வீடு அழகிய தோற்றத்துடன் தேவைகளை பூர்த்தி செய்யும் வசதிகளுடன்
அமைய வேண்டும் என்பது அனைவருடைய எதிர் பார்ப்பாக இருக்கும்.
அறைகளை அழகு
சாயலில் வடிக்க வேண்டும் என்ற எண்ணமும் அதிகமாக இருக்கும்.
அதே வேளைவில்
வாஸ்து சாஸ்திரப்படி அறைகளை அமைப்பதற்கும் பலர் ஆர்வம் காட்டுகிறார்கள்.
அதன்படி ஒவ்வொரு அறையும் எந்தந்த திசைகளில் அமைய வேண்டும் என்பது பற்றி
பார்ப்போம்.
* வீட்டில் அமைக்கப்படும் அறைகள் ஒற்றை இலக்கத்தில் அமையுமாறு பார்த்துக்கொள்வது நல்லது.
*
வீட்டில் பூஜை அறை தனியாக அமைப்பதாக இருந்தால் அதை மேற்கு திசையில்
அமைக்க வேண்டும்.
வடமேற்கு, கிழக்கு திசையும் பூஜை அறை அமைப்பதற்கு ஏற்ற
பகுதி ஆகும்.
* அதுபோல் படுக்கை அறையையும் மேற்கு மற்றும் வட கிழக்கு திசைகளில் அமைக்கலாம்.
* குளியல் அறை கிழக்கு திசையில் அமையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
*
வீட்டின் வடக்கு திசை எப்போதும் தூய்மையாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள
வேண்டும்.
அது குபேர திசையாக கருதப் படுகிறது. அதனால் வீட்டில் பணம்
வைக்கும் இடத்தை வடக்கு திசையாக தேர்ந்தெடுக்கலாம்.
* சாப்பிடும் அறையை தெற்கு திசையில் அமைக்கலாம். சமையல் அறை தென்கிழக்கு திசையில் தான் அமைய வேண்டும்.
* கழிவறையை வடமேற்கு திசையில் அமைக்கலாம். வீட்டில் அலுவலக பயன்பாட்டுக்கு தனி அறை அமைப்பதற்கும் வடமேற்கு திசையை தேர்வு செய்யலாம்.
*
தண்ணீர் பயன்பாட்டுக்கு அமைக்கப்படும் ஆள்துளை கிணறு கிழக்கு பகுதியில்
இருப்பது நல்லது.
அது போல் வடகிழக்கு திசையையும் தேர்ந்தெடுக்கலாம். மேற்கு
திசையும் ஆள்குழாய் கிணறு அமைப்பதற்கு பொருத்தமான திசையாகும்.
*
வீட்டின் வாசல்படியை தெற்கில் இருந்து வடக்கு பார்த்து ஏறும்படி அமைப்பது
சிறந்ததாகும்.
அது போல் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஏறும்படியும்
அமைக்கலாம்.
* வீட்டில் இருந்து கழிவுநீர் வடக்கு அல்லது கிழக்கு திசையில் வெளியேறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
Tags:
build