வீடு கட்டுவதில் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை
வேறு. இன்றைக்குள்ள நிலை வேறு.
இன்று வீடு கட்டுபவர்களை விட அடுக்குமாடிக்
குடியிருப்புகள் வாங்குபவர்களே அதிகம்.
இதற்குக் காரணம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் வீட்டு மனைகள், கட்டுமானப் பொருள்கள் ஆகியவற்றின் விலையேற்றம்.
அதுமட்டுமல்ல
இப்போது கட்டுமானத்திற்கு மிக அவசியமான மணல் போன்ற வற்றிற்கு நிலவும்
தட்டுப்பாடும் ஒரு காரணம்.
இன்றைக்குள்ள பரபரப்பான வாழ்க்கையில் இவை
ஒவ்வொன்றிற்கும் அலைந்து திரிந்து வீட்டைக் கட்டப்
பெரும் பாலானவர்களு க்குப் பொறுமை இல்லை.
சொந்த வீட்டின் அவசியம்
இன்றைக்கு
உள்ள இந்த நிலையிலும் தங்களுக்கெனச் சிறிய வீட்டைக் கட்டிக் கொண்டு சிறிய
தோட்டம் அமைத்துச் சந்தோஷமாக வாழ ஆசைப் படுவர்கள் உண்டு.
நகருக்குள்
மனை வாங்க இயலாத காரணத்தால் நகர்ப் பகுதியை விட்டுவிட்டு புறநகர்ப்
பகுதிகளில் சமாளிக்கும் வகையில் வாங்கி கடன் வாங்கி வீடு கட்டுகிறார்கள்.
அடுக்குமாடிக்
குடியிருப்பில் வீடு வாங்கினால் குடிபுகுமுன் மொத்தப் பணத்தையும்
செலுத்தி விட வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.
ஆனால் கட்டப்படும் தனி
வீடுகளில் அது இல்லை.
சிலவற்றை முடிக்க முடியாமல் போனால்
கூட நாளடைவில் முடித்துக் கொள்ளலாம் என்கிற வசதி உள்ளது.
இப்போ தெல்லாம்
வங்கிகளில் வீட்டுக் கடனுக்கு முன்னுரிமை தருகிறார்கள்.
இன்றைய தலைமுறை இளைஞர்கள் குறிப்பாக நடுத்தர வருவா யுள்ளவர்கள் சொந்த வீட்டின் அவசியத்தை நன்குணர்ந்துள்ளனர்.
திருமணத்திற்கு
முன்பே வீடு வாங்குவதில் ஆர்வமாகவும் முனைப்பாகவும் இருக்கிறார்கள்.
திருமண ஜோடியைத் தேடும் விளம்பரங்களில் எல்லா வசதிகளையும் வீட்டு உபயோகப்
பொருள்களையும் கொண்ட
சொந்த வீடு உள்ளது என்பதைப் பெருமையுடன் சொல்வதைப்
பார்க்க முடிகிறது.
இச்சூழ்நிலையில் தனி வீடு
கட்டுபவர்கள் சந்திக்கும் சிரமங்களை முன் கூட்டியே புரிந்து கொண்டு
அதற்கேற்றாற் போல் தீர்மானித்துச் செயல்படுவது நல்லது.
அளைவைக் கூட்ட வேண்டாம்
கட்டப்படும்
வீட்டின் வரைபடம் தயாரிக்கும் போதே பட்ஜெட்டுக்குத் தகுந்தவாறு தயாரிப்பது
அவசியம்.
வீடு கட்ட முற்படும் போது மனதில் எழும் ஆசைகள், கனவுகள் பட்ஜெட்
தொகையை மறக்கடித்து விடும்.
‘வீடு கட்டும்போது
பார்த்துக் கொள்ளலாம்’ ‘அட்ஜெஸ்ட் செய்துவிடலாம்’ ‘சமாளித்து விடலாம்’
என்றெல்லாம் தோன்றும்.
ஆனால் இம்மாதிரி அஜாக்கிரதை வீட்டைக் கட்டி முடிக்க
முடியாமல் திணற வைக்கக்கூடும்.
வரைபடத்தில் உள்ள அளவுகளில் ஓரடி கூட்டினால் நாம் திட்டமிட்ட பட்ஜெட்டில் பெரிய அளாவு துண்டு விழும்.
இதை
இப்போதே நினைவில் கொள்ளலாம். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் வீடு
கட்டினார்.
வானம் தோண்டப்பட்டுக் கிடந்த நிலையில் நண்பரின் மனைவில் வந்து
பார்த்துள்ளார்.
வானம் தோண்டப்பட்ட நிலையில் அறைகள்
சிறியதாகத் தான் தெரியும். ஆனால் கட்டி முடிக்கும் போது தான் அதன் முழு
வடிவத்தை நாம் காண முடியும்.
மனைவிக்கு சமையலறையும் படுக்கையறையும்
சிறியதாக இருப்பாகத் தோன்றியுள்ளது. கணவர்
குறைபட்டுக் கொண்டார்.
நண்பரும் மனைவியின் விருப்பதிற் கிணங்க அறையை
அகலப்படுத்தி யுள்ளார். இரண்டு மூன்று அடிகள்தான் அகலப் படுத்தினார்.
ஆனால்
அவர் திட்ட மிட்டிருந்த பட்ஜெட்டில் 5 லட்சத்திற்மும் மேல் அதிகரித்தது.
காற்று வர வழிசெய்வோம்
வீட்டினுள்
நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டு மானால் வீட்டினுள் காற்று நுழைந்து
வெளியேறும் வகையில் கதவுகளையும், ஜன்னல் களையும் அமைக்க வேண்டும்.
கதவுக்கு
நேராக கதவு, ஜன்னலுக்கு நேராக ஜன்னல் அமைத்தால் காற்றோட்டம் நன்றாக
இருக்கும்.
எல்லா அறைகளிலும் ஜன்னல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள
வேண்டும். வீட்டின் ஆரோக்கியத்திற்கு வெளிச்சமும் காற்றும் அவசியம்
பரணைத் தவிர்ப்போம்
படுக்கையறை
அறைகயின் எல்லாப் பக்கங்களில் பரண் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அதே போல் வரவேற்பறை யிலும் தேவை யில்லாமல் பரண் அமைப்பதைத் தவிர்க்க
வேண்டும்.
தேவையில்லாமல் பரண் அமைக்கும் போது அதில்
தூசிகள் அடையும். ஒட்டடைகள் உருவாகும்.
அது போல பல்லி, கரப்பான்,
ஆகியவற்றின் வசிப்பிடமாக இம்மாதிரியான பரண் ஆகிவிடும்
தளத்தை உயர்த்துவோம்
பொறியாளரின்
முறையான ஆலோசனையைப் பெற்று வீட்டுத் தளத்தின் உயரத்தைப் பத்தடிக்கு மேல்
சற்று உயர்த்தினால் நல்ல காற்றோட்டம் கிடைக்கும்.
கோடைக் காலத்தில் மொட்டை
மாடியிலிருந்து வீட்டினுள் இறங்கும் வெயிலும் தக்கம் சற்றுக் குறைவாக
இருக்கும்.
தென்னை மட்டைகளை மொட்டை மாடி முழுவதும்
இல்லா விட்டாலும் படுக்கையறை, வரவேற்பறைப் பகுதிகளிலும் பரப்பி வைத்தால்
வெயிலின் தாக்கம் பெருமளவு இருக்காது.
தளங்களை மேம்படுத்துவோம்
கூடுமான
வரையில் வழுக்கும் தளங்களை அமைப்பதைத் தவிர்க்க வேண்டும். அப்படியான
வழுக்கும் டைல்களைப் பயன்படுத்து வதைத் தவிர்க்க வேண்டும்.
வீட்டில்
பெரியவர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்குப் புழங்குவதற்கு ஏற்றதாக
இருக்காது.
குளியலை, கழிவறை போன்ற அறைகளில் சொரசொரப்பான டைல்களையே அமைக்க
வேண்டும்.
மின் இணைப்பையும் திட்டமிடலாம்
சமையலறை,
படுக்கையறை, கழிவறை போன்ற அறைகளில் நமது உபயோகத் திற்குத் தகுந்தவாறு
விளக்குகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
மின் சிக்கனம் அவசியம் என்பதால் எல்லா
அறைகளுக்கும் அதிக மின் சக்தியை எடுக்கும் விளக்குகள் பொருத்த வேண்டிய
அவசியம் இல்லை.
மேலும் எங்கெங்கு மின் இணைப்பு
தேவைப்படும் என்பதை முதலிலேயே தீர்மானித்து கட்டிடத்திற்குள்ளே
குழாய்களைப் பதித்து விடுவது நல்லது.
கட்டிடம் கட்டி முடித்த பிறகு குழாய்
இணைப்பிற்காகத் துளையி டுவதைத் தவிர்க்கலாம
கடைசியாகத் சில வார்த்தைகள்
வீட்டின்
கூரையில் விழும் மழை நீரை விரயம் செய்யாத வகையில் எல்லா மழை நீரையும்
நேரடியாக நீரைச் சேமிக்கலாம்.
இல்லை யெனில் பூமிக்குள் இறக்கலாம். அதற்கான
முறையான மழை நீர் சேகரிப்பு நடை முறைகளின் படி அமைக்கலாம்.
மேலும்
வாஸ்து, ஐஸ்வர்யம் என்ற பெயரில் அதிக அளவு செடிகோடிகளை வீட்டிற்குள்
வளர்க்காதீர்கள்
வீட்டிற்குள் பூச்சிகளும் மரவட்டைகளும் கொசுக்களும் தொல்லை
தர ஆரம்பித்து விடும்.
Tags:
build