கட்டிடத்தில் லிப்டுக்கு எதிரில் வாசல் இருந்தால் ! கட்டிடத்தில் லிப்டுக்கு எதிரில் வாசல் இருந்தால் ! - ETbuild

கட்டிடத்தில் லிப்டுக்கு எதிரில் வாசல் இருந்தால் !

தனி வீடு, சுற்றிலும் மரங்கள், கிணற்று நீர் என இயற்கை சூழ்நிலை யில் வாழ்ந்த காலம் போய், அடுக்குமாடி குடியிருப்பு களின் ஆதிக்கம் தான் இன்று நகரம் முழுக்க வியாபித் திருக்கிறது. 


இட நெருக்கடி, தனியாக இடம் வாங்கி கட்ட முடியாத பொருளாதார சூழ்நிலை அடுக்குமாடி குடியிருப்பை நோக்கி ஓட வைக் கின்றன. 

பெரும் பாலான நடுத்தர வர்க்கத் தினரின் கனவு சொந்த மாக ப்ளாட் வாங்குவது தான்.

அப்படி இப்படி அடித்து பிடித்து இருப்பதை முன்பணமாக போட்டு, மீதியை லோன் வாங்கி ஒரு ப்ளாட் வாங்கி விட்டால் போதும் நிம்மதி என்று இருப்ப வர்கள் நடுத்தர வர்க்கத் தினர் தான். 

அடுக்குமாடி குடியிரு ப்பில் ஒவ்வொரு வாசலும் ஒரு திசையை நோக்கி இருக்கும். இதில் எப்படி வாஸ்து பார்ப்பது. இதற்கும் யோசனை சொல்கிறது வாஸ்து.

எத்தனை மாடியாக இருந் தாலும் சரி... லிப்ட் இல்லாத அடுக்குமாடி குடியிருப்பே கிடையாது. 

லிப்டுக்கு எதிரே வீட்டு வாசல் இருந்தால் மிகவும் சவுகரியம் என்று நினைப் பவர்கள் பலர். ஆனால் வாஸ்து வேறு விதமாக சொல்கிறது.

லிப்டும் வாஸ்துவும்:

அடுக்குமாடி குடியிருப்பு களில் லிப்டுக்கு எதிரில் உள்ள தலைவாசல் கதவுகள் வசிப்ப வர்களின் முன்னேற்ற த்தை தடுக்கும். 

லிப்டின் கதவுகள் அடிக்கடி திறந்து மூடுவதால், இதன் கடுமை யான எதிர்சக்தி, எதிரில் உள்ள வீட்டை தாக்கும் என்று வாஸ்து சொல்கிறது.



பரிகாரம்:

* தலைவாசல் கதவின் மேல் பகுதியில் குவிந்த கண்ணாடியை அமைக்க வும். கதவின் முன்பாக இரண்டு அங்குல அளவில் ஒரு படியை நிறுவவும். 

உள்ளே செல்ப வர்கள் படியின் மீது ஏறி உள்ளே செல்வது போல் இருக்க வேண்டும்.

* கதவுகள் ஒன்றை ஒன்று எதிரெதிரே பார்க்கும் படி அமைத்தி ருந்தால் இரு கதவு களும் ஒரே அளவில் இருப்பது சிறப்பானது. 

ஆனால், இரு கழிவறைகள் இருந்தால், இரு கதவுகள் ஒன்றை யொன்று பார்ப்பது தீமை அளிக்கும்.

* அறை கதவுகள் நேர் எதிரில் இல்லாமல் சற்று விலகி இருந்தால், இதை நிவர்த்தி செய்ய கதவின் எதிரே உள்ள சுவரில் நிலை கண்ணாடியை பொருத் தவும்.

*எதிரெதிரே உள்ள அறைகளில் இரு அறைகளும் ஒரே அளவாக இருந்தால், அந்த அறை களின் கதவுகள் 

ஒரே அளவாகத் தான் இருக்க வேண்டும். ஒன்று சிறிதாகவும், ஒன்று பெரிதாகவும் இருக்க கூடாது.

* எதிரெதிரே உள்ள அறைகளில் ஒரு அறை பெரிதாகவும், ஒரு அறை சிறிதாக வும் இருந்தால், சிறிய அறைக்கு சிறிய கதவும் பெரிய அறைக்கு பெரிய கதவும் பொருத்த வேண்டும்.

* நீளமான நடை பாதை (வராண்டா) இருந்து கடைசியாக அறை இருப்பது உடல் நலத்தை யும், வாழ்க்கை முன்னேற்ற த்தையும் பாதிக்கும். 

எனவே, கதவின் மீது கண்ணாடி அமைக்கவும்.

தெரிந்து கொள்ளுங்கள்

வாங்கும் அனைவரு க்கும் சமச்சீர் ஒப்பந்த விதிமுறை களை உறுதி செய்யு ங்கள் சமச்சீர்
ஒரு அபார்ட்மென்ட் வளாகம் என்பது பல வீடுகளின் தொகுப் பாகும். எனவே சக, உரிமை யாளர்கள் / வாங்கி யவர்கள் 

அனைவரும் சமமான உரிமைகள் மற்றும் பாத்யத்தை களை பெற வேண்டி யிருப்பது இயல்பானது. 

வாங்குப வருடனான தனிப்பட்ட ஒப்பந் தங்கள் மற்றவ ர்களைக் காட்டிலும் அதிக உரிமைகளை அந்த சில தனிநபர்கள் மட்டும் அனுபவிக்க வழி வகுக்கிறது, 

இது குடியிருப்பவர் களிடையே தேவையற்ற உரசல்கள் எழக் காரண மாகலாம். எனவே பில்டர் மற்றும் வாங்கு பவருக் கிடையே யான 

அனைத்து ஒப்பந்தத் திலும் அடங்கி யிருப்பவை ஒரு குறிப்பிட்ட வளாக த்தில் உள்ள அனைவ ருக்குமான 

ஒரே மாதிரி விதிமுறை களாக இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கிய மானது.

தனிப்பட்ட யாருக்கும் எந்தவொரு சிறப்பு உரிமைக ளுடனான பாத்யதையோ அல்லது முன்னு ரிமையோ தரப்பட் டிருக்கக் கூடாது. 

இதற்கும் மேலாக, சிறப்பு மற்றும் முரணான ஒப்பந்தங்கள் சட்டத்திற் குட்படாதது மேலும் சட்டப்படி செல்லாதது. 

வளாகத்தி லுள்ள மற்ற பிற கொள்முதல் செய்தவர் களுடன் மேற் கொள்ளும் அனைத்து ஒப்பந்தங் களிலும் ஒரே மாதிரியான ஒப்பந்த விதிகள் 

சேர்க்கப் படுவதற்கு பில்டரை கட்டுப் படுத்தும் உடன் படிக்கைகள் பில்டரின் ஒப்பந்த த்தில் அடங்கி யிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள் ளுங்கள்
Previous Post Next Post
COMMENTS... plz use me