கோடையில் மின்சாரத்தை சிக்கனப்படுத்த என்ன செய்யலாம் ! கோடையில் மின்சாரத்தை சிக்கனப்படுத்த என்ன செய்யலாம் ! - ETbuild

கோடையில் மின்சாரத்தை சிக்கனப்படுத்த என்ன செய்யலாம் !

கோடையில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருப்பதால், பலரது வீடுகளில் மின்விசிறி எப்போதும் சுற்றிக் கொண்டே இருக்கும். இக்காலத்தில் கடவுளைப் போல மின்சாரத்தை கொண்டாட வேண்டும். 
மின்சாரத்தை சிக்கனப்படுத்த
இல்லா விட்டால், மின் கட்டணம் அதிகரித்து, பின் செலவை அதிகரித்து விடும்.
அறுகம்புல்லின் மருத்துவ குணம் !
ஆகவே கிடைக்கும் சிறிதளவு மின்சாரத்தையும், வீணாக்காமல் எவ்வாறு மிச்சப் படுத்தலாம் என்று மின்சாரத்துறை அதிகாரிகள் கூறும் ஆலோசனை களை பின்பற்றுங்களேன்.

சுவிட்ச் ஆப்
சுவிட்ச் ஆப்
* ஒரு வீட்டின் அனைத்து அறைகளிலும் மின்சார விளக்கை எறிய விடாதீர்கள். எந்த அறைக்கு செல்கிறீர்களோ அப்பொழுது விளக்கை எரிய விடலாம். அதுவரை சுவிட்ச் ஆப் செய்யவும்.

* ஒரு அறை‌யி‌ல் இரு‌ந்து ம‌ற்றொரு அறை‌க்கு செ‌‌ல்லு‌ம் போது, அ‌ந்த அறை‌யி‌ல் இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் பே‌ன், லை‌ட், டி‌வி ஆகியவற்றின் சு‌வி‌ட்களை அணை‌த்து‌ வி‌ட்டு செ‌ல்லு‌ங்க‌ள்.
ஃப்ரி‌ட்‌ஜ்

மி‌க்ஸி, ‌ஃப்ரி‌ட்‌ஜ், அய‌‌ர்‌ன் பா‌க்‌ஸ்,‌ கிரை‌ண்ட‌ர், வா‌‌ஷ‌ி‌ங் மெஷ‌ி‌ன் போ‌ன்ற ‌வீ‌ட்டு உபயோக‌‌ப் பொரு‌ட்க‌ளி‌ன் தேவை இ‌ல்லாத போது. அவ‌ற்‌றி‌ன் ‌பிள‌க்கை ‌பிடு‌ங்‌கி வை‌த்து ‌விடு‌ங்க‌ள் அ‌ல்லது சு‌வி‌ட்‌‌ச் ஆ‌ப் செ‌‌ய்யு‌ங்க‌ள்.


மஞ்சள் ஒளி உமிழும் குண்டு பல்புகளை ஏறக்கட்டுங்கள். மின்சார சிக்கனம் தரும் மின் விளக்குகளை பொருத்துங்கள். 
ஃப்ரி‌ட்‌ஜ்
பகல் நேரத்தில் வெளிச்சம் தரக்கூடியவாறு அறைகளை வடிவமையுங்கள். கோடை காலத்தில் அதிகம் உபயோகப் படுத்தப்படுவது ஃப்ரிட்ஜ் தான்.
மூக்கடைப்பை போக்கும் இயற்கை நிவாரணிகள் !
எனவே ஒ‌வ்வொரு முறை ‌ஃப்ரி‌ட்ஜை ‌திற‌க்கு‌ம் போது‌ம் அதிக அளவில் ‌மி‌ன்சார‌ம் ‌வீணா‌கிறது என்பதை கவனத்தில் கொ‌ள்ளு‌ங்க‌ள். எனவே ஃப்ரி‌ட்ஜை அடி‌க்கடி ‌‌திற‌ந்து மூட வே‌ண்ட‌ம்.

ஏசியில் மின் சிக்கனம்

கோடை காலத்தில் ஏசியின் பயன்பாடு அதிகம் இருக்கும். ஏசி பொருத்தப் பட்டுள்ள அறையில் சூரிய ஒளி புகாதவாறு அடர்த்தியான திரைச் சீலைகளை தொங்க விட வேண்டும்.

தேவையற்ற பொருட்களை ஏசி அறையில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். கண்ணாடி ஜன்னல்கள் நன்கு மூடப்பட்டிருக்க வேண்டும். 
ஏசியில் மின் சிக்கனம்
ஜன்னல், கதவுகளில் ஏதேனும் இடைவெளியோ, துளைகளோ இருந்தால் சரி செய்து விட வேண்டும். குளிர்ச்சி போதுமான அளவு ஏற்பட்ட பிறகு, ஏசியிலுள்ள விசிறியையோ, அறையிலுள்ள ஃபேனையோ பயன்படுத்தலாம்.

பழைய ஏசியெனில் குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸ் செய்ய மறக்க வேண்டாம். 5 ஸ்டார் ரேட்டிங் உள்ள ஏசியை பயன்படுத்துவது ஆற்றல் சேமிப்புக்கு உதவும்.
குழந்தைகளிடம் பேச வேண்டிய விஷயங்கள் - செக்ஸாலஜிஸ்ட் கார்த்தி !
மேற்கூறிய அலோசனை களை பின்பற்றினால் மின்சாரம் சிக்கனம் ஏற்படுவதோடு வீட்டிற்கும், நாட்டிற்கும் பலன் கிடைக்கும். மின்சார சிக்கனத்தினால் பணமும் சேமிக்கப்படும்.
Previous Post Next Post
COMMENTS... plz use me