இன்று
பல இடங்களில், புதிய கட்டமைப்புகள் மேற்கொள்ளப்படும் போது அவர்களுக்கு ஒரு
பெரிய பிரச்சனையா யிருப்பது, அருகில் ஏற்கனவே இருக்கும் பழைய
கட்டிடங்கள் தான்.
அவை,
பெரும்பாலும் 2 அல்லது 3 தளங்களை மட்டுமே கொண்டுள்ளவை யாயிருப்பதால்
அவற்றிற்கு தனிப்பட்ட திறப்பு வகை அடித்தளங்களை மிகக் குறைந்த ஆழத்தில்
அமைத் திருப்பார்கள்.
ஆனால், அருகில் கட்டப் படவுள்ள
அடுக்குமாடி கட்டடத்திற்கு சற்று பெரிய அளவில், அதிக ஆழத்தில் அடித்தளங்களை
அமைக்க வேண்டிய திருக்கும்.
அடுத்து, சென்னை போன்ற மாநகரகளில் நில மதிப்பு
மிக அதிகமாய் இருப்பதால் 90 சதவித
கட்டமைப்புகளின் உரிமை யாளர்களின்
குறிப்பாக 2 அல்லது 3 தளங்கள் கட்டுவோர் நிர்ணயிக்கப் பட்டுள்ள
குறைந்த பட்ச
இடைவெளி விடாமல் பழைய கட்டடங்களை ஒட்டி புதிய கட்டடங்களை கட்டிடத் தையும்
கட்டி முடித்து விட்டு,
தூண்களுக்கு இடையில் தண்ணீர் தொட்டி மற்றும் கழிவு
நீர் தொட்டி அமைப்பதற்கென ஆழமாக குழி தோண்டு கிறார்கள்.
அடித்தளத்தின்
அருகிலேயே அடித்தளத்தை விட ஆழமாக குழி தோண்டும் போது அடித்தளம் சரிந்து
விபத்துகள் ஏற்பட்டு விடும்.
இதை கூட அறியாத அளவிற்கு மக்கள்
இருக்கிறார்கள் என்பது தான் வேதனை.
சமீபத்தில் சென்னை
தேனாம்பேட்டையில் நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு
உள்ளாக்கி யிருக்கிறது.
வீடுகளில் சப்ளை செய்யப்படும் மாநகராட்சி குடிநீர்
விநியோகம் நிறுத்தப்பட, அந்தப் பகுதிகளில் லாரிகளில் தண்ணீர் சப்ளை
செய்யப் பட்டிருக்கிறது.
ஒட்டு மொத்தமாக லாரி தண்ணீரை ஸ்டோர் செய்வதற்கு
இடமில்லாத சூழ்நிலையில்
அந்த வீட்டு உரிமையாளர் தரை தளத்திற்கு கீழே
நிலவறைத் தொட்டி ஒன்றை அமைக்க முற்பட்டிருக்கிறார்.
வீட்டின் அஸ்திவாரத்தை
ஒட்டியபடியும், அஸ்திவாரத்தை விட ஆழமாகவும் குழி தொட்டிக்காக தோண்டப்பட
பிடிப்பும்,
இறுக்கமும் இல்லாத அஸ்திவாரம் ஆட்டம் கண்டு, ஒட்டுமொத்த
கட்டுமானமே சரிந்து விட்டது.
இதற்கு முக்கிய காரணம் அறியாமை மட்டுமே.
சரியான பொறி யாளர்களின் ஆலோசனை களோ,
வழி காட்டுதலோ இல்லாமல், மேஸ்திரிகள்
மூலம் இப்படிப்பட்ட வேலைகளை பலர் மேற் கொள்கின்றனர்.
சில இடங்களில் ஸ்தல
நிலைமை மற்றும் மண் வகை சாதகமாய் இருப்பதால் இவர்கள் தவறுகள் செய்த போதும்
இடிதல்கள் நிகழ்வதில்லை,
ஆகவே, அதே முறை அனைத்து இடங்களில்
மேற்கொள்ளப்பட்டு எதிர்பாராத தீய விளைவுகளை ஏற்படுத்து கின்றன.
ஒரு
அடித்தளத்தின் அருகில் குழி தோண்டும் போது, அந்த அடித்தளம் வழியாக மண் மீது
சுமத்தப்படும் பளு, அடித்தளத்தின் பரப்பளவு, மண்ணின் வகை
மற்றும் அதன்
தன்மை பற்ஷீ ஆய்ந்து அதற்கேற்ப குழி எவ்வளவு ஆழம் தோண்டலாம், அடித்தள
விளிம்பிலிருந்து எவ்வளவு தூரத்தில் தோண்டலாம்.
அந்த குழியின் சுற்றுச்
சுவர் மற்றும் அடிப்பகுதி எப்படி அமைக்கப்பட்ட வேண்டும் என்பது முடிவு
செய்யப்பட வேண்டும்.
ஒரு புரிந்து கொள்தலுக் காக கீழ்கண்ட
உதாரணத்தைப் பார்ப்போம். ஒரு மணற்பாங் கான இடத்தில் அமைக்கப் பட்டுள்ள
அடித்தளம் அதன் கீழ் உள்ள மண்ணின் ஒரு சதுர மீட்டர் பரப்பளவில் 18 டன்
பாரத்தை சுமத்துகிறது என்பர்.
இந்த பளுவை தாங்கும் மண் சுமாராக அதில்
மூன்றில் ஒரு பங்கு பளுவை,
அதாவது சதுர மீட்டருக்கு 6 டன் பாரத்தை கிடைமட்ட
திசையில் வெளி அருகில் அமைந்துள்ள மண்ணின் மீது செலுத்துகிறது.
அந்த மண்
வெளி நகர முடியாத நிலையில், அப்பாரத்தில் மூன்றில் ஒரு பங்கு பாரத்தை,
அதாவது சதுர மீட்டருக்கு 2 டன் பாரத்தை மேல் பிதுங்கி எழுவதைப் போல இந்த
மண்னை மேல் நகர அனுமதித்தால் அடித்தளம் தொடற்சியாக மண்ணிற்குள் அமிழ
ஆரம்பிக்கும்.
ஆகவே, அடித்தளத்தைச் சுற்றியுள்ள மண் மேலே
எழும்பா வண்ணம் கீழ் அழுத்தி வைக்கப் படவேண்டும்.
அவ்வாறு அழுத்துவது எது
என்றால், அந்த குறிப்பிட்ட அடித்தள மட்டத்துக்கு மேல் உள்ள மண்ணின் சுய
பாரம்தான்.
அம்மண்ணின் அலகுப் பளு கன மீட்டருக்கு 1.33 டன் என்றால், 1.5
மீட்டர் உயர மண்ணின் பளு சதுர மீட்டருக்கு 2 டன் இருக்கும்.
அதாவது, இந்த
அடித்தளம் தரைமட்டத்துக்கு கீழ் 5 அடி ஆழத்தில் அமைக்கப் பட்ட
அடித்தளத்திற்கு கீழுள்ள மண்ணாவது எங்கும் நகராமல் பாரத்தைச் சுமக்கும்.
நம்மில் பாரம் சுமக்கும் தூண்களின் அருகில் அவற்றின் அடித்தள மட்டம் வரை
பாதுகாப்பாக குழி தோண்டலாம் என்று தவறான எண்ணம் கொண்டுள்ளோம்.
மேற்கூறப்பட்ட
உதாரணத்தில் அடித்தளம் 5 அடி ஆழத்தில் இருக்க வேண்டும் என்று பார்த்தோம்.
இப்படித் தான் அடித்தளத்திற் கான ஆழம் கணக்கிடப் படுகிறது.
இதில் கட்டடம்
கட்டி முடிக்கப் பட்ட பின் 3 அடி ஆழம் பள்ளம் தோண்டினால், மீதமுள்ள 2 அடி
ஆழ மண் மேலே தூக்கப்பட்டு,
அடித்தளத்தின் கீழ் உள்ள மண் வெளியே
பிதுக்கப்பட்டு நகரும் நிலை ஏற்படும் அதன் நிமித்தம் அடித்தளம் கீழ் நோக்கி
அமிழ ஆரம்பிக்கும்.
ஆகவே முழு வடிவ்மைப்பு பாரத்தையும் சுமந்து நிற்கும்
தூண்களுக் கருகில், அக்குஷீப்பிட்ட மண்ணில் குறைந்த பட்சமாக தேவைப்படும்
அடித்தள ஆழத்திற்கு கீழ் குழி தோண்டாமல் இருப்பது நல்லது.
சரி,
அப்படியாயின், கீழ்நிலை நீர்த்தொட்டிகள், கழிவு நீர்த்தொட்டிகள், நீர்
பரவுத்தொட்டிகள், மின்தூக்கி கிணறுகள் ஆகிய வற்றை எவ்வாறு அமைப்பது எனக்
கேட்கலாம்.
1. மேற்கண்ட வகைத் தொட்டிகள் கட்டிடப் பணிகள்
ஆரம்பிக்கப் பட்டவுடன், தூண்களின் மேல் பாரம் சுமத்தப்படும் முன்பே
அமைக்கப் பட வேண்டும்.
2.இந்த குழிகள் எவ்வளவு ஆழம்
தோண்டப்பட உள்ளதோ, அதைவிட 3 அல்லது 4 அடிகள் அதிக ஆழத்தில் அருகிலுள்ள
தூண்களுக் கான அடித்தளம் அமைக்கப்பட வேண்டும்.
3.தூண்களுக்கு
அருகில் அமைக்கப்படும் தொட்டிகளின் சுற்று சுவறுகள், அடிதளத்தின் கீழ்
உள்ள மண் வெளிநோக்கி தள்ளப்படும் போது
படுக்கை திசையில் சுமரக்கூடிய
பாரத்தை (மேற் கண்ட உதாரணத்ததல் சதுர அடிக்கு 6 டன்)
பாதுகாப்பாக சுமக்கும்
வகையில் வலுவூட்டப் பட்ட காங்கிரீட்டினால் அமைக்கப்பட வேண்டும்.
அதைப்
போலவே தொட்டியின் அடிமட்ட பாளமும் அதன் அடியில் மேல் நோக்கி சுமரக்கூடிய
பாரத்தை
(உதாரணத்தை சதுர மீட்டருக்கு 2 டன் ) நிலத்தடி நீரினால் சுமரும்
பாரத்தோடு சேர்ந்து,
பாதுகாப்போடு சுமக்கும் வகையில் வலுவூட்டப் பட்ட
காங்கிரீட்டினால் அமைக்கப்பட வேண்டும்.
4.ஏற்கனவே முழு
பாரத்தையும் சுமந்து நிற்கும் தூண்களுக் கருகில் குழிகள் தோண்டுவது
எப்படியும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், அது தவிற்கப்பட
வேண்டும்.
தவிற்க முடியாத பட்சத்தில் உரிய பொறியாளர் களிடம் ஆலோசனைகள்
பெற்று,
தூண்களின் பாரத்தைச் சுமக்க உத்திரங் களுக்கு தற்காலிக மாற்று
தாங்கிகள் அமைத்தும், மண் சரிவு
அல்லது நகர்வைத்தடுக்க அடித்தளங்களை ஒட்டி
இரும்புத் தகடுகளால் தற்காலிக தடுப்பு சுவர் அமைத்தும் குழிகள் தோண்டப்பட
வேண்டும்.
அல்லது வட்டவடிவில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட காங்கிரீட் உறைகள்
ஒன்றோன்றாக இறக்கப் படலாம்.
அவற்றின் அடித்தளம் பலமான காங்கிரீட்டால்
அமைக்கப்படுவது முக்கியம்.
5. குழிகள் தூண்களின் அடித்தள
விளிம்பிலிருந்து 5 அல்லது 6 அடி தூரத்தில் அமைவது நல்லது.
எக்காரணம்
கொண்டும் அடித்தள மட்டத்துக்கு கீழ் குழி தோண்டுவது தவிர்க்கப்பட வேண்டும்.
6. ஆரம்பத்திலேயே, கட்டிடத்தின் அருகில் ஆழமானகுழி தேவைப் படுகிறது என அஷீயும் பட்சத்தில், கட்டிடத் திற்கு ஆள்துளை அடித்தளம் அமைத்தல் நல்லது.
7.
எளிதில் சரியக்கூடிய, அல்லது நீரில் கரையக் கூடிய மற்றும் தளர்வு நிலையிலான
மண் உள்ள இடங்களில் குழிகள் தோண்டும் போது கூடுதல் கவனம் செலுத்தப் பட
வேண்டும்.
நீங்கள் குடித்தனக் காரராக இருந்தாலும் சரி,
பக்கத்து வீட்டுக்காரராக இருந்தாலும் சரி,
கட்டி முடிக்கப்பட்ட
கட்டிடத்தில் விதிகளை மீறி அடித்தளம் அருகேவோ அல்லது அடித்தளம் கீழாகவோ,
குழி, பள்ளம் தோண்டு கிறார்கள் எனில்,
உடனே மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி
அதிகாரிகளிடம் தெரிவியுங்கள்.
ஏனெனில், அது அவர்களுக் கான குழி மட்டுமல்ல.
நமக்கான குழியாகவும் இருந்துவிடக் கூடும்.
Tags:
build