வீட்டுக் கடன் அபராதமா? அதிக வட்டியா? வீட்டுக் கடன் அபராதமா? அதிக வட்டியா? - ETbuild

வீட்டுக் கடன் அபராதமா? அதிக வட்டியா?

'வீட்டுக் கடனை தவணைக் காலத்துக்கு முன்பே திருப்பிச் செலுத்தினால் (ப்ரீ பேமென்ட்) இனி அபராதம் செலுத்தத் தேவையில்லை என கொள்கை அளவில் முடிவு செய்து விட்டோம். 
வீட்டுக் கடன் அபராதமா?

இதை எப்போது, எப்படி நடைமுறைப் படுத்துவது என கூடிய விரைவில் வங்கிகளுடன் பேசப் போகிறோம்'' என

ரிசர்வ் வங்கியின் கவர்னர் சமீபத்தில் சொல்லி இருப்பது கண்டு வீட்டுக் கடன் வாங்கியவர்கள் சந்தோஷத்தில் மூழ்கி இருக்கிறார்கள். ஆர்.பி.ஐ. கடந்த செப்டம்பரில் ப்ரீ பேமென்ட் அபராதத்தை (ஃப்ளோட்டிங் முறையில்
கடன் வாங்கிய வர்களுக்கு மட்டும்!) ரத்து செய்யும்படி வங்கிகளுக்குச் சொன்னது. ஆனால், அதற்கான அதிகாரப் பூர்வமான உத்தரவு எதையும் பிறப்பிக்க வில்லை. இப்போது, அதுபற்றி இன்னும் தெளிவாக்கி இருக்கிறது.

இந்த அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என தேசிய வீட்டு வசதி நிறுவனம் அதன் கட்டுப் பாட்டின் கீழ்வரும் அனைத்து வீட்டு வசதி நிறுவனங் களுக்கும் அண்மையில் சர்க்குலர் அனுப்பி இருக்கிறது.

ஆனால், 'ப்ரீ பேமென்ட் அபராதக் கட்டணம் ரத்தாகும் நிலையில், வீட்டு வசதி நிறுவனங்கள் கடனுக்கான வட்டியை உயர்த்தும் அபாயமும் இருப்பதாக’ விஷயம் தெரிந்தவர்கள் இப்போது வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்திருக் கிறார்கள்.

''மேலோட்டமாகப் பார்க்கும் போது வீட்டுக் கடனுக்கான ப்ரீ பேமென்ட் அபராதம் ரத்து என்பது வீட்டுக் கடன் வாங்கிய வர்களுக்குச் சாதகமான விஷயம் போல தோன்றும்.

ஆனால், ப்ரீ பேமென்ட் கட்டணத்தை ரத்து செய்வதால், வீட்டு வசதி நிறுவனங் களுக்கு கூடுதல் செலவாவதுடன், ரிஸ்க்கும் அதிகமாக வாய்ப்புண்டு.

வீட்டுக் கடன் கேட்பவர் களுக்கு வீட்டு வசதி நிறுவனங்கள், எங்கிருந்து பணம் வாங்கித் தருகின்றன?

பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட டெபாசிட் மற்றும் தேசிய வீட்டு வசதி வங்கியிட மிருந்து நீண்ட கால அடிப்படையில் வாங்கப்பட்ட கடன் ஆகியவற்றின் மூலம் தான் வீட்டுக் கடனை தருகின்றன.

இப்படி தந்த கடனை வாடிக்கையாளர் திரும்பத் தந்து விட்டார் என்பதற்காக அதை தேசிய வீட்டு வசதி வங்கியிடம் திருப்பித் தர முடியாது. காரணம், அவை நீண்ட கால நோக்கில் வாங்கப்பட்ட கடன்கள்.
மேலும், புதிய வாடிக்கை யாளர்களுக்கும் பழைய வாடிக்கை யாளர்களுக்கும் ஒரே வட்டி விகிதம் என்பதும் வீட்டு வசதி நிறுவனங் களால் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம்.
வீட்டுக் கடன் அதிக வட்டியா?

காரணம், வீட்டு வசதி நிறுவனங்கள் ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு வித வட்டிக்கு கடன் வாங்கி வாடிக்கை யாளர்களுக்கு கடன் கொடுத்திருக்கும்.

அதிக வட்டியில் கடன் வாங்கி இருந்தால் நிச்சயமாக அதிக வட்டிக்குத் தான் கடன் தரமுடியும். ஒரு வேளை குறைந்த வட்டியில் வாங்கி இருந்தால் வட்டியைக் கொஞ்சம் குறைக்கலாம்.
தற்போதைய நிலையில், கடன் சந்தையில் வட்டி குறைந்திருப்ப தால், புதிய வாடிக்கை யாளர்களுக்கு வேண்டுமானால் குறைந்த வட்டியில் கடன் வழங்கலாம். பழைய வாடிக்கையாளர் களுக்கும் வட்டியைக் குறைத்தால் நஷ்டம் தான் ஏற்படும்.

இந்த பிரச்னையை தவிர்க்க, வீட்டுக் கடன் வசதி நிறுவனங்கள், ஃப்ளோட்டிங் முறையில் வட்டியை உயர்த்தி விடும் அபாயமும் உண்டு.

 ஆக, மிகச் சிலரே பயன் பெறும் ஒரு விஷயத்திற்காக (ப்ரீ பேமென்ட் அபராதம் ரத்து) வீட்டுக் கடன் வாங்கிய பலரும் பாதிப்படைய வேண்டுமா? என்பது முக்கியமான கேள்வி.

கடனை முன் கூட்டியே அடைப்பதால் ஏற்படும் ரிஸ்க் மற்றும் இழப்புக்கு தேசிய வீட்டு வசதி வங்கி பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இல்லாத பட்சத்தில் வீட்டு வசதி நிறுவனங்கள் கடனுக்கான வட்டியை உயர்த்துவது தவிர்க்க முடியாததாகி விடும்.... அர்ஜுன் பார்த்தசாரதி
Previous Post Next Post
COMMENTS... plz use me