கலவையை ஊற்றும் போது நன்றாக கவனியுங்க ! கலவையை ஊற்றும் போது நன்றாக கவனியுங்க ! - ETbuild

கலவையை ஊற்றும் போது நன்றாக கவனியுங்க !

கலவையைக் கலந்து , தேவைப்படும் இடத்தில், முறை யாகக் கொட்டிப் பரப்பு வதைக் கான் கிரீட்டை ஊற்றுதல் என்று சொல் லலாம்.கான்கிரீட் இடும் வேலை என்றும் குறிப்பி டலாம்.
இத்தகைய வேலை களை மேற்கொள் வதற்கு முன்பாக, சோதிக்க வேண்டிய விசயங்கள் பல இருக்கின்றன.

இந்தக் கடமை களை முறைப்படி நிறை வேற்றினால் தான் கான்கிரீட்டை ஊற்றும் வேலை முழுமை பெறும்.
கான்கிரீட் இடப்படு வதற்கு முன், இடப்பட வேண்டிய பகுதியை முழுமை யாக ஆராய வேண்டும்.

பலகை அடைக்கும் வேலைகள் எந்த அளவுக்குச் செம்மை யாக நிறை வேற்றப்பட் டுள்ளன என்று பார்க்க வேண்டும்.

பலகை அடைப்பின் அளவு, வடிவம் ஆகிய வற்றைச் சோதிக்க வேண்டும்.

செய்யப் பட உள்ள வேலை யின் தன்மைக்கு ஏற்ற வகையில் அமைத்தி ருக்கிறா ர்களா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.

கலவை வழிந்து வெளியே ஓடி விடாமல் இருப்ப தற்கும், ஒழுகி வீணா வதைத் தடுப்ப தற்கும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப் பட்டிருக்கி ன்றனவா என்று பார்ப்பது முக்கியம்.

முட்டுக்கள் முறை யான விதத்தில் பாரத்தைத் தாங்கக் கூடியவையா?

சரியான இடத்தில் அமைக்கப் பட்டிருக்கி ன்றனவா?  இணைப் புகள் உறுதியாக உள்ளனவா? என்று சோதிக்க வேண்டும்.

கான்கிரீட் வந்து சேர்ந்து விட்டதா? அவசரம் வேண்டாம். கான் கிரீட்டைச் சோதியு ங்கள். 

அது தரமாகத் தயாரிக்கப்பட் டிருக்கிறதா? சோதனை முடிவுகள் திருப்தி கரமாக இருந்தா லொழியக் கான்கிரீட் இடும் வேலை களைத் துவக்க வேண்டாம்.

இதற்கு என்ன வழி? நீங்களே சோதித்துப் பார்க்க வேண்டியது தான்.

ஜல்லி களின் அளவை எப்போ தாவது திடீரென்று சோதித்துப் பாருங்கள். கலவையில் சேர்க்கப் படும் சிமென்ட் தரமானது தானா?

விரும்பிய கிரேடு கொண்டதா? தயாரிப்பு நிறுவனம் எப்படி?  சிமென்ட் எவ்வளவு வேகத்தில் இறுகுகிறது? உறுதி எப்படி? சோதித்துப் பார்க்க வேண்டும்.

கான் கிரீட்டில் கட்டிகள் இருக்கக் கூடாது. அப்போது தான் பரவுவது சீராக இருக்கும்.

உயரமான இடங்க ளுக்குப் பம்ப் செய்வதாக இருந்தா லும் அந்த வேலை தடையில் லாமல் நடக்கும்.

கான் கிரீட்டுக்குள் எந்த அளவிற்குக் காற்று இடம் பெற்றி ருக்கிறது என்பதையும் சோதிக்க வேண்டும்.

கலவை யின் வெப்ப நிலை என்ன? எப்போது இறுகும்? எவ்வளவு நேரத்தில் உறுதி பெறும்? சன்னத் தன்மை எப்படி? வலு எப்படி? ஆராய வேண்டும்.
கான்கிரீட் ஊற்றப் பட்ட பிறகும் உங்களுக்கு வேலை இருக்கத் தான் செய்கிறது.

எங்கே கான்கிரீட்டை இட்டீர்களோ அந்த இடத்தைக் கவன மாகச் சோதியு ங்கள். வெடிப்புகள் உருவாகி இருக் கின்றவா என்று விழிப்பாகப் பாருங்கள்.

எங்காவது சில சில்லுகள் பெயர்ந்து விழுந்திருக் கின்றனவா என்று ஆராயு ங்கள்.

தேன்கூடு வடிவிலான குறைபாடு களையும் கவனிக்கத் தவற வேண்டாம். ஒவ்வொ ன்றையும் கவனமாகச் சோதிக்க வேண்டும்.

ஒவ்வொரு பகுதி யையும் உற்றுப் பார்த்து குறை களைக் குறித்துக் கொள்ள வேண்டும்.

காற்று வெற்றி டங்கள் உருவாகி இருக் கலாம். கறைகள் படிந்திரு க்கலாம். நிறம் மாறி இருக்கக் கூடும்.
Previous Post Next Post
COMMENTS... plz use me