பெயிண்டால் கவரலாம் அனைவரையும் எப்படி? - ETbuild

பெயிண்டால் கவரலாம் அனைவரையும் எப்படி?

லட்சங்கள், கோடிகளைக் கொட்டி வீட்டை பார்த்துப் பார்த்து கட்டினாலும் அதற்கு சரியாக வெள்ளை அடித்தால் தான் பார்க்க நன்றாக இருக்கும். 


சாதாரண மாக சுண்ணாம்பு அடித்தாலும், சூப்பர் செம், டிஸ்டம்பர், எமல்ஷன் என விலை உயர்த்த ரகங்களை அடித்தாலும் 
நாம் எடுப்பான வண்ணங் களைத் தேர்ந்தெடுத்து தரமாக பெயின்ட் அடித்தால் சாதாரண வீடும் அனைவரையும் கவர்ந்து இழுக்கும்.

பெயின்ட் அடிப்பதால் வீடு நீண்ட காலம் பாதுகாக்கப் படும். பெயின்ட் அடிக்கும் விஷயத்தில் அனைவரும் ஓரளவு அடிப்படை அறிவு தேவை. 
சில முக்கிய தகவல் களை பார்ப்போமா? பெயின்ட் அடிப்பதில் சரியான முறையை பின்பற்றினால் நேரமும், பணமும் மிச்சமாகும். 

அதாவது முதலில் உத்திரத் துக்கும், அடுத்ததாக சுவருக்கும், அதன் பின் கதவு, ஜன்னல் களுக்கும் பெயின்ட் அடிப்பது சரியான முறையாகும்.

சுவருக்கும், உத்திரத்து க்கும் தண்ணீர் சேர்த்து அடிக்கக் கூடிய பெயின்ட் அல்லது எமல்ஷனை தேர்வு செய்யலாம். 

அதாவது பெயின்டர் கூறும் லேடக்ஸ் அல்லது பிளாஸ்டிக் அடிப்படை கொண்ட பெயின்டை தேர்வு செய்யலாம். 

சுவர் பளபளப்பாக இருக்க ஷைன் வகை பெயின்ட், சற்றே சொர சொரப்பாக இருக்க மேட், 

அதிக பளபளப்பாக இருக்க ஹைஷைன் என பெயின்ட் வகைகள் உள்ளன. அவற்றை தேவைக்கு ஏற்ப தேர்வு செய்யலாம். 

அழுக்கு பட்டால் கழுவக்கூடிய, பூஞ்சை தாக்காத பெயின்டையும் தேர்வு செய்யலாம்.

உலோக பரப்புகளு க்கு கரையும் தன்மை கொண்ட எனாமல் பெயின்ட்கள் ஏற்றவை. 

அதிலும் கூட பளபளப்புத் தன்மை, துருப் பிடிப்பதை தடுக்கும் தன்மை கொண்ட எனாமல் பெயின்ட்களை தேவைக்கு ஏற்ப தேர்வு செய்வது சிறந்தது.

மர பொருட்களுக்கு மரத்தின் தன்மை நிறம் மறையாமல் அதை பளபளப் பாக்கும் பெயின்ட்கள், அல்லது மரத்தை முற்றிலும் மறைக்கும் பெயின்ட்கள் உள்ளன.

இதே போல பெயின்டை அடிக்க பிரஷ் அல்லது ரோலரை பயன் படுத்தலாம். 

பெரும்பாலும் பெயின்ட் உற்பத்தியாளர் பரிந்துரை செய்யும் உபகரண த்தை பயன் படுத்துவது நல்லது. 

உத்திரம் சுவர்களில் முதலில் பிரஷ்ஷை பயன்படுத்தி வெள்ளை அடித்து விட்டு பிறகு ரோலரை உபயோகப் படுத்தினால் 2வது முறை அடித்தால் சுவர் வழு  வழுப்பாக சீராக இருக்கும்.

கரையும் தன்மை கொண்ட பெயின்ட்களை உலோகம் மற்றும் மரப் பொருட்களில் அடிக்க பிரஷ், ஸ்பிரேயர் பயன்படுத்த லாம். 

இதையும் தயாரிப்பாளர் பரிந்துரைப்படி தேர்வு செய்வதே சிறந்தது. எந்த வண்ணத்தை தேர்வு செய்வது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கும். 
ஒரு அறைக்கு பெயின்ட் வண்ணத்தை தேர்வு செய்யும் முன்பே அந்த அறையில் இப்போதும், கொஞ்சம் காலம் கழித்தும் 

எந்த மாதிரி யான உள் அலங்கார வேலைகளைச் செய்யப் போகிறோம் என்பதை முன் கூட்டியே திட்டமிட்டு அதற்கு ஏற்ப வண்ணத்தை தேர்வு செய்வது சிறந்தது. 

தரையின் நிறம், அறையில் போடப்படும் பர்னீச்சர் நிறம், திரைச்சீலை நிறம் என எல்லா விஷயங் களையும் ஆராய்ந்து அதற்கு ஏற்ற நிறத்தை தேர்வு செய்தால் நன்றாக இருக்கும்.

கட்டிடத்து க்கு வெளிப்பூச்சு செய்ய வெப்பநிலை அதிகமாகவும் இல்லாமல், ஈரப்பத மான காலமாக வும் இல்லாமல் இருப்பது நல்லது. 
மழை பெய்யும் காலங்கள், கடும் வெயில் காலங்களை தவிர்ப்பது நல்லது. கட்டத்தின் உள்ளே வெள்ளை அடிக்க கட்டுப்பாடு இல்லை. 

பெயின்ட் அடிக்கும் போது நன்கு வெளிச்சம் இருக்கு மாறு பார்த்துக் கொள்ளுங்கள். 

பெயின்ட் வாசனை வெளியேறவும், விரைவில் உலரவும் கதவு, ஜன்னல் களை திறந்து வைத்தல் சிறந்தது.

புதிதாக சிமென்ட் பூச்சு செய்யப் பட்ட சுவற்றில் வெள்ளை யடிக்க குறிப்பிட்ட கால அளவு காத்திருக்க வேண்டும் என்றெல்லாம் இல்லை. 

சிமென்ட் பூச்சு காய்ந்த பிறகு வெள்ளை யடிக்கலாம். இதற்கும் தகுந்த வல்லுனர் ஆலோசனை பெறுவது நல்லது. 

சிமென்ட் பூச்சு செய்யப்பட்ட சுவரில் முடியளவு விரிசல் வருவது சகஜமானது தான். 

அதற்காக கவலைப் படத் தேவை யில்லை. ஆனால், பெரிய விரிசல் வந்தால் உடனடியாக கட்டிடம் தொடர்பான வருடன் ஆலோசனை செய்து சரி செய்வது நல்லது
Previous Post Next Post
COMMENTS... plz use me