டப் படும் வீடுகளும் சொகுசு வீடுகள் அல்ல. குறைந்தவிலை வீடுகள்தாம் கட்டப் படுகின்றன.
குறைந்த விலை வீடுகள் விற்பனை யாகி விடுவது இதற்குக் காரணம்.
வீடு வாங்குவோர் யார்?
சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு எல்லோ ருக்கும் இருந்தா லும், எல்லோரா லும் வீடுகளை வாங்கிவிட முடிவ தில்லை.
குறைந்தபட்சம் ஆண்டுக்கு 4 முதல் 5 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டு வோரால் மட்டுமே வீடு வாங்குவதை நினைத்துப் பார்க்க முடிகிறது.
இந்த வருவாய்ப் பிரிவினரும் கையில் பணத்தை வைத்துக் கொண்டு வீடு வாங்குவோர் அல்ல.
வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்கியே வீடு கட்டுகி றார்கள் அல்லது வாங்கு கிறார்கள்.
எனவே,
இந்தப் பிரிவினர் ரூ.20 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரையி லான விலை யில்
வீடுகள் கிடைத்தால் மட்டுமே வீட்டை வாங்க முன் வருகி றார்கள்.
இப்படிப் பட்டவர் களின் தேவையைக் கருத்தில் கொண்டுதான் சொகுசு வீடுகளு க்குப் பதிலாகக்
குறைந்த விலை யுள்ள வீடுகளைக் கட்டுவதில் கட்டுமான நிறுவன ங்கள் ஆர்வம் காட்டுகின்றன.
ஏனெனில், வங்கி களில் 80 முதல் 85 சதவீதம் வரை கடனுதவி கிடைத்து விடுவதால்,
வீடு வாங்க விரும்பும் இந்த வருவாய்ப் பிரிவினரால் குறைந்த விலையில் புதிய வீடுகளை வாங்க முடிகிறது.
இந்த வீடுகள் 550 முதல் 700 சதுர அடி பரப்பிருந்தால் போதும் என்றும் அவர்கள் நினைக் கிறார்கள்.
அதை மனதில் வைத்தே குறைந்த பரப்பளவி லான வீடுகளைக் குறைந்த விலையில் கட்ட கட்டுமானத் துறையினர் விரும்பு கிறார்கள்.
பெரு நகரங்கள் உள்ளிட்ட இரண்டாம் கட்ட நகரங்களில் கூட மூன்று படுக்கை அறைகள் கொண்ட வீடுகள்
கட்டி முடிக்கப் பட்டு, பலவும் வாங்கு வதற்கு ஆள் இல்லாமல் காலி யாகவே கிடக்கின்றன.
அப்படி
யானால், சொகுசு வீடுகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஆனால், இரண்டு
படுக்கை அறை, ஒரு படுக்கை அறை கொண்ட வீடுகள் ஓரளவுக்கு விற்பனை யாகி
விடுகின்றன.
இந்தப் போக்கின் காரண மாகவே கடந்த சில ஆண்டு களாகவே கட்டுமானத் துறையினர்
அதிக விலை யுள்ள சொகுசு வீடுகளைக் கட்டுவதை குறிப்பிடத் தக்க அளவில் குறைத்து விட்டனர்.
மாறாக, குறைந்த விலை யுள்ள வீடுகளைக் கட்டுவதில் முனைப்பு காட்டுகி றார்கள்.
இந்த நிலை இனி வரும் காலத்தி லும் தொடரவே செய்யும் என எதிர் பார்க்கலாம்.
Tags:
build