வீட்டை இடிக்காமல் தரைமட்டம் உயர்த்தும் பணி ! #Vellore வீட்டை இடிக்காமல் தரைமட்டம் உயர்த்தும் பணி ! #Vellore - ETbuild

வீட்டை இடிக்காமல் தரைமட்டம் உயர்த்தும் பணி ! #Vellore

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி நேதாஜி நகர் 5வது தெருவை சேர்ந்தவர் கஜேந்திர மன்னன். இவருக்கு சொந்தமாக 800 சதுர அடி பரப்பரளவில் 25 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வீடு உள்ளது. 
வீட்டை இடிக்காமல் தரைமட்டம் உயர்த்தும் பணி
இந்த வீட்டின் தரைமட்டம் சாலையில் இருந்து சில அடிகள் தாழ்வாக இருந்தது. இதனால் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் இருந்து கழிவுநீர் வீட்டிற்குள் செல்லும் நிலை ஏற்பட்டது. 

இதனை சரிசெய்யும் வகையில் கஜேந்திர மன்னன் வீட்டை இடித்து விட்டு, மீண்டும் அதே பகுதியில் தரை மட்டத்தை உயர்த்தி கட்ட எண்ணினார்.
மர மேஜைக்கு மாற்று அக்ரிலிக் மேஜைகள், இருக்கைகள் !
ஆனால் தந்தையின் நினைவாக உள்ள வீட்டை இடிக்க மனமில்லாத அவர், இது குறித்து தனது நண்பர்களிடம் ஆலோசித் துள்ளார்.

அப்போது சென்னையில் இதுசார்ந்து இயங்கும் தனியார் நிறுவனம் குறித்து அவருக்கு தெரிய வந்தது. அதன் பேரில் அந்நிறுவனத்தார் வீட்டை இடிக்காமலேயே ஜாக்கிகள் மூலம் வீட்டின் தரை மட்டத்தை உயர்த்த முன்வந்தனர்.
இதை யடுத்து வீட்டை சுற்றி 2 அடி ஆழம் பள்ளம் தோண்டப்பட்டு, வீட்டின் அடி மட்டத்தில் 200 ஜாக்கிகள் பொருத்தப் பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து வீட்டின் அடி மட்டத்திற்கும், ஜாக்கிகளுக்கு மான இடைவெளி யில் இரும்பு ராடுகள் இணைக்கப் பட்டுள்ளது. இதன் பின்னர் ஜாக்கிகளின் உதவியுடன் வீட்டின் தரைமட்டம் சிறுக, சிறுக உயர்த்தப் பட்டுள்ளது.

தொடர்ந்து 21 நாட்கள் பணி நடைபெற்று வந்த நிலையில், தற்போது 4 அடி உயரம் வரை வீட்டின் தரைமட்டம் உயர்த்தப் பட்டுள்ளது. இதன் சிறப்பம்சம் என்ன வெனில், வீட்டின் சுவர்களில் சிறிய விரிசல் ஏதுமின்றி இந்த பணி நிறைவு செய்யப் பட்டுள்ளது.
Previous Post Next Post
COMMENTS... plz use me